முதலமைச்சருக்கு 3 விதமான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. 4 மணி நேர தொடர் கண்காணிப்பிற்கு பிறகே முதலமைச்சர் உடல்நிலை குறித்த தகவல்கள் தெரியும். அதிகாலை 4 அல்லது 5 மணிக்கு முதலமைச்சர் உடல்நிலை குறித்த தகவல்கள் தெரியவரும் என நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதை தொடர்ந்து நாளை தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் அண்ணா பல்கலைகழக தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. டிசம்பர் 9ம் தேதி வரை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் நிலமையை கட்டுக்குள் கொண்டு வர காவல்துறை டிஜிபி காவல்துறையின் அனைத்து அதிகாரிகளும் நாளை பணிக்கு வர வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார். ஏற்கவே துணை ராணுவம் வரவழைக்கப்பட்டிருக்கிறது. இன்னும் சற்று நேரத்தில் முதல்வரின் உடல் நிலை குறித்த முழுவிபரமும் ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது theekkathir.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக