சென்னை சாலிகிராமத்தில் துணை நடிகை ஜெயஸ்ரீ தனது வீட்டில் பிணமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
சென்னை சாலிகிராமம் தசரதபுரத்தில் வசித்து வந்தவர் ஜெயஸ்ரீ. துணை நடிகை. அவர் தனது வீட்டில் பிணமாகக் கிடந்ததை போலீசார் இன்று கண்டுபிடித்துள்ளனர்.
அவரது உடலை கைப்பற்றிய போலீசார் அதை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஜெயஸ்ரீ நகைக்காக கொலை செய்யப்பட்டாரா என்று வில்லிவாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அண்மையில் தான் தொலைக்காட்சி நடிகை சபர்ணா சென்னையில் உள்ள தனது வீட்டில் அழுகிய நிலையில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது மரணம் குறித்த காரணமே இன்னும் தெரியாத நிலையில் மற்றொரு நடிகை இறந்து கிடந்தது தெரிய வந்துள்ளது.
நடிகைகள் அடுத்தடுத்து பிணமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவங்கள் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.tamioneindia.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக