உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 50 தினங்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
முதல்வருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. முதல்வரின் உடல்நலம் குறித்து தொடர்ந்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருவதால் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, முதல்வர் ஜெயலலிதாவிற்கு நள்ளிரவில் இதய அறுவை சிகிச்சையின்றி ரத்தநாள அடைப்பை சரிசெய்யக்கூடிய ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
ஆஞ்சியோ சிகிச்சையைத் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா தற்போது தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் காலை 11 மணிக்கு அப்போலோ மருத்துவமனைக்கு வரவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் அதிமுக தொண்டர்களிடையேயும், அப்போலோ மருத்துவமனை வளாகத்திலும் தொடர்ந்து பெரும் பரபரப்பு நிலவிவருகிறது. நன்றி லைவ்டே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக