திங்கள், 21 நவம்பர், 2016

உபி ரயில் விபத்து ..120 பேர் மரணம் .. 200 மேற்பட்டோர் காயம் . 85 பேர் பலத்த காயம்

புக்ராயன்:உத்தர பிரதேச மாநிலத்தில், இந்துார் - பாட்னா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதால் ஏற்பட்ட கோர விபத்தில்,120 பேர் உயிரிழந்த னர்; 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மத்திய பிரதேசம் மாநிலம் இந்துாரில் இருந்து, பீஹார் மாநிலம் பாட்னாவுக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில், உ.பி.,யின் கான்பூருக்கு அருகே உள்ள புக்ராயன் பகுதியில்,நேற்று அதிகாலை, 3:00 மணியளவில் திடீரென தடம் புரண்டது. இதில், ரயிலின், 14 பெட்டிகள் கவிழ்ந்தன. ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக இந்த விபத்து நடந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில் நடந்த மிக கோரமான இந்த ரயில் விபத்தில், 120 பேர் உயிரிழந்தனர்; 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்; அதில்,75 பேர் பலத்த காயமடைந்தனர். காயம டைந்த பலரது நிலைமை மோசமாக இருப்ப தால், உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என, அஞ்சப்படுகிறது.

நகராட்சி ஆணையர் முத்து வெங்கடேஸ்வரன் தற்கொலைக்கு அதிமுக அமைச்சர்தான் காரணம்! லஞ்ச வசூலுக்கு நெருக்கடி கொடுத்தார்~

aruppusuicide
சென்னை: அருப்புக்கோட்டையில் நகராட்சி ஆணையர் முத்து வெங்கடேஸ்வரன் தற்கொலைக்கு தென்மாவட்ட அமைச்சர் ஒருவரின் நெருக்கடியே காரணம்தான் என்று அரசு ஊழியர் சங்கங்கள் குற்றம்சாட்டி வருகின்றன.
திருநெல்வேலியில் கடந்த ஆண்டு வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து கொண்டார். பணிநியமனங்கள் தொடர்பாக அமைச்சராக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி கொடுத்த நெருக்கடியால்தான் வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் எனக் கூறப்பட்டது. இதையடுத்து அக்ரிகிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார். தற்போது இதே போன்ற சம்பவம் அருப்புக்கோட்டையில் நடந்துள்ளதாக அரசு ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஞாயிறு, 20 நவம்பர், 2016

மனோகர் பரிக்கர் :ஏ.கே. 47 வைத்திருப்போர் சுட்டுக் கொல்லப்படுவர்! ஆனா RSS காரய்ங்க மட்டும் வச்சுருக்கலாம்ல?

நாட்டின் நலன் கருதி ஆளும் மத்திய அரசு, பல அதிரடியான முடிவுகளை எடுத்து வருகிறது என்று வெளிப்படையாகக் கூறியிருக்கிறார் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர். கோவாவில் பாரதிய ஜனதா தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய மனோகர் பாரிக்கர், ‘ஏ.கே.47 ரக இயந்திரத் துப்பாக்கியை வைத்திருப்பவர்களை சுட்டு வீழ்த்த பாதுகாப்புப் படைகளிடம் கேட்டுக் கொண்டுள்ளேன். இதை வைத்திருப்பவர்களுக்கு நல்ல நோக்கம் எதுவும் இருக்க முடியாது. அவர்களால் நிச்சயம் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் தீங்கு ஏற்படுவது உறுதி.

நிர்மலா சீதாராமன் :மத்திய அரசு மக்களுக்கு எதிரானதல்ல..



ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் நடவடிக்கை மக்களுக்கு எதிரானது அல்ல. இதுகுறித்து, பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்த காங்கிரஸ் கட்சி முயற்சி செய்துவருகிறது என்று, மத்திய அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து மத்திய வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக பிரதமர் மோடி எடுத்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஆதரவாக இருக்கிறார்கள். அதேநேரம், குறைவான மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் பொதுமக்கள் சில பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறார்கள்.

ரூபாய் நோட்டு தடை விவகாரத்தில் மறு ஆய்வு..மோடி அறிவிப்பு

ரூபாய் நோட்டு தடை விவகாரம் தொடர்பாக மறுஆய்வு செய்து உரிய மாற்றங்களை செய்வேன் என்று மோடி உறுதி அளித்துள்ளார்.
உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பாஜக சார்பில் ஆக்ராவில் இன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது:
கான்பூர் அருகே இந்தூர்-பாட்னா எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு பலர் உயிர்பலியாகி உள்ளனர். அங்கு மீட்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. இந்த விபத்து குறித்து உயர்நிலை விசாரணை நடத்தப்படும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காய்மடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிராத்திக்கிறேன்.

ரகுராம் ராஜன் : நோட்டுக்களை மாற்றுவதால் கறுப்பு பணத்தை ஒழிக்கமுடியாது!

ரகுராம் ராஜன்மும்பை:  கருப்புப் பணத்தை ஒழிக்கும் விதமாகப் பிரதமர் மோடி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைச் செல்லா காகிதம் என அறிவித்த நிலையில். மத்திய அரசு கொடுத்துள்ள 50 நாட்களுக்குள் தங்களிடம் இருக்கும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கி மற்றும் தபால் நிலையங்களில் காத்துக்கிடக்கின்றனர். சரி மோடியின் அறிவிப்பு குறித்து நம் எல்லோருக்கும் பிடித்த முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் என்ன கூறுகிறார்." மத்திய அரசின் இந்த அறிவிப்பு சரியானது எனக்கு நம்பிக்கையில்லை. நாட்டின் கருப்புப் பணத்தைக் களைவதற்காகப் பழைய ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்தில் இருந்து நீக்கிவிட்டு புதிய ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்வது சரியான தேர்வில்லை. இந்தியாவில் இதுவரை அறிவிக்கப்பட்ட இத்தகைய திட்டங்கள் மக்கள் மத்தியில் இருக்கும் கருப்புப் பணத்தை முழுமையாகக் களையும் வகையிலும், எப்படிக் கணக்கில் காட்டப்படாத பணம் கிடைத்தது என்பதற்கான காரணங்களைக் கண்டுபிடிக்கவும் ஏதுவாக இருந்தது.

RSS ஆடிட்டர் குருமூர்த்தி :மக்களின் சிரமம் தவிர்க்க முடியாது..மக்களின் ஆதரவு பாராட்டதக்கது

புதுடில்லி: ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையில் மக்களின் சிரமங்கள் தவிர்க்க முடியாதது என பொருளாதார நிபுணர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.கறுப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுக்கு எதிரான பிரதமர் மோடியின் அதிரடி நடவடிக்கை தொடர்பாக அவர் தொலைகாட்சி ஒன்றிற்கு விரிவான பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் குருமூர்த்தி பேசிய முக்கிய அம்சங்கள்: ரூபாய் நோட்டு ஒழிப்பு விவகாரத்தில் பிரதமர் மோடி எடுத்துள்ள நடவடிக்கை முன்னெப்போதும் எடுக்கப்படாத, மிகுந்த ஆபத்துகள் நிறைந்த அரசியல் முடிவு. இந்த நடவடிக்கை ஊழல், கறுப்பு பணம், கள்ள நோட்டு ஆகியவற்றிற்கு எதிரானது. தேச பாதுகாப்புடன் தொடர்புடையது.இது திடீரென எடுக்கப்பட்ட நடவடிக்கை அல்ல. நீண்ட நாட்கள் திட்டமிடப்பட்டு மிக ரகசியமாக எடுக்கப்பட்டுள்ளது.
சிரமங்கள் தவிர்க்க முடியாதது

500 ரூபாய் நோட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை மத்திய அரசு தளர்த்தலாம்?

ஆக்ரா: ரூபாய் நோட்டு ஒழிப்பு திட்டத்தை மறு ஆய்வு செய்யவுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளது பல்வேறு எதிர்பார்ப்புகளை கிளப்பியுள்ளது. என்ன மாதிரியான மாற்றத்தை மத்திய அரசு கொண்டு வரும் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
நவம்பர் 8ம் தேதி பிரதமர் மோடி வெளியிட்ட அறிவிப்பில் ரூ. 500 மற்றும் 1000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்திருந்தார். இதை மாற்றிக் கொள்ள அவகாசம் அளித்தும் அவர் அறிவிப்பு வெளியிட்டார். அன்று முதல் ஏகப்பட்ட குழப்பங்களை நாட்டு மக்கள் சந்தித்து வருகின்றனர். இதை சரி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கியும், பிற வங்கிகளும் எடுத்து வருகின்றன. என்றாலும் போதிய அளவு 100 ரூபாய், 50 ரூபாய் உள்ளிட்ட ரூபாய் நோட்டுக்கள் இருப்பில் இல்லாததால் பெரும் குழப்பமே நிலவி வருகிறது. இந்த பிரச்சினையை இப்போதைக்கு சரி செய்ய முடியாது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் உண்மை நிலவரத்தை அம்பலப்படுத்தி விட்டார்.

சிதம்பரம் எச்சரிக்கை :இது முதல் கட்டம்தான். இரண்டாம் கட்ட விளைவுகளும் உண்டு!


காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம், மும்பையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
கேள்வி:– ரூபாய் 500 மற்றும் 1000 நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அதிரடி அறிவிப்பால் ஏற்பட்டுள்ள விளைவுகள் குறித்து?
ப.சிதம்பரம் பதில்:– நாட்டில் புழக்கத்தில் இருந்து, 86 சதவீத ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெற்றதால், ஏற்படக்கூடிய முதல் கட்ட விளைவுகளை பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். இந்த முதல் கட்ட விளைவுகள், இப்போது முதல் இன்னும் பல வாரங்கள் தொடரும். அதன்பின்னர் இரண்டாவது கட்ட விளைவுகளை நீங்கள் பார்க்கலாம். மத்திய அரசின் நடவடிக்கையில் எனக்கு எழுந்துள்ள ஒரு சந்தேகம், அவர்கள் அரசில் உள்ள அறிவார்ந்த பொருளாதார நிபுணரான டாக்டர் அரவிந்த் சுப்பிரமணியனை கலந்து ஆலோசிக்கவில்லையோ என்பதுதான். எதிர்மறை விளைவுகள்
கேள்வி:– முதல் கட்ட விளைவுகள், 2–ம் கட்ட விளைவுகள் என சொல்வது? பதில்:– மிகக் குறைந்த பணத்துடன் இப்போது நிறைய மக்கள் வாழுகிற நிலை ஏற்பட்டிருக்கிறது. அவர்களிடம் நுகர்வு இல்லை.

20 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வந்த மருத்துவர் மரணம்: ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி !

கோவையில் 20 ஆண்டுகளுகளுக்கும் மேலாக 20 ரூபாய் கட்டணம் மட்டுமே பெற்று, மருத்துவம் பார்த்து வந்த 'மக்கள் டாக்டர்' என அழைக்கப்படும் பாலசுப்பிரமணியம் காலமானார். அவருக்கு வயது 67. கோவை ராஜகணபதி நகரை சேர்ந்தவர் மருத்துவர் பால சுப்பிரமணியம். இவர் கோவை ஆவாரம்பாளையம் சாலையில் சிறிய அறையில் நோயாளிகளுக்கு வைத்தியம் பார்த்து வந்தார். இவரின் மருத்துவமனையை சுற்றியுள்ள ஆவரம்பாளையம், நேதாஜிநகர், அண்ணாநகர் போன்ற பகுதியில் மட்டுமல்லாமல் மாநகரத்தில் உள்ள பல்வேறு பகுதியில் உள்ள மக்கள் வைத்தியம் பார்க்க வருவார்கள். இரண்டு ரூபாயில் வைத்தியம் பார்த்து வந்த இவர், கடைசியாக கடந்த சில வருடங்களாக 20 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்தார். இதனால் பிற மருத்துவர்களின் எதிர்ப்பை சம்பாதித்தார். மேலும், பல இடையூறுகளை சந்தித்து வந்தார். இருப்பினும் தன்னுடைய மருத்துவ சேவையை காசாக்க விரும்பவில்லை. மேலும், நோயாளிகளுக்கு ஊசி, மருந்து போன்றவற்றை இலவசமாக வழங்குவார். பல நேரங்களில் நோயாளிகளின் ஏழ்மை நிலையறிந்து அந்த இருபது ரூபா கட்டணம் கூட பெறாமல் வைத்தியம் பார்ப்பார். கடந்த இருபது ஆண்டுகளில் ஒருநாள் கூட தனது மருத்துவமனைக்கு வராமல் இருந்ததில்லை.

அரசியலமைப்பு பாதுகாப்பு மாநாடு .. விடுதலை சிறுத்தைகள் புதுவையில் .. திருமாவளவன் அறிவிப்பு!

அம்பேத்கரின் 60-வது நினைவு தினத்தை முன்னிட்டு விசிக சார்பிலான அரசியலமைப்பு பாதுகாப்பு மாநாடு புதுவையில் டிசம்பர் 6-ம் தேதி நடக்கவுள்ளது என்று அக்கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''மத்தியில் ஆளும் பாஜக அரசு கறுப்புப் பணத்தையும் கள்ள நோட்டுகளையும் அழிப்பதாகச் சொல்லிக்கொண்டு ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடிக்கும் ‘பொருளாதார அவசர நிலையை’ நடை முறைப்படுத்திக்கொண்டிருக்கிறது. உழைத்து சம்பாதித்த பணத்தை எடுப்பதற்கே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கின்றனர். இத்தகைய கொடுமை ராணுவ சர்வாதிகார ஆட்சிகளில்கூட நடந்ததில்லை.

2.5 லட்சத்துக்கு மேல் வங்கியில் டெபாசிட் செய்தவர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

டெல்லி: செல்லாத ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை ரூ.2.5 லட்சத்துக்கும் அதிகமாக வங்கிகளில் டெபாசிட் செய்தவர்களுக்கு வருமான வரி துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
பழைய 500,1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததைத் தொடர்ந்து பொது மக்கள் தங்களிடம் உள்ள பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்து வருகின்றனர். டெபாசிட் செய்வதற்கு உச்ச வரம்பு கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளதால் எவ்வளவு வேண்டுமானாலும் டெபாசிட் செய்யலாம். ரூ 2.5 லட்டத்திற்கு மேல் டெபாசிட் செய்வர்கள் கட்டாயம் பான் எண், ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை வங்கியில் சமர்பிக்க வேண்டும். இந்த நிலையில் இரண்டரை லட்சம் ரூபாயைத் தாண்டி யாரெல்லாம் டெபாசிட் செய்கிறார்களோ அவர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி வருகிறது.

உபி ரயில் விபத்து உயிரிழப்பு 45 ஆக உயர்ந்தது.. 14 பேட்டிகள் தடம் புரண்டது

பாட்னா: உத்தரபிரதேச மாநிலம் கான்பூர், புகாரியன் அருகே, பாட்னா-இந்துார் விரைவு ரயில் இன்று (20-11-16) அதிகாலை 3 மணிக்கு தடம் புரண்டதில் உயிரிழப்பு 45 ஆக உயர்ந்தது. மேலும் பலர் காயமடைந்தனர். தடம் புரண்ட 14 பெட்டிகள் 14 பெட்டிகள் தடம் புடண்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
தகவல் அறிந்தமாநில அரசு மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. அவ்வழியாக வரும் மற்ற ரயில்கள் வேறு தடஙகளில் திருப்பி விடப்பட்டுள்ளன.பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. அகிலேஷ் உத்தரவு: தகவல் அறிந்த மாநில முதல்வர் அகிலேஷ், மீட்பு பணிகளை உடனே மேற்கொள்ளுமாறு டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டார்.

மத்திய அரசை கண்டித்து 24-ந்தேதி மனித சங்கிலி போராட்டம் .. கலைஞர் அறிவிப்பு !

சென்னை, மக்கள் அவதிக்கு காரணமான மத்திய அரசை கண்டித்து தி.மு.க. சார்பில் 24-ந்தேதி மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என்று கலைஞர் கருணாநிதி அறிவித்துள்ளார். இது தொடர்பாக தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- மக்கள் அவதி மத்திய பா.ஜ.க. அரசு, “அவசரக்கோலத்தில் அள்ளித்தெளி” என்பதைப் போல எந்தவிதமான முன்னேற்பாடோ, உரிய வகையிலான திட்டமோ இல்லாமல், 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என திடீரென்று 8-11-2016 அன்று மாலையில் செய்த அறிவிப்பின் காரணமாக கடந்த பத்து நாட்களுக்கு மேலாக மக்கள் படும் துன்ப துயரங்களுக்கு அளவே இல்லை. ஏழையெளிய மக்கள், அன்றாடங் காய்ச்சிகள், வேலைகளுக்கும் செல்ல முடியாமல், தங்களிடம் உள்ள ஒரு சில ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக வங்கிகள் முன்னால் பல மணி நேரங்கள் “கியூ”வில் நிற்கின்ற கொடுமைகள் குறைந்தபாடில்லை.

சனி, 19 நவம்பர், 2016

குஜராத் 65 சதவீத அங்கன்வாடிகளில் கழிவறை வசதிகள் இல்லை..30 சதவீத அங்கன்வாடிகளில் சமைப்பதற்கு போதுமான பாத்திரங்களே இல்லை

தான் மிக வேகமாக வளர்ந்து வருவதாக பீற்றிக் கொள்ள கிடைக்கும் எந்த வாய்ப்பையும் குஜராத் தவறவிடுவதில்லை. ஆனால் பிரம்மாண்டமான அதிவிரைவுச் சாலைகள், பெரும் தொழிற்சலைகள் மற்றும் பொருளாதார மண்டலங்களுக்குப் பின்னே, குஜராத்துக்கு வேறு ஒரு முகம் உள்ளது.  தீவிரமான ஊட்டச்சத்து குறைபாடும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியச் சீர்கேடும் குஜராத் எதிர்கொள்ளும் இரண்டு கடுமையான சவால்கள் என்று சமூகப் பொருளாதார குறியீட்டெண்கள் தெரிவிக்கின்றன. பிற மாநிலங்களில் இந்தப் பிரச்சினைகள் பழங்குடியின பிராந்தியங்களுடையதாக உள்ள நிலையில், தலைநகர் அகமதாபாத் உள்ளிட்டு குஜராத் முழுவதும் இப்பிரச்சினைகள் நிலவுகின்றன.
கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட 2014-2015ம் ஆண்டுக்கான சமூகப் பொருளாதார ஆய்வின் படி, குஜராத்தில் உள்ள பானாஸ்கந்தா, பதான், நவ்சாரி, ஜூனாகட் மற்றும் கேடா உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் 46 தாலுக்காக்களில் 1.97 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டாலும், 24,762 குழந்தைகள் தீவிர ஊட்டச்சத்து குறைபாட்டாலும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.

புதிய ரூபாய் தாள்களில் தேவநாகரி எழுத்துக்கு எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மனு..

புதிய ரூ.2000 நோட்டு | பட உதவி: ரிசர்வ் வங்கி இணையதளம்.புதிய 2000, 500 ரூபாய் தாள்களில் தேவநாகரி எழுத்துக்கள் இடம் பெற்றிருப்பதை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பினய் விஸ்வம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் தாள்கள் திரும்பப் பெறப்பட்டு, 2000 ரூபாய் தாள்கள் புதிதாக அச்சடிக்கப்பட்டு புழக்கத்துக்கு வந்துள்ளன. 500 ரூபாய் தாள்களும் புதிதாக அச்சடிக்கப்பட்டுள்ளன.
இவ்விரண்டு ரூபாய் தாள்களின் வடிவமைப்பிலும், வழக்கத்துக்கு மாறாக, தேவநாகரி எழுத்துக்கள் இடம் பெற்றிருப்பது, 343(1)-வது சட்டப் பிரிவுக்கு முரணானது எனக் கூறி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் பினய் விஸ்வம் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.  புதிய நோட்டுக்களில்  குளறுபடிகள் . சில நோட்டுக்களில் சாயம் போய் பல்லிளிக்கிறது ,முக்கியமான எழுத்துக்கள் அழிந்து போய் உள்ளது

பர்வேஸ் முஷராப்: இந்தியாவிலே தமிழர்கள்தான் கல்வியில் சிறந்தவர்கள்


பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் தனியார் தமிழ் தொலைக்காட்சி ஒன்றுக்கு சிறப்பு பேட்டி ஒன்று அளித்தார். அதில் பேசிய அவர் இந்தியாவிலேயே தமிழர்கள் தான் கல்வியில் சிறந்தவர்கள் என பாராட்டியுள்ளார்.பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷராப் மிகவும் வெளிப்படையாக பேசுபவர். அவருடைய வெளிப்படையான கருத்துக்கள் அந்த நாட்டிலேயே பலமுறை சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.இந்நிலையில் தமிழ் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், தென் இந்தியா குறித்து நிறைய படித்திருக்கிறேன். தென் இந்தியர்கள் அவர்களுக்கான வளர்ச்சியை அவர்களே செய்து கொள்கின்றனர்.இந்தியாவின் மற்ற பகுதிகளை விட தென் இந்தியா கல்வியில் சிறந்து விளங்குகிறது.

ரூபாய் விவகாரம் நடிகர்களுக்கு லீக்கானது எப்படி? .. அதுவும் கரெக்டா மோடியின் அறிவிப்புக்கு முன்

சென்னை: கோலிவுட்டின் இளம் நடிகர் ஒருவர் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவிக்கவிருந்த நேரத்தில் ரூ. 40 கோடி கடனை அடைத்துள்ளார்.
கறுப்பு பணத்தை ஒழிக்க 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8ம் தேதி இரவு 8.20 மணிக்கு அறிவிப்பு வெளியிட்டார். மோடியின் அறிவிப்பு சில பெரிய தொழில் அதிபர்கள் மற்றும் முக்கியப் புள்ளிகளுக்கு ஏற்கனவே தெரியும் என்ற பேச்சு உள்ளது. இந்நிலையில் கோலிவுட்டின் இளம் நடிகர் ஒருவர் மோடியின் அறிவிப்பு வெளியாகவிருந்த நேரத்தில் பைனான்சியர் ஒருவரிடம் வாங்கிய ரூ.40 கோடி கடனை திருப்பிக் கொடுத்துள்ளார்.
இதனால் நடிகர் தப்பித்துவிட்டார். அவரிடம் இருந்து கடனை திரும்பப் பெற்ற பைனான்சியருக்கு தான் பல கோடி நஷ்டம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.அன்புதாய்ன்    கொஞ்சம் நஷ்டம் .. கமிஷன் கொடுத்து சமாளிச்சிடுவார்ல?

ரூபாய் நோட்டுக்கள் செல்லாததை அன்னா ஹசாரே வரவேற்றுள்ளார் !



மத்திய அரசு கடந்த 8ஆம் தேதி ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததையடுத்து, பொதுமக்களிடையே இருந்த பணப் புழக்கத்தில் 80 சதவிகிதம் குறைந்தது. இதனால் பொதுமக்கள் தங்கள் அன்றாட தேவைக்குக்கூட கையில் பணமின்றி தவிக்கின்றனர். மத்திய அரசின் இந்த அறிவிப்பு காரணமாக நாடு முழுவதும் மக்கள் கொந்தளிப்படைந்தனர். தங்கள் கையில் வைத்திருந்த பணத்தை மாற்றுவதற்காக வங்கிகளில் குவிந்தனர். வங்கிகளில் போதிய பணம் இல்லாததால், பொதுமக்கள் வங்கிகளின் முன்பும் ஏடிஎம்-களின் முன்பும் மணிக்கணக்கில் காத்திருக்கின்றனர். அவ்வாறு காத்திருந்தாலும், சில்லறை செலவுக்கு பணமில்லாததால் ஏழை-எளியோர், நடுத்தர வர்க்கத்தினர், தினக்கூலி பெறுபவர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் பாதிப்படைந்து வருகின்றனர். மத்திய அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து, பெரும்பாலான எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.

கலவரம் வெடித்து விடுமோ? அஞ்சும் வங்கி ஊழியர்கள் !


தமிழகத்தில் 5 ஆயிரம் கிளைகளும், 2200 ஏடிஎம் மையங்களும், இந்தியா முழுவதும் 85 ஆயிரம் வங்கிக் கிளைகளும் உள்ளன. கறுப்புப் பணத்தையும் கள்ள நோட்டுகளையும் தடுக்க, பிரதமர் மோடி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார்.
புதிய நோட்டுகளான 2000 ரூபாய் நோட்டுகளை இந்தியா முழுவதும் 9ஆம் தேதி இரவு 12 ஆயிரம் கோடிதான் ரிசர்வ் வங்கி கடைசியாக விநியோகம் செய்தது. அதன் பிறகு இன்றுவரை ஒரு பைசாகூட வரவில்லை என்கிறார்கள் வங்கி ஊழியர்கள். செல்லாத நோட்டுகளை வங்கியில் கொடுத்து 4500 ரூபாய் வரை பெற்றுகொள்ளலாம் என்றார்கள். அதன்பிறகு நேற்று முதல் 2000 ரூபாய்க்கு மேல் எடுக்கமுடியாது என்று ஒரு நிபந்தனை விதித்துள்ளது, அதன் பின்னனி என்ன என்று விசாரித்தோம்.
வங்கியில் பணம் இருந்தால்தானே பணம் கொடுக்கமுடியும். இன்று 99 சதவிகிதம் ஏடிஎம்கள் மூடபட்டன. வங்கிகள் பெயரளவில் திறந்து வைத்துள்ளோம் பணம் இல்லாமல், மக்கள் கோபம் அதிகமாகிவருகிறது, இன்னும் இரண்டு நாட்களில் பெரும் கலவரம் வெடித்துவிடுமோ என்ற பயம் உள்ளது, காரணம் ரிசர்வ் வங்கியில் இருந்து பணம் வராததினால், பணம் வரவில்லை என்கிறார்கள் வங்கி ஊழியர்கள். மின்னம்பலம்.காம்

தமிழகத்தின் அனைத்து தொழில்களும் முடங்கின .. நோயை விட மருந்து கொடுமையானது?

சென்னை: கறுப்புப் பணத்தையும் கள்ள நோட்டுகளையும் தடுக்க, பிரதமர் மோடி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். செல்லாததாக அறிவிக்கப்பட்ட 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மக்கள் வங்கிகளில் கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றி வருகிறார்கள். தொடக்கத்தில் ஒரு நபர் ரூ.4 ஆயிரம் வரை மாற்றிக்கொள்ளலாம் என்று இருந்தது, பின்னர் ரூ.4,500 ஆக அதிகரிக்கப்பட்டு, தற்போது ரூ.2 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு தினசரி ஒரு அறிவிப்பு வெளியிடுவதால் மக்களின் கோபம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பணப்புழக்கம் இல்லாமல், தொழில்கள் முடங்கியுள்ளன. 
ஏடிஎம்களில் பணம் இல்லாத காரணத்தால் உச்சநீதிமன்றம் சொன்னது போல இன்னும் இரண்டு நாட்களில் பெரும் கலவரம் வெடித்துவிடுமோ என்ற அச்சம் உருவாகியுள்ளது. 

பதிவாகி உள்ள வாக்குகள்:அரவக்குறிச்சியில் 81.92%, தஞ்சாவூரில் 69.02%, திருப்பரங்குன்றத்தில் 70.19% வாக்குகள், நெல்லித்தோப்பு தொகுதியில் 85.76% வாக்கு

நெல்லித்தோப்பு தொகுதியில் வாக்களிக்க ஆர்வமுடன் நீண்ட வரிசையில் காத்திருக்கும் வாக்காளர்கள் | படம்: எம்.சாம்ராஜ்.தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக் குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரியில் நெல்லித்தோப்பு ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.
வாக்குப்பதிவு சில செய்தித் துளிகள்:
* தமிழகத்தில் 3 தொகுதிகளிலும், புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு தொகுதியிலும் வாக்குப் பதிவு நிறைவடைந்தது. தமிழகத்தில் மொத்தம் 73.71% வாக்கு பதிவானது.
அரவக்குறிச்சியில் 81.92%, தஞ்சாவூரில் 69.02%, திருப்பரங்குன்றத்தில் 70.19% வாக்குகள் பதிவாகி உள்ளன. புதுச்சேரியின் நெல்லித்தோப்பு தொகுதியில் 85.76% வாக்கு பதிவாகியுள்ளது.
* 3 மணி நிலவரப்படி அரவக்குறிச்சியில் 73.29%, தஞ்சாவூரில் 60.54%, திருப்பரங்குன்றத்தில் 62% வாக்குகள் பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் 76% வாக்குப்பதிவாகியுள்ளது.

Hunza - உலகில் அதிக காலம் ஆரோக்கியமாக உயிர்வாழும் மக்கள் .. ஹுன்ஸா மக்ககளுக்கு 130 வயதெல்லாம் சர்வ சாதாரணம்

alakiHealth Secrets Of The Hunzas It is believed that among these people centenarians are a common occurrence, and that it is not unusual for elderly persons to reach the venerable age of 130. It has even been reported that a significant number have survived to the incredible age of 145!
உலகத்திலேயே நம்முடைய உங்களுடைய பரம்பரை தான் அழகும் இளமையும் அதிக ஆண்டுகள் உயிர் வாழும் வரமும் பெற்றிருக்கிறார்கள் என்றால் உங்களுக்கு எவ்வளவு பெருமிதம் பொங்கும்?
ஆனால் அப்படி அத்தனை வரங்களையும் மொத்தமாகப் பெற்று, ஆனால் அதில் எந்த பெருமிதமும் இல்லாமல் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா?
 குன்சா என்பது அங்குள்ள இஸ்லாமியர்களில் ஒரு குறிப்பிட்ட சாதியினரைக் குறிக்கிறது. இந்த இனத்து மக்களை கோட்டீஸ் என்றும் அழைக்கிறார்கள்.
வடக்கு பாகிஸ்தானில் உள்ள கரகோரம் என்னும் மலைப்பிரதேசத்தில் தான் இந்த சாதியினர் வாழ்கின்றனர்.

சுவாதி - ராம்குமார் கொலைகள் ஒவ்வொன்றாக உண்மகள் வெளிவருகின்றன .

ஸ்வாதி கொலை வழக்கில் கழுத்தறுபட்ட நிலையில் கைதாகி, சிறையிலேயே மின்சார வயரைக் கடித்ததாகச் சொல்லப்பட்டு, மர்ம மரணம் அடைந்த ராம்குமாரின் உடல் கடந்த அக்டோபர் 1-ந் தேதி போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டு 40 நாட் களைக் கடந்துவிட்டது. ஆனால், ராயப்பேட்டை பிணவறை வாசலி லேயே காத்திருந்து போஸ்ட்மார்ட்டம் (post mortem ) ரிப்போர்ட்டை வாங்கிச்சென்ற விசாரணை அதி காரியும் மாஜிஸ்திரேட்டுமான தமிழ்ச்செல்வி அந்த ரிப்போர்ட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காததால் மரணத்துக்கான காரணம் மர்மமாகவே தொடர்கிறது. இத்தனை நாட்கள் ஆகியும் பி.எம். ரிப்போர்ட்டை வெளியிடாத மர்மம் என்ன? அந்த ரிப்போர்ட்டில் அப்படி என்னதான் உள்ளது? விசாரிக்க ஆரம்பித்தபோதுதான் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. வாயில் அல்ல… நெஞ்சில்! போஸ்ட்மார்ட்டம் செய்வதற்கு முந்தைய ராம்குமாரின் புகைப்படத்தை நம்மிடம் காண்பித்த போஸ்ட்மார்ட்டம் டீம் டாக்டர் ஒருவர், ""சிறையில் இருந்த ராம்குமார் ஸ்விட்ச் போர்டை உடைத்து மின்சாரக் கம்பியை கடித்து தற்கொலை செய்து கொண்டான் என்றுதான் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. ஆனால், நன்றாக பரிசோதனை செய்து பார்த்துட்டோம். வாயில கரண்ட் ஷாக் அடிச்சதுக்கான காயமோ தடய மோ இல்லை.

பொருளாதாரம் நம்பிக்கை அடிப்படையிலே இயங்குகிறது...


‘பொருளாதார வளர்ச்சி என்பது, ரத்தபந்தம் அல்லாத சமூக உறவுகளில் வெளிப்படும் நம்பிக்கையை அடிப்படையாகவைத்தே இருக்கும்’ என வாதிட்டார் ஃபிரான்சிஸ் ஃபுகுயாமா. மனிதர்கள் பரஸ்பரம் தங்களுக்குள் உருவாக்கிக்கொள்ளும் நம்பிக்கையை அடிப்படையாக வைத்து ஒரு பொருளாதார கோட்பாட்டை முன்வைத்தவர் அவர்.
1996ஆம் ஆண்டு அவர் எழுதி வெளியிட்ட ‘ட்ரஸ்ட்’ என்னும் பெயரிலான ஆய்வில், ‘பொருளாதார வாழ்வை சோதித்துப்பார்ப்பதன்வழியே நாம் கற்கும் முக்கியப் பாடங்களில் ஒன்றாக இருப்பது, ஒரு நாட்டின் நலன். அதன் போட்டித் திறமை, ஒரே ஒரு கலாச்சார குணத்தைவைத்தே நிர்ணயிக்கப்படுகிறது. அது சமூகத்தில் மக்களிடம் படர்ந்திருக்கும் நம்பிக்கையின் அளவு’ என்கிறார் அவர்.