சனி, 19 நவம்பர், 2016

தமிழகத்தின் அனைத்து தொழில்களும் முடங்கின .. நோயை விட மருந்து கொடுமையானது?

சென்னை: கறுப்புப் பணத்தையும் கள்ள நோட்டுகளையும் தடுக்க, பிரதமர் மோடி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். செல்லாததாக அறிவிக்கப்பட்ட 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மக்கள் வங்கிகளில் கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றி வருகிறார்கள். தொடக்கத்தில் ஒரு நபர் ரூ.4 ஆயிரம் வரை மாற்றிக்கொள்ளலாம் என்று இருந்தது, பின்னர் ரூ.4,500 ஆக அதிகரிக்கப்பட்டு, தற்போது ரூ.2 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு தினசரி ஒரு அறிவிப்பு வெளியிடுவதால் மக்களின் கோபம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பணப்புழக்கம் இல்லாமல், தொழில்கள் முடங்கியுள்ளன. 
ஏடிஎம்களில் பணம் இல்லாத காரணத்தால் உச்சநீதிமன்றம் சொன்னது போல இன்னும் இரண்டு நாட்களில் பெரும் கலவரம் வெடித்துவிடுமோ என்ற அச்சம் உருவாகியுள்ளது. 
 
ஏடிஎம்களை நோக்கி ஓட்டம் ஏடிஎம்களை நோக்கி ஓட்டம் நவம்பர் 8ம் தேதி இரவில் மோடி அறிவித்தார். அந்த நிமிடத்திலேயே அனைவரும் அருகில் இருந்த ஏடிஎம்களை நோக்கி படையெடுத்தனர். 100 ரூபாய் தாள்களை மட்டும் எடுத்தனர். நள்ளிரவு வரை பலரும் தூங்காமல் தவித்தனர். தங்கத்தில் முதலீடு தங்கத்தில் முதலீடு ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிப்பு வெளியான சில நிமிஷங்களில் மக்கள் தங்கள் கைகளில் வைத்திருந்த நோட்டுகளை தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர். இதன் காரணமாக, அன்றைய தினம் நள்ளிரவு 12 மணி வரை நகைக்கடைகளில் விற்பனை நடைபெற்றது. ஒரே நாள் இரவில் 600 சதவீதம் விற்பனை அதிகரித்தது. 
திணறிய வங்கிகள் திணறிய வங்கிகள் நவம்பர் 9ம் தேதி நாடு முழுவதும் அனைத்து வங்கிகளும் விடுமுறை விடப்பட்டன. ஏடிஎம்களும் மூடப்பட்டன. நவம்பர் 10ம் தேதி வங்கிகள் திறக்கப்பட்டன. நாடு முழுவதும் மக்கள் வங்கிகளின் முன் திரண்டனர். சில வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு கூட பணம் கொடுக்க முடியாமல் ஊழியர்கள் திணறினார்கள். நீண்ட வரிசை நீண்ட வரிசை அனைத்து வங்கிகளிலும் நீண்ட வரிசையில் மக்கள் கால் கடுக்க காத்திருந்து பணத்தை மாற்றிச் செல்கின்றனர். 
பல அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி பலமுறை பணத்தை மாற்றினர். அதிகமாக பணம் வைத்திருப்பவர்கள் வாடகைக்கு ஆள் பிடித்து கூட பணத்தை மாற்ற அனுப்பி வைத்தனர். விரலில் மை விரலில் மை ஒருவரே பலமுறை ரூபாய் நோட்டுகளை மாற்றுவதை தடுக்கும் வகையில், விரலில் அடையாள மை வைக்கும் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. வங்கிகள் முன்பு நேற்று பொதுமக்கள் காலை முதலே குவிந்தனர். முதலில் வந்த சிலருக்கு மட்டுமே பணம் கொடுக்க முடிந்தது. சிறிது நேரத்திலேயே பல வங்கிகளில் புதிய ரூபாய் நோட்டுகள் காலியாகிவிட்டன
 
. பணம் மாற்றம் பணம் மாற்றம் சென்னை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றும் பணிகள் முடங்கிப்போனது. பல வங்கிகளில் ‘பணம் இருப்பு இல்லை, டெபாசிட் மட்டும் செய்யலாம் என்ற அறிவிப்பு தொங்கவிடப்பட்டு இருந்தது. சில வங்கிகளில் விரலில் வைப்பதற்கு அடையாள மை இல்லாததால் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாது என்று கூறினர். மக்கள் ஏமாற்றம் மக்கள் ஏமாற்றம் பல வங்கிகளில் பணம் காலியானது. இதனால் 12வது நாளான இன்று மூத்த குடிமக்களுக்கு மட்டுமே பணம் தரப்படுகிறது. 
 
ரிசர்வ் வங்கியில் இருந்து பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளுக்கு ரூபாய் நோட்டுகளை அனுப்புவதில் ஏற்பட்டுள்ள சிக்கலே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. தவிக்கும் வங்கி ஊழியர்கள் தவிக்கும் வங்கி ஊழியர்கள் பணத்தட்டுப்பாடு காரணமாக ரிசர்வ் வங்கி நெடுங்காலமாக பயன்படுத்தாமல் வைத்திருந்த பழைய, கசங்கிப்போன 100, 50 ரூபாய் நோட்டுகளை மீண்டும் புழக்கத்தில் விட்டுள்ளது. பயன்படுத்த தகுதியற்றது என்று ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த கோடிக்கணக்கான மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் மீண்டும் வங்கிகளுக்கு வந்துள்ளன. 
துர்நாற்றம் துர்நாற்றம் அந்த நோட்டுகளிலிருந்து வீசும் துர்நாற்றத்தால் வங்கி ஊழியர்கள் திணறி வருகிறார்கள். சில ஊழியர்கள் முகத்திரை அணிந்தபடி வேலை பார்த்தனர். 
 
கடந்த 10 நாட்களாக இடைவிடாமல் வங்கி ஊழியர்கள் செய்யும் பணியால் பலரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். முடங்கிய தொழில்கள் முடங்கிய தொழில்கள் பழைய ரூபாய் நோட்டு தட்டுப்பாடு காரணமாக கோவையில் தொழில்கள் கடும் பாதிக்கப்பட்டுள்ளது. 50 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை தொழில்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக தொழில் வர்த்தக சங்கம் வேதனை தெரிவித்துள்ளது. 
 
நகை தொழிற்சாலைகள் நகை தொழிற்சாலைகள் நாட்டில் பணப் புழக்கம் குறைந்த காரணத்தால், தங்க நகைகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன தங்கத்தின் விற்பனையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், விற்பனை சகஜ நிலைக்குத் திரும்ப 6 மாதங்கள் பிடிக்கும் என்று விற்பனையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். ஊதியம் கொடுப்பதில் சிக்கல் ஊதியம் கொடுப்பதில் சிக்கல் தங்கத்தின் விற்பனை தொடர்ந்து வீழ்ச்சியடைந்தால், அதிகபட்சம் இன்னும் 2 மாதங்களுக்கு மட்டுமே தங்கநகைக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மாத ஊதியம் வழங்க முடியும் என்று விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். 
 
காய்கறி சந்தைகள் காய்கறி சந்தைகள் கோயம்பேடு வணிக வளாகத்தில் காய்கறிகள், பழங்கள், மலர்கள் விற்பனை வெகுவாக சரிந்துள்ளது. சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கும் சம்பளம் பணம் பட்டுவாடா செய்வதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர். சிறு கடைகள் மூடல் சிறு கடைகள் மூடல் சில்லறை நோட்டு தட்டுப்பாடு காரணமாக சிறு ஹோட்டல்களில் விற்பனை பாதித்துள்ளது. இதனால் அம்மா உணவகங்களை பலரும் நாடி வருகின்றனர். பணத்தட்டுப்பாடு என்றைக்கு சரியாகும் என்று ஏழை மற்றும் நடுத்தர மக்கள் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர்
/tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை: