சனி, 19 நவம்பர், 2016

பதிவாகி உள்ள வாக்குகள்:அரவக்குறிச்சியில் 81.92%, தஞ்சாவூரில் 69.02%, திருப்பரங்குன்றத்தில் 70.19% வாக்குகள், நெல்லித்தோப்பு தொகுதியில் 85.76% வாக்கு

நெல்லித்தோப்பு தொகுதியில் வாக்களிக்க ஆர்வமுடன் நீண்ட வரிசையில் காத்திருக்கும் வாக்காளர்கள் | படம்: எம்.சாம்ராஜ்.தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக் குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரியில் நெல்லித்தோப்பு ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.
வாக்குப்பதிவு சில செய்தித் துளிகள்:
* தமிழகத்தில் 3 தொகுதிகளிலும், புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு தொகுதியிலும் வாக்குப் பதிவு நிறைவடைந்தது. தமிழகத்தில் மொத்தம் 73.71% வாக்கு பதிவானது.
அரவக்குறிச்சியில் 81.92%, தஞ்சாவூரில் 69.02%, திருப்பரங்குன்றத்தில் 70.19% வாக்குகள் பதிவாகி உள்ளன. புதுச்சேரியின் நெல்லித்தோப்பு தொகுதியில் 85.76% வாக்கு பதிவாகியுள்ளது.
* 3 மணி நிலவரப்படி அரவக்குறிச்சியில் 73.29%, தஞ்சாவூரில் 60.54%, திருப்பரங்குன்றத்தில் 62% வாக்குகள் பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் 76% வாக்குப்பதிவாகியுள்ளது.
* புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாகக் கூறி அதிமுக வேட்பாளர் ஓம் சக்தி சேகர் தலைமையிலான அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
* இந்திய தேர்தல் ஆணையம் சர்வீஸ் வாக்காளர்களுக்கு (ராணுவம் மற்றும் துணை ராணு வத்தில் பணியாற்றுபவர்கள்) மின்னஞ்சல் மூலமாக வாக்குச் சீட்டை அனுப்பும் ஆன்லைன் வாக்குப்பதிவு முறையை நாட்டிலேயே முதல்முறையாக நெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் அறிமுகம் செய்துள்ளது.
* மதியம் 1 மணி நிலவரப்படி அரவக்குறிச்சியில் 61.98%, தஞ்சாவூரில் 50.05%, திருப்பரங்குன்றத்தில் 52.29% வாக்குகள் பதிவாகியுள்ளது.
* காலை 11 மணி நிலவரப்படி அரவக்குறிச்சியில் 43.10%, தஞ்சாவூரில் 34.21%, திருப்பரங்குன்றத்தில் 36.01% வாக்குகள் பதிவாகின.
* காலை 9 மணி நிலவரப்படி திருப்பரங்குன்றம் தொகுதியில் 15% வாக்குப்பதிவானது, அரவக்குறிச்சியில் 21%, தஞ்சையில் 15%, நெலித்தோப்பில் 15% வாக்குப்பதிவானது.
* நெல்லித்தோப்பு சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவேன் என நாராயணசாமி நம்பிக்கை தெரிவித்தார்.
* அரவக்குறிச்சி மலைக்கோவிலூர் வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் வாக்குப்பதிவு அரை மணி நேரம் தடைபட்டது.
* திருப்பரங்குன்றத்தில் 2 வாக்குச்சாவடிகளில் சரியாக இயங்காத மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக வேறு இயந்திரங்கள் வைக்கப்பட்டன.
* திருப்பரங்குன்றத்தில் 291 வாக்குச்சாவடிகளிலும் எவ்வித தாமதமும் இல்லாமல் குறிப்பிட்ட நேரத்தில் வாக்குப்பதிவு தொடங்கியதாக மாவட்ட ஆட்சியர் வீரராகவ் ராவ் தெரிவித்தார்.
* தஞ்சாவூரில் அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 8 மணி நிலவரப்படி 8% வாக்குபதிவாகியிருந்தது
* அரவக்குறிச்சியில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பள்ளப்பட்டியில் பெருமளவில் முஸ்லிம் மக்கள் வாக்களித்து வருகின்றனர்.
பண விநியோகம் காரணமாக ரத்து:
கடந்த மே மாதம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலின்போது, அதிக அளவில் பணம் விநியோகம் செய்யப்பட்டது தொடர்பாக, தேர்தல் ஆணையத் தால் தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளில் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. 6 மாத இடைவெளிக்குப் பிறகு, தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளுக்கான தேர்தல் இன்று (நவ.19) நடைபெறுகிறது.
தஞ்சாவூர் தொகுதியில் 14 வேட்பாளர்களும், அரவக்குறிச்சி தொகுதியில் 39 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். திருப்பரங் குன்றம் தொகுதி எம்எல்ஏ சீனிவேல் மரணம் அடைந்ததால் அத்தொகு திக்கு நடைபெறும் இடைத் தேர்தலில் 28 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
பாதுகாப்பு:
தஞ்சாவூர் தொகுதியில் 88 வாக்குப்பதிவு மையங்களில், 276 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட் டுள்ளன. இதில், 24 மையங்களில் உள்ள 48 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப் பட்டு, கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் உள்ள 245 வாக்குச் சாவடி மையங்களில் 67 பதற்றமான வையாக கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் ஆயுதம் ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இதுவரை எந்தத் தேர்தலிலும் இல்லாத வகையில், தற்போது அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நுண் பார்வையாளர்கள் நியமிக் கப்பட்டு, வெப் கேமரா மூலம் வாக்குப்பதிவு கண்காணிக்கப்படுகிறது.
ஏதேனும் அசம்பாவித நிகழ்வுகள் ஏற்பட்டால் அந்தப் பகுதிகளுக்கு விரைந்து செல்வ தற்காக மத்திய பாதுகாப்புப் படையினரைக் கொண்ட 13 அதிவிரைவுப் படைகள் ஏற்படுத் தப்பட்டுள்ளன.
இதுதவிர இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 50 அதிரடிப்படை, டிஎஸ்பிக்கள் தலை மையில் 20 அதிரடிப் படையினர் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் தொகுதி யில் 291 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. 1,396 பணியாளர்கள், தேர்தல் பணியில் ஈடுபடுத் தப்பட்டுள்ளனர். பாதுகாப்புப் பணிக்கு 5 துணை ராணுவப் படை யினர், 1,773 போலீஸார் தொகுதி முழுவதும் குவிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லித்தோப்பு
புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏ ராஜினாமா செய்ததால் இடைத்தேர்தல் நடை பெறுகிறது. கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டி யிடாத நாராயணசாமி புதுச்சேரியில் முதல்வரானார். அவர் இதில் போட்டியிடுகிறார்.
தொகுதியில் உள்ள 26 வாக்குச்சாவடிகளும் பதற்றமானவை என அறிவிக் கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. காங்கிரஸ் கட்சி சார்பில் முதல்வர் வி.நாராயணசாமி, அதிமுக சார்பில் ஓம்சக்திசேகர், ஐக்கிய ஜனதா தளம் சார்பில் ஆறுமுகம் (எ) சரவணனும், நாம் தமிழர் கட்சி சார்பில் ரவி அண்ணாமலை மற்றும் 4 சுயேச்சைகள் என 8 பேர் களத்தில் உள்ளனர்.  tamilthehindu.com

கருத்துகள் இல்லை: