சனி, 19 நவம்பர், 2016

புதிய ரூபாய் தாள்களில் தேவநாகரி எழுத்துக்கு எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மனு..

புதிய ரூ.2000 நோட்டு | பட உதவி: ரிசர்வ் வங்கி இணையதளம்.புதிய 2000, 500 ரூபாய் தாள்களில் தேவநாகரி எழுத்துக்கள் இடம் பெற்றிருப்பதை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பினய் விஸ்வம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் தாள்கள் திரும்பப் பெறப்பட்டு, 2000 ரூபாய் தாள்கள் புதிதாக அச்சடிக்கப்பட்டு புழக்கத்துக்கு வந்துள்ளன. 500 ரூபாய் தாள்களும் புதிதாக அச்சடிக்கப்பட்டுள்ளன.
இவ்விரண்டு ரூபாய் தாள்களின் வடிவமைப்பிலும், வழக்கத்துக்கு மாறாக, தேவநாகரி எழுத்துக்கள் இடம் பெற்றிருப்பது, 343(1)-வது சட்டப் பிரிவுக்கு முரணானது எனக் கூறி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் பினய் விஸ்வம் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.  புதிய நோட்டுக்களில்  குளறுபடிகள் . சில நோட்டுக்களில் சாயம் போய் பல்லிளிக்கிறது ,முக்கியமான எழுத்துக்கள் அழிந்து போய் உள்ளது
அதில், ‘ரூபாய் நோட்டு என்பது, ஒரு நாட்டின் பொருளாதாரத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. சர்வதேச அளவில் புரிந்துகொள்ளக் கூடிய வடிவில் தான் இதில் எழுத்துக்கள் அமைய வேண்டும்.
‘புதிய 2000 ரூபாய் தாள் தண்ணீர் பட்டால் நிறம் இழப்பதாகவும், மற்ற நாடுகளின் கரன்சியைப் போலவே தோற்றமளிப்பதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. எல்லாவற்றையும் விட, அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணாக புதிய ரூபாய் தாள்களில் தேவநாகரி எழுத்து இடம்பெற்றிருக்கிறது.’ எனக் கூறப்பட்டுள்ளது.
500, 1000 ரூபாய் தாள்கள் திரும்பப்பெறப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மற்ற மனுக்களுடன் சேர்த்து, இம்மனுவை உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது. இம்மாதம் 25-ம் தேதி இம்மனுக்கள் விசாரணைக்கு வரும். tamilthehindu.com

கருத்துகள் இல்லை: