டெல்லி:
செல்லாத ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை ரூ.2.5 லட்சத்துக்கும் அதிகமாக
வங்கிகளில் டெபாசிட் செய்தவர்களுக்கு வருமான வரி துறை நோட்டீஸ் அனுப்பி
உள்ளது.
பழைய 500,1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததைத் தொடர்ந்து பொது மக்கள் தங்களிடம் உள்ள பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்து வருகின்றனர். டெபாசிட் செய்வதற்கு உச்ச வரம்பு கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளதால் எவ்வளவு வேண்டுமானாலும் டெபாசிட் செய்யலாம். ரூ 2.5 லட்டத்திற்கு மேல் டெபாசிட் செய்வர்கள் கட்டாயம் பான் எண், ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை வங்கியில் சமர்பிக்க வேண்டும். இந்த நிலையில் இரண்டரை லட்சம் ரூபாயைத் தாண்டி யாரெல்லாம் டெபாசிட் செய்கிறார்களோ அவர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி வருகிறது.
தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் பெயரில் 2.5லட்சம் ரூபாய்க்கு மேல் 10ம் தேதிக்கு பிறகு டெபாசிட் செய்யப்பட்டிருந்தால் அவர்களுக்கு வருமான வரி சட்டம் 133(6) பிரிவின் கீழ் நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.
நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் வசிக்கும் ஏராளமானோருக்கு இந்த நோட்டீசுகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. அந்த நோட்டீசில் எந்த தேதியில் எவ்வளவு பழைய ரூபாய் நோட்டுகள் செலுத்தப்பட்டது, அதற்கான ஆதார ஆவணங்கள், புத்தக கணக்குகள் ஆகியவை குறித்தும் தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கிறது.tamiloneindia.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக