செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

காவல்நிலைய விசாரணையில் கீழக்கரை இளைஞர் படுகொலை: மமக கண்டனம்

தமிழகத்தில் தொடர்ந்து காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுபவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டு அதன்விளைவாக அவர்கள் மரணமடையும் காவல்பிடி மரணங்கள் தற்போது அதிகரித்து வருகின்றன. இந்த வரிசையில் நேற்று இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகில் உள்ள மாயாகுளம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் சேக் அலாவுதீன் கொல்லப்பட்டுள்ளார்” என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“சேக் அலாவுதீன், திருட்டுக் குற்றச் சம்பவத்திற்காக கடந்த 2.8.2016 அன்று ஏர்வாடி காவல்நிலைய அதிகாரிகளால்  காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். அவர் காவல்துறையினரிடமிருந்து தப்பி ஓடும்போது திருப்புலானி அருகிலுள்ள பாலத்திலிருந்து தவறிவிழுந்து மரணமடைந்ததாகக் கூறி காவல்துறை இக்கொலையை மறைக்க முயற்சித்துள்ளது.

தெலுங்கு கன்னடம் மலையாளம் ஓடியா மொழிகளையும் செம்மொழி ஆக்கிய ஆரிய சதி! தமிழ் மட்டும்தான் செம்மொழி .... பொறுக்கல்ல?

மொழிகளில் தமிழ் மற்றும் சமஸ்கிருதம் அல்லாத தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா ஆகிய மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கியதை எதிர்த்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் காந்தி, பொதுநல மனு ஒன்றை அளித்திருந்தார். இதுகுறித்து அவர், “உலகம் முழுவதும் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட மொழிகள் இருக்கின்றன. இதில் கிரேக்கம், லத்தீன், ஹீப்ரூ, தமிழ், சமஸ்கிருதம், சீனம் ஆகிய மொழிகளுக்கு மட்டுமே சிறப்புண்டு. காரணம், இவை இலக்கிய இலக்கண தகுதிகளோடு ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது. ஆனால், சில நூற்றாண்டு பழமையும் இலக்கண இலக்கிய தொன்மையற்ற கன்னட, மலையாள, தெலுங்கு, மற்றும் ஒடியா மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்தை வாரி வழங்கியுள்ளது மத்திய அரசு. இதனை ரத்து செய்ய வேண்டும் என்றே இந்த வழக்கை தொடர்ந்தேன்” என்கிறார் வழக்கறிஞர். இந்த மனுவை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கவுல் மற்றும் நீதிபதி மகாதேவன் ஆகியோர் அடங்கிய முதல் டிவிசன் பெஞ்ச் விசாரித்தது. “செம்மொழி அந்தஸ்து விவகாரத்தில் மத்திய அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. இதில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம்” என்று நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

திங்கள், 8 ஆகஸ்ட், 2016

சசிகலா புஷ்பா மீது 7 கொலை குற்றங்கள் , குடும்பத்தினர் மீது பாலியல் பலாத்காரம், மணல் திருட்டு ! .... அப்ப கஞ்சா கேசு?

சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா எம்.பி மீது அடுக்கடுக்கான புகார்கள் குவிந்து வருவதால் விரைவில் அவர் கைது செய்யப்படலாம் என தகவல்கள் உலா வருகின்றன. அதோடு, இன்று சசிகலா புஷ்பா மற்றும் அவரது குடும்பத்தார் சேர்ந்து 7 கொலைகள் செய்ததாகவும் பேஸ்புக்கில் செய்தி பரவி வருகிறது.
முதல்வர் ஜெயலலிதா மீது சசிகலா புஷ்பா எம்.பி. பகிரங்கமாக ராஜ்யசபாவில் புகார் கூறியதைத் தொடர்ந்து தற்போது சசிகலா புஷ்பா மற்றும் குடும்பத்தினர் மீது சரமாரியாக புகார்கள் கிளம்பி வருகின்றன. முதலில் அவரது கணவர் மீது பண மோசடி புகார் எழுந்தது. இதையடுத்து கணவர் லிங்கேஸ்வர திலகனும், அவரது மகனும் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர்.
இந்த நிலையில் சசிகலா புஷ்பாவின் கணவர் மற்றும் மகன் மீது இன்று அவர்களது வீட்டில் வேலை பார்த்த பானுமதி என்ற பெண்ணும் அவரது சகோதரி ஜான்சிராணி என்பவரும் தூத்துக்குடி எஸ்.பியிடம் பாலியல் புகார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.    என்னாமோ அசிட் அடிக்காதவரைக்கும் புண்ணியம்னு நெனைச்சுக்குங்க.... 

புதிய கல்விக்கொள்கை: கார்ப்பரேட்- வர்ணாசிரம கள்ளக்காதலுக்கு பிறந்த பிள்ளை

thetimestamil.com :ஊரில் பெரும்பான்மையோர் நோயுற்றிருக்கையில் அந்த
ஊருக்கு ஒரு போலி மருத்துவர் வந்தால் என்ன நடக்கும் என யோசித்திருக்கிறீர்களா? அது நோயைக்காட்டிலும் ஆபத்தானது என்கிறீர்களா… சற்றேறக்குறைய அதே நிலையில்தான் இப்போது கல்விச்சூழல் இருக்கிறது. சமீப காலங்களில் பல பெற்றோர்களுடனும் மாணவர்களுடனும் உரையாட நேர்கிறது. அப்போதெல்லாம் எழும் அச்சம் நமது கல்விசூழல் குறித்தாகவே இருக்கும். ஆனால் அதைவிடவும் பெரிய பயம் பாஜக அரசு புதிய கல்விக்கொள்கைக்கான வரைவு அறிக்கையை வெளியிட்ட போது எழுந்தது.
கல்வித்துறை மேம்பாடு பற்றி எந்த அறிக்கை எழுதப்பட்டாலும் அதில் சில அம்சங்கள் கட்டாயம் இடம்பெறும். பாடத்திட்டத்தை காலத்துக்கேற்ப மீள்வடிவமைப்பு செய்வது, கல்வி நிலையங்களில் உளவியல் ஆற்றுப்படுத்துனர்களை பணியமர்த்துவது என்பதுபோன்ற மானே தேனே பாணி ஆலோசனைகள் இணைக்கப்படும். அப்படியான பரிந்துரைகள் இந்த வரைவு அறிக்கையிலும் ஏராளமாக இருக்கின்றன.

சசிகலா புஷ்பா மகன் பாலியல் தொந்தரவு அளித்ததாக வீட்டு பணிப்பெண்கள் போலீசில் புகார்


அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்.பி. சசிகலா புஷ்பா மீது அவரது வீட்டில் பணிபுரிந்த ஜான்சி ராணி, பானுமதி ஆகிய 2 இளம்பெண்கள் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் அளித்துள்ளனர். சசிகலா புஷ்பா குடிபோதையில் தங்களை கொடுமைப்படுத்தியதாகவும், சசிகலா புஷ்பாவின் மகன் தங்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகவும் புகாரில் தெரிவித்துள்ளனர். படங்கள்: ராம்குமார்  நக்கீரன்.இன்

சசிகலா புஷ்பாவின் கணவர் மகன் முன்ஜாமீன் மனு தள்ளுபடி.. வழக்கு எதுவும் பதிவில் இல்லை

முன்ஜாமீன் கோரி சசிகலா புஷ்பாவின் கணவர், மகன் தாக்கல் செய்த மனு: முடித்து வைத்து ஐகோர்ட் தள்ளுபடி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்.பி. சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வர திலகம், மகன் பிரதீப். இவர்கள் தங்களுக்கு முன்ஜாமின் கேட்டு கடந்த வியாழக்கிழமை சென்னை ஐகோர்ட்டில் மனு அளித்திருந்தனர். சென்னை அண்ணாநகர் காவல்நிலையத்தில், பெயர் தெரியாத நபர் ஒருவர் தங்களுக்கு எதிராக 3 புகார்கள் கொடுத்திருப்பதாகவும், இந்த புகாரில் தங்களுக்கு முன்ஜாமின் வழங்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர். மனுவை விசாரித்த ஐகோர்ட், இருவரின் மனுவுக்கு பதில் அளிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு இன்று (திங்கள்கிழமை) நீதிபதி வைத்திநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. போலீஸ் தரப்பில், இவர்கள் இரண்டு பேர் மீதும் எந்த வழக்குகளும் பதிவு செய்யப்படவில்லை என்று பதில் அளிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை முடித்து வைப்பதாக கூறி சசிகலா புஷ்பாவின் கணவர் மற்றும் மகன் தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்தார். -ஜீவா பாரதி நக்கீரன்.இன்

சமத்துவபுரம் கண்ட தமிழகத்தில் மீண்டும் ஜாதியம் .....நவீன பிராமணச்சேரிகள்-....


நகரமயமாதலின் விளைவாக நமது நகரங்களில் உள்ள தெருக்களில் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் சார்ந்து வாழ்ந்து வருவது சாதீய அடுக்குகளை உடைக்கும் ஒரு முக்கிய நிகழ்வு என்று ஒரு நண்பர் சொன்னார். இந்தக் கூற்றில் உண்மை உள்ளது; புறந்தள்ளி விட இயலாது. அவர்
குறிப்பாகச் சொன்னது… சென்னை போன்ற நகரங்களில் பிராமணர்கள் அதிகம் வாழும் பகுதியான மயிலை, தி.நகர், மேற்கு மாம்பலம், திருவல்லிக்கேணி பிறகு, அடையாறு போன்ற பகுதிகளில் பிராமணல்லாதோர் பெருமளவு குடி புகுந்திருப்பது பற்றி. இது முற்றிலும் உண்மை.
இதற்கு பல காரணங்கள் உள்ளன. வாழ்வாதாரத்துக்காக கிராம மக்கள் நகரத்துக்கு குடிபெயர்வது, வியாபாரம், பொருளியல் போன்ற காரணங்களினால் நில மதிப்பு கூடுகையில் லாப நோக்கம் கருதி தங்கள் வீடுகளை பில்டர்களுக்கு அல்லது மற்றவர்களுக்கோ விற்பது; குடும்பத்தினர் அயல்நாடுகளுக்குச் சென்று விடுவதால் வீட்டை விற்பது என்று பல காரணங்கள் உள்ளன. ஆனால் சாதி மறுப்பு, சமத்துவச்சேரி உருவாக்கம் இக்காரணங்களில் ஒன்று என நான் கேட்டது கிடையாது.

சாமியார்கள் மீது வீண் அவதூறு செய்வதை இந்து முன்னணி கண்டிக்கிறது...

Hindu Munnani backs Isha Yogaஈஷா யோக மையத்திற்கு எதிராக அவதூறுப் பிரசாரம் மேற்கொள்பவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் செயல்பட்டு வரும் ஈஷா யோக மையம் புகழ்பெற்ற ஆன்மிக மையம் ஆகும். இதற்கு எதிரானவர்கள் ஈஷா மட்டுமின்றி பல்வேறு ஹிந்து ஆன்மிக மையங்க ளுக்கும் எதிராகத் தொடர்ந்து அவதூறு பரப்பி வருகின்றனர். ஹிந்து கோயில்களில் நடக்கும் வழிபாட்டு முறைகளை மாற்றவும் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். பல சேவைகளை மேற்கொண்டு வரும் ஈஷா யோக மையம் போன்ற அமைப்புகளின் செயல்பாடு பாராட்டுக்கு உரியது ஆகும். இந்நிலையில், ஈஷாவில் இரண்டு பெண்கள் ஏழு ஆண்டுகளாகப் பணியாற்றி, அதன்பின் துறவறம் மேற்கொண்டுள்ளதாக அவர்களே தெரிவித்துள்ளனர்.

மலேசியா தமிழர்களின் துயரம் தோய்ந்த வரலாறு... உலகம் மறந்து போன கண்ணீரும் செந்நீரும் !


அ.ரெங்கசாமி : மலேசியத் தமிழர்களின் வரலாற்று மையம்

மலாயா மண்ணில் நம் மூதாதையர்கள் கால் பதித்த போது அவர்கள் கண்ட மலாயா இதுதான்! ஆறு, கடல் ஓரங்களில் நீண்ட சதுப்புநிலக் காடுகளும் உள்பகுதியில் நெடிந்து வளர்ந்து வானளவில் உயர்ந்து நின்ற 'கருங்காடு' எனப்படும் அடர்ந்த காடும் மலாயா முழுமையும் பரந்து கிடந்தது. ஆங்கிலேய நிறுவனங்கள் இக்காடுகளைக்கூறுபோட்டுக்கொண்டு தோட்டங்கள் ஆக்கும் முயற்சியில் இறங்கின. புலி, கரடி, யானை போன்ற காட்டு விலங்குகள்; பாம்பு, பூரான், குளவி போன்ற நச்சுப் பிராணிகள்; வித விதமான கொசுக்கள்; இரத்தம் குடிக்கும் அட்டைப் பூச்சிகள் இக்காட்டுக்குள் மலிந்து கிடந்தன.
>இந்து, அராபி, சீனக் கடல்களில் தமிழ்க் கொடி பறக்க ஆயிரக்கணக்கான கால்வாய்கள் வலம் வந்து கொண்டிருந்தன. முன்னீர் பழந்தீவு பன்னீராயிரத்தையும் ஆண்டு கொண்டிருந்தான் தமிழன். அது தமிழனின் பொற்காலம். < காலம் செய்த கோலத்தால் தமிழினம் அரசிழந்து கவிழ்ந்து போக, தமிழகம் வேற்று நாட்டவரின் கூடார மாகி போனது. பல்லாயிரம் மயில்களுக்கு அப்பால் இருந்து வந்த போர்த்துக்கீசியர்கள், பிரான்சுகாரர்கள், ஆங்கிலேயர்கள் நம் தமிழகத்தைக் கூறுபோட்டுக் கொண்டனர். இம்மூவரில் ஆங்கிலேய ஏகாதிபத்தியமே தமிழினத்தை அடிமைப்படுத்தி அவ்வினத்தின் இரத்தத்தை உறிஞ்சு வதில் முதன்மை பெற்றிருந்தது என்றால் அது மிகையல்ல. "ஆங்கிலேயரின் ஆட்சியில் ஆதவன் மறைவதே இல்லை" என்று ஆணவம் பேசும் அளவுக்கு ஆங்கிலேயப் பேரரசு உலகெங்கும் பரந்து விரிந்து கிடந்த காலக்கட்டம் அது.

மலேசிய தமிழ் சினிமாவுக்கு பூஸ்ட் கொடுத்த கபாலி.. அடுத்த கட்டத்தை நோக்கி.....

rajini kabali
Jagatselliyal.com : கபாலி வருகைக்குப் பிறகு மலேசியத் தமிழ் சினிமாவின் அடுத்தக்கட்டம்? கோலாலம்பூர் – ‘கபாலி’ பேரக் கேட்டாலே சும்மா அதிருதில்ல? ஆமாம்.. அந்த அதிர்வில் சிறிதளவை கடந்த மே 1-ம் தேதி, வெளியான டீசரில் பார்த்துவிட்டோம். இன்னும் முழு அதிர்வை (மெயின்பிக்சர்) நாம் பார்க்கவில்லை. அதற்காக இன்னும் சில வாரங்கள் நாம் காத்திருந்தே ஆக வேண்டும்.
சரி.. கபாலியையும், மலேசியத் தமிழ் சினிமாவையும் ஏன் ஒப்பிட வேண்டும்? இதுவரை எத்தனையோ கோலிவுட் சினிமாக்கள் கடல் கடந்து மலேசியாவிற்கு வந்து படப்பிடிப்புகள் நடத்திச் சென்றிருக்கின்றன. ஏன் ரஜினி நடித்த ‘பிரியா’ படம் கூட மலேசியாவில் தான் படப்பிடிப்புகள் நடத்தப்பட்டிருந்தது.

ராஜஸ்தான் பசு காப்பகத்தில் 500 பசுக்கள் இறந்தன... தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

500 cows starve to death in Rajasthan shelter over 2 weeks of workers' strike
ராஜஸ்தானில் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள பசு பாதுகாப்பு கொட்டகைகளில் இரண்டு வாரங்களில் 500க்கும் மேற்பட்ட மாடுகள் பட்டினியால் மடிந்திருக்கின்றன.
’ஹிங்கோனியா’ என்ற பெயரில் செயல்பட்டுவரும் இந்த பசு பாதுகாப்பு மையத்தில் பணிபுரியும் 250 பணியாளர்கள் சம்பளப் பிரச்சினை காரணமாக மாடுகளை பராமரிக்கும் பணியை ஒரு மாத காலமாக செய்யவில்லை என்று என் டி டீவி செய்தி  வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக தேங்கிப்போன கழிவுகளுடன் மாடுகள் கட்டிய இடத்திலேயே இருந்திருக்கின்றன. மழை காரணமாக சேர்ந்துகொண்ட சகதியும் புதைக்குழி போன்ற மாடுகளை சூழ்ந்துள்ளது.
தன்னார்வலர்கள் சேர்ந்து இந்தக் கொட்டகைகளை சுத்தம் செய்ய சென்றபோது மாடுகள் இறந்த நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது.

அணு விஞ்ஞானிக்கு மரண தண்டனையை நிறைவேற்றிய இரான்

அமெரிக்காவுக்கு முக்கிய தகவல்களை கொடுத்ததாக குற்றஞ்சட்டப்பட்ட அணு விஞ்ஞானிக்கு தான் மரண தண்டனையை நிறைவேற்றி இருப்பதாக இரான் உறுதிப்படுத்தி உள்ளது. ஏழு ஆண்டுகளுக்குமுன், மெக்காவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த ஷாஹ்ராம் அமிரி திடிரென காணாமல் போனார். மீண்டும் அமெரிக்காவில் அவர் தலைகாட்டிய போது, சி.ஐ.ஏ அதிகாரிகளால் தான் கடத்தப்பட்டதாக கூறினார். ஆனால், அங்கிருந்து தப்பி வந்ததாக அவர் கூறினார். பின், இரானுக்கு திரும்பிய போது, நாயகனைப் போன்ற வரவேற்பை பெற்றிருந்தார். பின்னாளில், விசாரணைகளுக்கு அமிரி உட்படுத்தப்பட்டார். தன் சொந்த விருப்பத்தின் பேரிலே அமிரி அமெரிக்க சென்றதாகவும், மேலும் பல பயனுள்ள தகவல்களை தெரிவித்ததாகவும் அமெரிக்க தெரிவித்துள்ளது bbc.com.

இலங்கை தமிழர் மீது ஜாதி சேறு பூசும் ஜெயமோகன்.. மலையக தமிழர்களை பிரிக்க விஷம் விதைக்கும் நரித்தந்திரம்

முகநூல் பதிவு : இலங்கை மலையக தமிழர்களை   ஒரு தாழ்த்தப்பட்ட ஜாதியை குறிக்கும் சொல்லால் இலங்கை தமிழர் குறிப்பிடுவதாக எழுத்தாளர் ஜெயமோகன் தனது இணையத்தில் எழுதியுள்ளார். ஜெயமோகன் அந்த ஜாதிபெயரை குறிப்பிட்டு எழுதிய விதம் இவர் சர்வ சாதாரணமாக அப்படிதான் தாழ்த்தப்பட்ட ஜாதியினரை அழைக்கிறார் என்று ஊகிக்க கூடியதாக இருக்கிறது. ஜெயமோகன் போன்ற ஜாதியவாதிகளிடம் இந்த வெறி இருப்பது தெரிந்ததுதான் .இவர் தனது ஜாதிவெறி சொற்பிரயோகத்தை இலங்கை தமிழர்களின் வாயில் திணிப்பது கடைந்தது எடுத்த கயமைத்தனம் . மலையக மக்களை ஒருபோதும ஜாதி பெயரோடு இலங்கையில் யாரும் குறிப்பிடுவதே இல்லை. மலையக மக்கள் பலஜாதியையும் சேர்ந்தவர்களாகும் . அதுமட்டும் அல்ல ஏராளமான மலையக தமிழர்கள் யாழ்ப்பாண மட்டக்களப்பு தமிழர்களை திருமணம் முடித்து உள்ளார்கள் . இவர்களுக்கு இடையே இதுவரை எந்த விதமான ஜாதி தகராறும் ஏற்பட்டதே இல்லை .
இந்த ஜெயமோகன் எவ்வளவு பெரிய பொய்யன் என்பது இத்தால் சகலரும் அறிந்து கொள்ளவேண்டும். இலங்கை தமிழர்கள் மீது இவ்வளவு காழ்புணர்ச்சி ஜெயமோகனுக்கு ஏன் வந்துள்ளது? அண்மையில் இவர் பல நாடுகளுக்கும் சென்று வந்துள்ளார். இவர் எதிர்பார்த்த வரவேற்பும் டாலர்களும் இவருக்கு கிடைக்காததுதான் காரணம் என்று கருதுகிறேன்

அன்பார்ந்த களவாணிகள் -2- காபரெட் யோகா வியாபாரிகள்... அமிர்தானந்தமாயி, டபுள் ஸ்ரீ, ஜாக்கி வாசு, நித்தி ரஞ்சிதா,அம்மா பகவான்.... ...........

nisaptham.com: இந்த யோகா தினக் கொண்டாட்டத்தின் பின்னணியில் இந்தியாவின் most influential சாமியார்கள் நிச்சயம் இருப்பார்கள் என்று நம்பலாம். அக்‌ஷய திருதியைப் போல இதில் மிகப்பெரிய வணிக நோக்கம் ஒளிந்திருக்கிறது.
 யோகா சொல்லித் தருகிறோம் என்று இறங்கியிருந்தார்கள். ஈஷா யோக மையத்தினர்தான். உண்மையில் ஜக்கியின் ஆட்கள்தான் யோகா சொல்லித் தருகிறார்கள் என்று தெரியாது. ஷூவைக் கழற்றிவிட்டு அந்த இடத்துக்குச் சென்ற போதுதான் தெரிந்தது. ஒரு பெண் - அவளுக்கு முப்பது வயது இருக்கலாம் - முழு சந்நியாசினி ஆகிவிட்டாளாம். ‘நான் சிஸ்கோவில் வேலை செய்தேன்...லட்சக்கணக்கில் சம்பளம்...இப்போ வேலையை விட்டுட்டு சத்குருவின் பாதங்களில் சரணடைந்துவிட்டேன்...ரொம்ப நிம்மதி’ என்றார். இது ஒரு மூளைச் சலவை. இந்த உலகத்தில் வேலை, குடும்பம் உள்ளிட்ட லெளகீக வாழ்க்கை என்பதே சுமை என்பதாகவும் இந்தச் சுமையை இறக்கி வைக்க ஒரு குருவினால் மட்டுமே முடியும் என்கிற வகையில் ஐடிக்காரர்களிடம் காட்டுவதற்கான மாடல்கள் இந்த மாதிரியான சந்நியாசினிகள். ‘ச்சே ஐஐடியில் படிச்சவன் இப்படி மாறியிருக்கான் பாரு..நிச்சயம் ஏதோ இருக்கு’ என்று அடுத்தவர்களையும் யோசிக்கச் செய்கிறார்கள். பக்காவான strategy.

அன்பார்ந்த களவாணிகள் -1- இலவச வைத்திய பரிசோதனை செய்யும் காப்பரெட் களவாணிகள்

nisaptham.comவெள்ளிக்கிழமையானால் அலுவலகத்துக்கு ஒரு கூட்டம் வருகிறது. ஊழியர்கள் நலனுக்காக சில காரியங்களைச் செய்வார்கள் அல்லவா? அப்படியான செயல்பாடு அது. இரண்டு வாரங்களுக்கு முன்பாக ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு ஆகியவற்றை சோதனை செய்வதற்காக ஒரு குழுவினர் வந்திருந்தார்கள். தனியார் மருத்துவமனையின் ஆட்கள் அவர்கள்.  Random Blood Sugar பார்த்தார்கள். எங்கள் ஊரில் பரிசோதித்தால் ஐம்பது ரூபாய். பெங்களூரில் நூற்றியிருபது ரூபாய் வாங்குகிறார்கள். ஆனால் இந்த முகாமில் இலவசமாகச் செய்தார்கள். ‘இவ்வளவு பேருக்கு இலவசமாக பார்க்கிறார்கள். நல்ல மருத்துவமனை’ என்று நினைத்து வரிசையில் நின்றிருந்தேன். வரிசையில் நிற்கும் போதே ஒரு விண்ணப்பத்தைக் கொடுத்து நிரப்பச் சொல்லியிருந்தார்கள். வழக்கமான விவரங்கள்தான். தொடர்பு எண், மின்னஞ்சல் முகவரி, வீட்டில் யாருக்கேனும் சர்க்கரை இருக்கிறதா என்கிற கேள்விகள். அம்மாவுக்கு இருக்கிறது என்று நிரப்பிக் கொடுத்திருந்தேன். அலுவலக பணியாளர்களுக்கு பரிசோதனை முடிந்த பிறகு மற்றவர்களுக்கும் செய்தார்கள்- மற்றவர்கள் என்றால் அலுவலகத்தை துடைத்துப் பெருக்கும் கடைநிலை ஊழியர்கள். ஒரு ஆயாவுக்கு சர்க்கரையின் அளவு முந்நூற்று சொச்சம் இருந்தது. அதைக் கேட்டு மயங்கி வீழ்ந்துவிட்டார். சர்க்கரை என்றால் உயிர்க்கொல்லி என்று நினைத்திருப்பார் போலிருக்கிறது.

திருமாவளவன் :ஸ்டாலின் கலைஞரை விட ஜெயலலிதாவையே முன்மாதிரியாக வைத்து செயல்படுகிறார்

திருமாவளவன் தடாலடி``ஊடக வலிமை இல்லாத எந்த ஒரு கட்சியும் அரசியல் வலிமை பெற முடியாது.  திரைப்படங்கள் வெற்றிகரமாக ஓடவேண்டும் என்றால்கூட, ஊடகம் இப்போது தேவைப்படுகிறது. திரைப்படத்துக்கே அப்படி என்றால், அரசியல் கட்சிகளுக்கு நிச்சயம் ஊடகம் தேவை. அதனால்தான் எங்களுக்கான குரலாக `வெளிச்சம்' என்ற தொலைக்காட்சி சேனலை ஆரம்பித்திருக்கிறோம்'' `தொல்.திருமாவளவன் தி.மு.க-வை நோக்கி நகர்கிறார், மக்கள் நலக் கூட்டணியில் இருந்து விலகுகிறார்' என செய்திகள் வந்துகொண்டிருக்க, அவரோ தங்கள் தொலைக்காட்சிக்கான நிகழ்ச்சித் தயாரிப்புப் பணிகளில் பரபரப்பாக இருக்கிறார்.

``திரைப்படம், ஊடகம் பற்றி நீங்கள் பேசியதால், முதலில் `கபாலி'யில் இருந்தே ஆரம்பிப்போம். படம் பார்த்தீர்களா?''

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2016

239 பயணிகளுடன் காணமல் போன மலேசிய விமானம் MH 370... சதியே ... Malaysia confirms MH370 pilot plotted flight over Indian Ocean

விமானியின் சதி காரணமாகவே மலேசியாவின் எம்.ஹெச்.370 விமானம் திசை மாற்றப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங் நோக்கி 239 பயணிகளுடன் கடந்த 2014 மார்ச், 8-ம் தேதி புறப்பட்டுச் சென்ற மலேசிய விமான நிறுவனத்துக்கு சொந்தமான எம்.ஹெச்.370 விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என நம்பப்படுகிறது.
விபத்து நிகழ்ந்து 2 ஆண்டுகள் உருண்டோடியும், இதுவரை விமானத்தின் சிதைந்த பாகங்கள் கூட கண்டுபிடிக்கப்படவில்லை. அதே சமயம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் உயிரிழந்துவிட்டதாக மலேசிய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்தது.
இந்த சூழலில் எம்.ஹெச்.370 விமானத்தின் விமானி ஜஹாரி அஹமது ஷா சதிச் செய்து விமானத்தை கடத்தி இருப்பதாக அந்நாட்டு அரசு முதல் முறையாக அறிவித்துள்ளது. இது குறித்து மலேசிய விமான போக்குவரத்து துறை அமைச்சர் லியோவ் தியோங் லாய் கூறும்போது,

சமஸ்கிருதத் திணிப்பு எதிர்ப்பு மாநாடு ! புதிய கல்வி கொள்கை - ஒருமைபாட்டுக்கு கேள்வி: தி.க மாநாடு


‘புதிய கல்விக் கொள்கை என்று சொல்லி சமஸ்கிருதத்தையும், இந்துக் கலாச்சாரத்தையும் திணிக்கும் மத்திய பாஜக அரசின் திட்டத்தை எதிர்த்து முறியடிப்போம்’ என்ற சூளுரையோடு தொடங்கியது திராவிடர் கழகத்தின், ‘சமஸ்கிருதத் திணிப்பு எதிர்ப்பு மாநாடு’. சென்னை பெரியார் திடலில் நடந்த இம்மாநாட்டில் மத்திய அரசு கொண்டுவரத் திட்டமிட்டுள்ள புதிய கல்வித்திட்டம் மற்றும் சமஸ்கிருதத் திணிப்பை எதிர்த்து தி.க, திமுக, சிறுபான்மை கட்சியினர் மற்றும் கல்வியாளர்களும், கொள்கையாளர்களும் திரளாகப் பங்கேற்றனர்.
இம்மாநாட்டில் உரையாற்றிய தி.க தலைவர் கி.வீரமணி, “மத்திய அரசு இந்தியைத் திணித்தபோது தந்தை பெரியார் தலைமையில் தமிழகம் திரண்டு எதிர்த்துப் போராடி இந்தி திணிப்பை முறியடித்தது.

திருப்பதிக்கு வழிபட சென்ற 32 பேர் ரேணிகுண்டாவில் கைது: ஆந்திரா புறப்பட்ட தமிழக அரசு வழக்கறிஞர்கள்


சென்னையில் இருந்து கருடாத்ரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் திருப்பதிக்குச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 32 பேரை ஆந்திராவில் ரேணிகுண்டா போலீஸார் வெங்கடாபுரம் என்ற இடத்தில் கைது செய்து சிறையிலடைத்தனர். செம்மரம் வெட்டினர் என்று கைது செய்யப்பட்டவர்கள் மீது ஆந்திர வன பாதுகாப்பு சட்டம் 109, 120, 120-பி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நேற்று திருப்பதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. அவர்களை ஆகஸ்ட் 19ஆம் தேதி வரை சித்தூர் சிறையில் அடைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கைது செய்யப்பட்ட 32 பேரில் 29 பேர் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இதில் படவேடு அடுத்த மேல் செண்பகத்தோப்பு, கீழ் செண்பகத்தோப்பைச் சேர்ந்தவர்கள் மட்டும் 15 பேர். இவர்களை முறைகேடாக கைது செய்துள்ளது ஆந்திர போலீஸ் என்று குற்றச்சாட்டுகள் கைது செய்யப்பட்ட உறவினர்கள் தரப்பில் இருந்து வருகிறது.

சசிகலா புஷ்பா : அடுத்த நடவடிக்கை பற்றி இன்னும் முடிவு எடுக்கவில்லை ....? கட்சிகளிடம் இருந்து அழைப்புகள்.....

முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள நிலையிலும் கூட சற்றும் கலங்காமல் படு தில்லாகத்தான் இருக்கிறாராம் சசிகலா புஷ்பா. அடுத்து என்ன செய்யலாம் என்பது குறித்து அவர் தீவிர ஆலோசனையில் இருப்பதாக கூறப்படுகிறது.
முதல்வர் ஜெயலலிதா என்னை அறைந்தார். சசிகலா என்னை மிரட்டினார் என்று கூறி நாட்டையே அதிர வைத்தவர் சசிகலா புஷ்பா. தற்போது அதிமுகவை விட்டு நீக்கப்பட்டு விட்டாலும் கூட எம்.பியாக வலம் வருகிறார்.
முதல்வர் ஜெயலலிதா மீது டெல்லி போலீஸில் புகார் கொடுத்துள்ள சசிகலா புஷ்பா, நிறுத்தி நிதானமாக அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகிறாராம்
 அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு விட்டதால் இத்தனை காலமாக சசிகலா புஷ்பாவுக்கு பக்க பலமாக இருந்த பல முக்கியப் புள்ளிகள் விலகி விட்டனராம். ஆனாலும் சசிகலா புஷ்பா கலங்கவில்லையாம்.   முன்பை விட இப்போது தெளிவாகி விட்டாராம். தைரியமாக இருக்கிறாராம். நிதானமாக யோசிக்கிறாராம். தன்னிடம் தொடர்ந்து விசுவாசமாக இருக்கும் ஒரு சில நண்பர்கள், குடும்பத்தார், உறவினர்களுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளாராம்.

பிரதமர் மோடி ஆவேசம்: பசு பாதுகாப்பு என்ற பெயரில் வன்முறை ! அடுத்த ஆஸ்காருக்கு ரெடியாயிட்டம்...?

புதுடில்லி:அமெரிக்கா போன்ற நாடுகளில் நடக்கும், 'டவுன்ஹால்' என்ற நிகழ்ச்சியைப் போல், முதல்முறையாக பிரதமர் மோடியும், டில்லியில் இது போன்ற நிகழ்ச்சியில் பங்கேற்று, அசத்தினார். அப்போது, பார்வையாளர்களுடன் கலந்துரையாடிய பிரதமர், ''பசு பாதுகாப்பு என்ற பெயரில், பலர் சமூகவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். இது போன்றவர்களை, மாநில அரசுகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, ஆவேசப்பட்டார். மத்திய அரசின் திட்டங்கள் குறித்து, மக்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் வகையில், 'எனது அரசு' என்ற பொருளில், 'மைகவ்.இன்' (mygov.in) என்ற இணையதளம், இரண்டு ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது. இதன், இரண்டாம் ஆண்டு விழா, டில்லி, இந்திரா விளையாட்டு அரங்க வளாகத்தில் நேற்று மாலை நடந்தது.

பாராளுமன்றத்தில் ஓடி ஒளியும் அதிமுக எம்.பி.,க்கள்! .....100 வீதம் அக்மார்க் அடிமை விசுவாசம்ல...

பார்லிமென்டின் சென்ட்ரல் ஹாலில், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் ஒன்றாக அமர்ந்து, டிபன் சாப்பிடுவது வழக்கம். இவர்கள், பத்திரிகையாளர்களுடன் ஜாலியாக பேசுவர். முதல்வர், ஜெ., மீது, எம்.பி., சசிகலா புஷ்பா, ராஜ்யசபாவில் வெளிப்படையாக புகார் கூறியதை அடுத்து, அ.தி.மு.க., - எம்.பி.,க்களின் நிலையே மாறி விட்டது. இப்போது, அ.தி.மு.க., - எம்.பி.,க் கள் யாரையும், அதிகமாக சென்ட்ரல் ஹாலில் காண்பதில்லை. இந்த விவகாரத்திற்குப் பின், சில வட மாநில பத்திரிகையாளர்கள்அ.தி.மு.க., - எம்.பி.,க்களை இந்த ஹாலில் சந்திக்கச் சென்றனர். இவர்கள் வருவதை பார்த்ததுமே, 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஓடுவதைப் போல, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் ஓடி மறைந்து போகின்றனர். மிகவும் தெரிந்த பத்திரிகையாளர்கள் இவர்களிடம் பேச முற்பட்டால், 'உஷ்' என, வாயில் விரல்
வைத்து, சைகை மொழியில், 'பேசமுடியாது' என, விலகிச் செல்கின்றனர். இதில், இன்னொரு கூத்து என்னெவென்றால், இந்த அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் தங்கள் சக எம்.பி.,க்களுடனும், அதிகமாகப் பேசுவதில்லை; சபையில் அமர்ந்துகொள்கின்றனர். சபை ஒத்தி வைக்கப்பட்டால், அ.தி.மு.க., அலுவலகத்தில் அமர்ந்து கொள்கின்றனர்; காரணம், அலுவலகத்திற்குள் பத்திரிகையாளர்கள் வர முடியாது. அப்படியே வந்தாலும், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் யாரும் பேசுவதும் இல்லை. எல்லாம், 'அம்மா'வின் உத்தரவாம்.தினமலர்.காம்

ஜாக்கியின் இஷாவால் மனநிலை பாதிக்கப்பட்ட சிறுவர்கள்.. மதுரை போலீஸ் ஏட்டு மகேந்திரன் புகார்

மதுரையில் உள்ள போலீஸ் ஏட்டு மகேந்திரனுக்கு இரண்டு மகன்கள். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இவர்கள் இருவரையும் கோவையிலுள்ள ஈஷா மைய பள்ளியில் படிப்பதற்காக சேர்த்துவிட்டார். அங்கே அந்த குழந்தைகளுக்கு படிப்பைவிடவும், பிரம்மச் சரியத்தையே போதித்துள்ளனர். இதனால் அந்த குழந்தைகளுக்கு உணவு கட்டுப்பாடு, வேலைப்பளு இருந்ததால் அந்த குழந்தைகள் பித்துப்பிடித்து போன மனநிலையில் உள்ளனர். அந்த குழந்தைகளுக்கு ஷாக் ட்ரீட்மெண்ட்டும் கொடுத்துள்ளார்கள் ஈஷா மையத்தினர். இதனால் அக்குழந்தைகள் மேலும் பாதிக்கப்பட்டுள்ளனர். நல்லபடியாக படிக்க வேண்டும் அனுப்பிவைக்கப்படும் குழந்தைகளை இப்படி சித்திரவதை செய்து பிரம்மச்சரியத்தை போதிக்கிறது ஈஷா மையம் என்பதை உணர்ந்த மகேந்திரன் , தன் இரு குழந்தைகளையும் மதுரைக்கே அழைத்து வந்துவிட்டார். இந்நிலையில், பாதிக்கப்பட்ட தன் இரு குழந்தைகளையும் அழைத்துச்சென்று இன்று கோவை மாவட்ட ஆட்சியர் முன் வாக்குமூலம் அளித்து, ஈஷா மையத்தின் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தவிருக்கிறார் மகேந்திரன்.

ஜேப்பியாரின் குண்டர்படை மூலம் எம்ஜியார் உருவாக்கிய ரவுடி ராஜ்யத்தைதான் ஜெயாவும் தொடர்கிறார்!

அதிமுகவில் அடிஉதை என்பது புதியதல்ல. அதிமுகவை தொடங்கிய நடிகர் எம்.ஜி.ராமச்சந்திரன், முதல்வரான பின், தன்னை எதிர்க்கும் கட்சியின் இரண்டாம், மூன்றாம் கட்ட தலைவர்களை அடித்து உதைக்க, வெளியே தன்னை எதிர்ப்பவர்களை அடக்கி ஒடுக்க சமீபத்தில் மறைந்த ஜேப்பியார் தலைமையில் பெரும் அடியாள் படையே ராமாவரம் தோட்டத்தில் வைத்திருந்தார் என்பது தமிழக மூத்தோர்கள் அறிந்தது. அதிமுகவை ஜெ கைப்பற்றியது போல. அடி உதை வழக்கத்தையும் ஜெ பின்பற்றுகிறார். முன்னவர்
எதிர்ப்பவர்களை மிரட்டி பணிய வைப்பதோடு சரி. பின்னவர் எதிர்ப்பவர்களின் உயிரை

எடுக்கவும் தயங்கமாட்டார். அவ்வளவு தான் வித்தியாசம்.
அதிமுக தலைமை பற்றி நன்கறிந்த அதே கட்சியை சேர்ந்த நாடாளமன்ற உறுப்பினர் சசிகலாபுஷ்பா, உலகம்மே உற்று நோக்கும் இந்திய நாடாளமன்றத்தில் பேசியபேச்சு, அஇஅதிமுக தலைவி ஜெயலலிதாவின் இமேஜ்சை சரித்துள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான மீடியாக்கள் வேண்டுமானால் நாம் கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு விடும் என எண்ணி செய்தியை திரிக்கலாம். ஆனால், தமிழகத்தை தாண்டி

தீவிரமடையும் வழக்கறிஞர்கள் போராட்டம்

வழக்கறிஞர்களை பழிவாங்கக் கூடிய வகையில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய சட்டத்திருத்தத்தை வாபஸ் பெற வேண்டும்’ என்று கூறி, தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் நீதிமன்றப் புறக்கணிப்பு உள்ளிட்ட போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்தப் போராட்டத்தின் தொடர்ச்சியாக, ஜூலை 25ஆம் தேதி உயர்நீதிமன்ற முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில், தமிழகம் முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.