அதர்வா, ஆனந்தி நடிப்பில் சற்குணம் இயக்கத்தில் நேற்று வெளிவந்த படம் சண்டி வீரன். இப்படத்திற்கு கிராம பகுதிகளில் நல்ல வரவேற்பு இருந்து வருவதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் இப்படத்தை சிங்கப்பூரில் தடை செய்திருப்பதாக கூறப்படுகின்றது. ஏனெனில் ஹீரோ சிங்கப்பூரில் வேலை செய்து விசா முடிந்து அங்கு தங்கியிருந்ததால் போலிஸிடம் பிடிப்பட்டு சிறையில் உள்ளார்.
அங்கு அடி வாங்கி கொண்டு ஊருக்கு வருவது போல் காட்சிகள் இருக்கும். இதனால் சிங்கப்பூர் தண்டனையை இப்படி படத்தில் வெளிப்படையாக காட்டுவதால் படத்தை அங்கு தடை செய்திருப்பதாக கூறப்படுகின்றது. cineulagam.com
சனி, 8 ஆகஸ்ட், 2015
மரண தண்டனையை ஒழிக்க திரிபுரா தீர்மானம்
ஜார்க்கண்ட் 5 பெண்கள் அடித்துகொலை! மந்திரவாதிகள் என்ற சந்தேகத்தில்... 2000வது ஆண்டிலிருந்து 2012 வரை 2 ஆயிரம் பெண்கள் இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர்
A group (of villagers) dragged the women out and beat them to death with
sticks, accusing them of practising witchcraft,” Ranchi deputy police
chief Arun Kumar Singh told AFP through phone.சனிக்கிழமையன்று அதிகாலையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. தலைநகர்
ராஞ்சியிலிருந்து 40 கி.மீ. தூரத்தில் உள்ள மந்தர் என்ற இடத்தில் இந்தச்
சம்பவம் நடைபெற்றுள்ளது.
இரவில் தங்கள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, இந்தப் பெண்கள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அந்தப் பெண்களை விட்டுவிடும்படி கோரியும்,
கற்களாலும் இரும்புக் கம்பிகளாலும் அந்தப் பெண்கள் அடித்துக் கொள்ளப்பட்டனர்.
இரவில் தங்கள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, இந்தப் பெண்கள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அந்தப் பெண்களை விட்டுவிடும்படி கோரியும்,
கற்களாலும் இரும்புக் கம்பிகளாலும் அந்தப் பெண்கள் அடித்துக் கொள்ளப்பட்டனர்.
ஒடிசா போலி சாமியார் சாரதி பாபா கைது
அவரது ஆசிரமத்தில் நடைபெற்ற சோதனையில், ரொக்கப் பணம், ஏராளமான தங்க, வெள்ளி நகைகள், பல முக்கிய ஆவணங்கள்
கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. dinamani.com
பாஜக - அதிமுக ரகசிய /கள்ள உறவு வெளிச்சத்துக்கு வந்தது: ஈவிகேஎஸ் இளங்கோவன்
திருச்சியில் அவர் அளித்த பேட்டியில், பாஜகவுக்கும்,
அதிமுகவுக்கும் இடையே ரகசிய தொடர்பு இருந்தது என கடந்த இரு மாதங்களாக
சொல்லி வந்தேன். தற்போது சென்னை வந்த மோடி, ஜெயலலிதாவை நேரில் சென்று
சந்தித்து வந்திருப்பது இந்த உறவை வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கிறது
என்று தெரிவித்தார்.
மேலும், காங்கிரஸ் கட்சியும் இரண்டொரு நாட்களில் மதுவிலக்கு கோரும் போராட்டத்தை அறிவிக்கும் என்று தெரிவித்துள்ளார்.dinamani.com
உடல்நிலை சரியில்லை என கூறியது நாடகம்: ஜெ. மீது வைகோ தாக்கு
பார்களுக்கு 'குட்பை': 500 'ரெஸ்டோ பார்'களை துவக்க தமிழக அரசு முடிவு
முறைகேட்டை தடுக்க, 'டாஸ்மாக்' கடைகளில் உள்ள பார்களுக்கு பதில், 500
'ரெஸ்டோ பார்'களை துவக்க தமிழக அரசு, முடிவு செய்து உள்ளது.தமிழக அரசின்
டாஸ்மாக் நிறுவனத்திற்கு, 6,800 மதுக்கடைகள் உள்ளன. இதில், 4,000
கடைகளில் அரசு அனுமதியுடனும்; மற்ற கடைகளில் முறைகேடாகவும் பார்கள்
செயல்படுகின்றன. போலி மது விற்பனைஅரசு அனுமதியுடன் செயல்படும் பார்களில்,
போலி மது விற்பனை; உரிமத் தொகை செலுத்தாதது; கூடுதல் விலைக்கு மது,
நொறுக்கு தீனி விற்பனை போன்ற முறைகேடுகள் நடக்கின்றன.இதனால்,
'குடி'மகன்கள், மது அருந்த அதிகம் செலவிடுவதுடன், சமூக பிரச்னைகளும்
ஏற்படுகின்றன. இதையடுத்து, 'டாஸ்மாக்' கடைகளில் உள்ள பார்களை மூடிவிட்டு,
'ரெஸ்டாரென்ட்' என்று அழைக்கப்படும் உணவகங்களில், 'ரெஸ்டோ பார்'களை துவக்க,
அரசு முடிவு செய்துள்ளது. "500 உணவகங்களில், 'ரெஸ்டோ பார்'களை துவக்க, அரசு முடிவு செய்துள்ளது" பார்
ஒன்றுக்கு குறைந்தபட்சம் 10 லட்சம்..50 கோடி அள்ளீட்டாங்க ஒரே
ஸ்ட்ரோக்கில்.. லஞ்சம் தான்..
வெள்ளி, 7 ஆகஸ்ட், 2015
பாலுறவுக்கு மறுத்த 19 பெண்களை படுகொலை செய்தனர் ஐ.எஸ். பயங்கரவாதிக
ஈராகில் பிணையக் கைதியாக பிடித்துவைத்துள்ள 19 பெண்களை ஐ.எஸ் பயங்கரவாதிகள் கொன்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ்.பயங்கரவாதிகள் சில
பகுதிகளை கைபற்றி அதை தனிநாடாக அறிவித்து உள்ளனர். தங்கள் பகுதியில்
வாழும் குர்தீஸ் இன பெண்கள் மற்றும் சிறுவர்களை பிடித்து பிணைக்கைதிகளாக
வைத்துள்ளனர். இளம் பெண்கள் மற்றும் சிறுமிகளை 'பாலியல் 'அடிமைகளாக
வைத்துள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.
கையில் வீணை வாயில் கீதை நெஞ்சில் அணுகுண்டு…
அழுது முடித்த கண்களுக்கு..!
குஜராத் படுகொலை,தலித்துகள் படுகொலை,
எதர்க்கும் வாய் திறவாமல் பக்காவான
பார்ப்பன வல்லரசு கனவு நாயகனாகி
ஆர்.எஸ்.எஸ் குருமூர்த்தியே
பாராட்டுமளவுக்கு
அப்துல்கலாம் மெய்யாலுமேமதங்களைக் கடந்த மாமனிதர்தான்!
இறப்பின் துயரம்
புரிந்து கொள்ளக் கூடியதுதான்,
ஆனால்
சாவின் விளம்பரம்
சகிக்க முடியவில்லை.
கண்களை பிழிந்தெடுத்தன
காட்சி ஊடகங்கள்
காதுகளில்
சோகத்தை காய்ச்சி ஊற்றின
எதர்க்கும் வாய் திறவாமல் பக்காவான
பார்ப்பன வல்லரசு கனவு நாயகனாகி
ஆர்.எஸ்.எஸ் குருமூர்த்தியே
பாராட்டுமளவுக்கு
அப்துல்கலாம் மெய்யாலுமேமதங்களைக் கடந்த மாமனிதர்தான்!
இறப்பின் துயரம்
புரிந்து கொள்ளக் கூடியதுதான்,
ஆனால்
சாவின் விளம்பரம்
சகிக்க முடியவில்லை.
கண்களை பிழிந்தெடுத்தன
காட்சி ஊடகங்கள்
காதுகளில்
சோகத்தை காய்ச்சி ஊற்றின
எங்கெங்கும் குமாரசாமிகள் by Savukku
தமிழகத்தில் வைகுண்டராஜன் அடிக்கும் கொள்ளையும், அவர் ஆட்சியாளர்களுக்கு
துணை போவதும் தங்கு தடையின்றி பல ஆண்டுகளாக நடந்து வருகின்றன. அரசு,
காவல்துறை நிர்வாகம் என்று பல அமைப்புகளையும் தன் கட்டுப்பாட்டில்
வைத்திருக்கும், வைகுண்டராஜன், தற்போது, நீதித்துறையையும் தன்
கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கிறார்.
திமுகவாக இருந்தாலும் சரி. அதிமுகவாக இருந்தாலும் சரி. தாது மணல்
கொள்ளை தங்குதடையின்றி தொடர்ந்து வந்தது. 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில்
வைகுண்டராஜனின் கனிம சுரங்கத்தில் சட்ட விரோதமாக தாது மணல் அள்ளப்படுவதாக
தொடர்ந்துவந்த புகார்களால், அந்த சுரங்கங்களில் அதிரடி சோதனை நடத்திய
தூத்துக்குடி கலெக்டர் ஆசிஷ்குமார் அந்தப் பதவியிலிருந்து தூக்கப்பட்டார்.
இந்த அதிரடி சோதனைகளுக்காகத்தான் ஆஷிஷ் குமார் தூக்கப்பட்டார் என்பது
பரவலாக பேசப்பட்டாலும், ஜெயலலிதா அரசு இது குறித்து எந்த கவலையும்
படவில்லை. ஜெயா டிவி மற்றும் மிடாஸ் நிறுவனத்தில் பங்குதாரராக இருக்கும்
வைகுண்டராஜனின் தொழிற்சாலையில் சோதனை என்றால் ஜெயலலிதா சும்மா இருப்பாரா
என்ன ?Pakistan10-ம் வகுப்பில் சீக்கிய மாணவி சாதனை
லாகூர், ஆக. 7-
பாகிஸ்தானில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அண்மையில்
வெளியிடப்பட்டன. அதில் பஞ்சாப் மாகாணம் நங்கானா சாகிப் மாவட்டத்தைச்
சேர்ந்த சீக்கிய மாணவி மன்பீர் கவுர் 1,100-க்கு 1,035 மதிப்பெண்கள் பெற்று
சாதனை படைத்துள்ளார்.
அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், அவரது சாதனையை
கவுரவிக்கும் வகையில், அவருக்கு 1 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என
பாகிஸ்தானில் உள்ள பிரபல சீக்கிய அமைப்பான பாகிஸ்தான் குருத்வாரா பிரபந்தக்
கமிட்டி இன்று அறிவித்துள்ளது
மேலும், படிப்பில் சிறந்து விளங்கும் சீக்கிய மாணவர்களுக்காக ஒரு நிதியை
உருவாக்கியுள்ளதாக அறிவித்த அந்த கமிட்டி, இதற்கு முதற்கட்டமாக 10 லட்சம்
ரூபாய் நன்கொடையையும் வழங்கி உள்ளது.
போயஸ் கார்டனில் ஜெ.வுடன் பிரதமர் மோடி சந்திப்பு!
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில்
பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்து பேசினார். அப்போது காவிரி பிரச்சனை
உள்ளிட்ட தமிழகத்தின் கோரிக்கைகள் அடங்கிய 21 பக்க மனுவை பிரதமர் மோடியிடம்
முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
பிரதமராகப் பதவியேற்ற பின்னர் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இன்று
முதல் முறையாக தமிழகம் வருகை தந்தார் பிரதமர் மோடி. சென்னை விமான
நிலையத்தில் பிரதமர் மோடியை ஆளுநர் ரோசையா, தமிழக முதல்வர் ஜெயலலிதா
மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள் வரவேற்றனர். பின்னர் சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற கைத்தறி தின நிகழ்ச்சியில்
மோடி பங்கேற்றார்.
ஆகஸ்ட் 6, 1945. போரில் ஈடுபடாத குழந்தைகளையும் பெண்களையும் அணுகுண்டு போட்டு.....அடுத்த 10 நாளில் நாகசாகி நகரிலும்
ஏப்ரல் 30, 1945.
ஜெர்மனிக்குள் நுழைந்த ரஷ்யப் படைகள் பெர்லின் நகரை சுற்றி வளைத்துவிட,
அங்கே பங்கரில் பதுங்கியிருந்த ஹிட்லர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
செய்து கொள்கிறார்.
இதையடுத்து ஹிட்லரின் படைகள் நேரடியாக
போரை நிறுத்திவிட்டாலும் ஆங்காங்கே சிறிய அளவில் அமெரிக்கக் கூட்டணி,
சோவியத் யூனியன் படைகளுடன் மோதிக் கொண்டிருந்தன.
மே 8, 1945.
இந் நிலையில் ஜெர்மனியின் முப்படையினரும் மே 8ம் தேதி அமெரிக்க- பிரான்ஸ்
அதிகாரிகள் முன்னிலையில் சோவியத் யூனியனிடம் சரணடையும் ஒப்பந்தத்தில்
கையெழுத்திட்டனர். இத்தோடு ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு
வந்தது.
பத்துகோடி லம்பாக அமுக்கிவிட்டார் காமடி...யா யா .
படம் பார்த்தவர்கள் ஐயோ அம்மா என்று பதறி ஓடினார்கள். எனில், பணம் போட்டு படம் எடுத்தவர்கள்? போட்ட பணத்தில் கால்வாசி வேண்டாம், கால் தூசியாவது திரும்பி வந்திருக்க வேண்டுமே? ம்ஹும்... அதுவும் இல்லையாம்.
படம் வெளியானால் ஓபனிங்கிலேயே பத்து கோடி வந்திரும், அப்பால ஒரு பத்து பதினைந்து கோடி. சேட்டிலைட் பத்து, எப்எம்ஸ் பத்து என்று பத்து பத்தாக கதை சொல்லி எட்டு கோடியை வாங்கிக் கொண்டாராம் காமெடி நடிகர். படம் வெளியாகி இந்நாள்வரை மொத்தமாக ஒரு கோடி வரவில்லையாம் தயாரிப்பாளர்களுக்கு.
காமெடின்னு நினைச்சு கண்ணி வெடியில் கால் வைக்க, சிதறிப் போய் கிடக்கிறது அவர்களின் பைனான்ஸ் ஸ்டேட்டஸ். பாவம்யா. கிசுகிசு எல்லாம் விபரமா சொல்ல முடியுமா ? நீங்களே மணந்து மணந்து கண்டுபிடியுங்கள்.
வியாழன், 6 ஆகஸ்ட், 2015
மலேசிய விமானம் எம் எச் 370 விமானத்தின் ஒரு பகுதி ரியூனியன் தீவுப் பகுதியில் உறுதி!
கடந்த ஆண்டு காணாமல்போன மலேசிய
விமானம் எம் எச் 370 விமானத்தின் ஒரு பகுதியே இப்போது இந்தியப்
பெருங்கடலில் உள்ள ரியூனியன் தீவுப் பகுதியில் ஒதுங்கியுள்ளது என்பதை
மலேசியா இன்று மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
கிடைக்கும் பகுதிகள் அனைத்தும் பிரான்ஸுக்கு சோதனைக்காக அனுப்பப்படுகிறது
மலேசியவின் போக்குவரத்து
அமைச்சர் லியோவ் டியாங் லாய், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள காணாமல் போன
விமானத்தின் இறக்கைப் பகுதியிலிருக்கும் வர்ணத்தின் நிறம், எம் எச் 370
விமானத்தின் ஆவணங்களுடன் ஒத்துப் போகிறது என்று கூறியுள்ளார்.
காணமல் போன போயிங் 777 ரக விமானத்தின் சிதிலங்கள் என்று நம்பப்படும் வேறு சில பகுதிகளும் இப்போது மேலதிக ஆய்வுக்காக பிரான்ஸுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மலேசியப் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.
காணமல் போன போயிங் 777 ரக விமானத்தின் சிதிலங்கள் என்று நம்பப்படும் வேறு சில பகுதிகளும் இப்போது மேலதிக ஆய்வுக்காக பிரான்ஸுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மலேசியப் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஞாநி : ஜீவா பூங்காவில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்த...மதவெறியர்கள்?
கலைஞர் கருணாநிதி நகரில் இருக்கும் ஜீவா பூங்காவில் நாகி ரெட்டியார் தம்
தெலுங்கு படப்பிடிப்புக்கு வைத்த சிவன் செட்டை அகற்றாமல் அப்படியே
விட்டுவிட்டதால், பூங்காவின் பெயரே சிவன் பூங்கா என்று
திரிக்கப்பட்டுவிட்டது. இப்போது அந்த இடத்தை கோவில் வளாகமாக மாற்றும் சதி
நடக்கிறது. இந்த வாரம் அங்கே 450 கிலோ எடையுள்ள சர்வேஸ்வர லிங்கம் ஒன்று
'பிரதிஷ்டை' செய்யப்பட்டிருக்கிறது. மாநகராட்சிக்கு சொந்தமான இந்தப்
பொதுப் பூங்காவில் இப்படி லிங்கம் பிரதிஷ்டை செய்ய அனுமதித்தது யார் ?
மேயரா? ஆணையரா? வேறு எந்த அதிகாரி ? Saidai Sa Duraisamy
போர்ன் தடை- ஷோபாசக்தி: உங்கள் பிள்ளைகள், துணையோடு சம்போகத்தில்.........
நாளை நீங்கள் அல்லது உங்கள் பிள்ளைகள், துணையோடு சம்போகத்தில் ஈடுபடும் காட்சி இவ்வகை இணையத்தளங்களில் ‘லைவ்’வாக ஒளிபரப்பப்படுவதற்கு எல்லாவகையான சாத்தியங்களும் உண்டென்பதை மறவாதீர்கள்.
இந்தியாவில் ‘போர்ன்’ இணையத்தளங்கள் தடை செய்யப்படலாமா கூடாதா என்ற விவாதங்களைக் கவனித்தபோது ஒன்று சொல்லத் தோன்றுகிறது.
போர்ன் இணையத்தளங்களை தடைசெய்யக்கூடாது எனச் சொல்பவர்கள் தனிமனித சுதந்திரம், மேலைநாடுகளில் தடையில்லை, சிறுவர்கள் இவ்விணையங்களைப் பார்க்காமல் ஒழுங்குபடுத்தினால் போதுமானது என்றெல்லாம் சொல்கிறார்கள். இந்த சொல்விற்பன்னர்கள் அதிமுக்கியமான விடயங்களைக் கவனிக்காமல் விட்டுவிட்டார்கள்.
இன்று உலகில் நடத்தப்படும் மனிதக் கடத்தல்களில் எண்பது விழுக்காடு கடத்தல்கள் பாலியல் வணிகத்திற்காகவே நடத்தப்படுகின்றன. ஜப்பானில் தொடங்கி இங்கிலாந்து அமெரிக்காவரை இந்தக் கடத்தல் தொழில் கொடிகட்டிப்பறக்கிறது. சர்வதேச மாஃபியாக்களின் கையிலிருக்கும் இந்த வணிகம் போதைப்பொருள், ஆயுதக்கடத்தல் போன்றவற்றிற்கு இணையாகப் பணம் புழங்கும் தொழிலாகயிருக்கிறது.
இந்தியாவில் ‘போர்ன்’ இணையத்தளங்கள் தடை செய்யப்படலாமா கூடாதா என்ற விவாதங்களைக் கவனித்தபோது ஒன்று சொல்லத் தோன்றுகிறது.
போர்ன் இணையத்தளங்களை தடைசெய்யக்கூடாது எனச் சொல்பவர்கள் தனிமனித சுதந்திரம், மேலைநாடுகளில் தடையில்லை, சிறுவர்கள் இவ்விணையங்களைப் பார்க்காமல் ஒழுங்குபடுத்தினால் போதுமானது என்றெல்லாம் சொல்கிறார்கள். இந்த சொல்விற்பன்னர்கள் அதிமுக்கியமான விடயங்களைக் கவனிக்காமல் விட்டுவிட்டார்கள்.
இன்று உலகில் நடத்தப்படும் மனிதக் கடத்தல்களில் எண்பது விழுக்காடு கடத்தல்கள் பாலியல் வணிகத்திற்காகவே நடத்தப்படுகின்றன. ஜப்பானில் தொடங்கி இங்கிலாந்து அமெரிக்காவரை இந்தக் கடத்தல் தொழில் கொடிகட்டிப்பறக்கிறது. சர்வதேச மாஃபியாக்களின் கையிலிருக்கும் இந்த வணிகம் போதைப்பொருள், ஆயுதக்கடத்தல் போன்றவற்றிற்கு இணையாகப் பணம் புழங்கும் தொழிலாகயிருக்கிறது.
36 அடி உயர ராட்சத அலையால்தான் மத்திய பிரதேசத்தில் ரெயில் கவிழ்ந்தது: ரெயில்வே
மத்திய பிரதேச மாநிலம் ஹர்தா நகர் அருகே நேற்று முன்தினம் இரவு
அடுத்தடுத்து ஒரே இடத்தில் 2 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தடம்புரண்டு ஆற்றுக்குள்
கவிழ்ந்தன. இந்த விபத்துக்கான காரணம் குறித்து விபத்து நடந்த இடத்தை
நேரில் ஆய்வு செய்த ரெயில்வே வாரிய உறுப்பினர் குப்தா கூறியதாவது:-
இந்த விபத்திற்கு பருவமழை தயார் நிலையில் இருந்தது காரணமல்ல.
ஆற்றுப்படுகையிலிருந்து 13 அடி உயரத்தில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில்
முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, திடீரென உருவான அசுரத்தனமான வெள்ளத்தின்
காரணமாக, 36 அடி உயரமும் 200 மீட்டர் அகலமும் கொண்ட ராட்சத அலையடித்தது.
இந்த ராட்சத அலையால்தான் ரெயில் தடம்புரண்டது.
1870-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த தண்டவாளத்தில் இதற்கு முன்பாக இப்படி ஒரு
கோரமான விபத்து ஏற்பட்டதில்லை. ஆனால், இந்த திடீர் வெள்ளத்தால் பாலத்திற்கு
பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார் maalaimalar.com
சகல அயோக்கியரகளையும் வெட்கப்படவைத்த தினமணி வைத்தி!
சாதாரண கணபதியின் மறைவும் அப்துல் கலாமின் மறைவும்!
வேலைச்சுமையாலும், நிதிச்சுமையாலும் வாழ்க்கை கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் தொழிலாளிகளுக்கு கண நேரமாவது கணபதியின் தேநீர் ஆசுவாசமளிக்கும்.
எங்கள் அலுவலகத்திற்கும் கடந்த ஆறு வருடங்களாக கணபதி தான் தேநீர் தருகிறார். மெலிந்த தேகம், ஐந்தே கால் அடி உயரம், நல்ல களையான முகம். ஜீன்ஸ் பேண்டை வெட்டி தைத்து முக்கால் காலுக்கு போட்டிருப்பார். நானும் பல வருடங்களாக கவனித்து வருகிறேன். கணபதிக்கு வயது ஏறுவதேயில்லை.
யாகூப் மேமனுக்கும் அந்தப் ‘பாழாய்ப் போன’ குற்ற உணர்வு வராமல் போயிருந்தால்?
– யாகூப் மேமனை தூக்கில் ஏற்றிக் கொன்ற பிறகும் அதற்கு முன்னரும் ஊடக விவாதங்களில் முஸ்லீம் கட்சிகள், இடதுசாரிகள், ஜனநாயக சக்திகள் எழுப்பும் கேள்வி இது.
இந்து மதவெறியர்களுக்கு இது பதிலளிக்க சிரமமான கேள்வி என்று கருதுகிறீர்களா? ஒரு போதுமில்லை.
புதன், 5 ஆகஸ்ட், 2015
கடத்திய தீவிரவாதியை மடக்கி பிடித்த மக்கள்! காஷ்மீரி கிராம மக்களை கடத்தியவனை சிறைபிடித்த மக்கள்!
ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில்
எல்லைப் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உள்பட 2 பேர் உயிரிழந்த நிலையில்,
தாக்குதலில் ஈடுபட்ட ஒரு தீவிரவாதியை, சிறை பிடிக்கப்பட்ட கிராம மக்களே
தைரியமாகப் பிடித்து ராணுவத்திடம் ஒப்படைத்த பரபரப்பு தகவல்
வெளியாகியுள்ளது.
ஜம்முவில் உள்ள உதம்பூருக்கு 10 கி.மீ தொலைவில் சம்ருலி என்ற இடத்தில்
எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் தங்கள் வாகனங்களில் அணிவகுத்துச் சென்று
கொண்டிருந்தனர். அப்போது திடீரென அங்கு வந்த தீவிரவாதிகள் எல்லைப்
பாதுகாப்பு படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில்
எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் ஐந்து
வீரர்கள் காயமடைந்தனர். மேலும் இந்தத் தாக்குதலின் போது 3 கிராம மக்களை
தீவிரவாதிகள் பிணையக் கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
த்ரிஷா :திருமணம் செய்வதை விடவும் சேர்ந்து வாழ்வது நல்லது
திருமணம் செய்துகொண்டு விவாகரத்து பெறுவதைக் காட்டிலும் லிவ் இன் உறவில் ஏற்படும் பிரிவு மேலானது என நடிகை த்ரிஷா கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:
லிவ் இன் உறவு என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம். சம்பந்தப்பட்ட இரண்டு பேருக்கும் அவர்களின் குடும்பத்துக்கும் லிவ் இன் உறவு சரி என்று தோன்றினால், பிறகு அதில் வேறு எந்தப் பிரச்னையும் இருக்கக்கூடாது. திருமணம் செய்து, கருத்துவேறுபாடுகளால் விவாகரத்து பெறுவதைக் காட்டிலும் லிவ் இன் உறவில் இருந்து பிரிவது மேலானது என எண்ணுகிறேன் என்றார். dinamani.com
இது தொடர்பாக ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:
லிவ் இன் உறவு என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம். சம்பந்தப்பட்ட இரண்டு பேருக்கும் அவர்களின் குடும்பத்துக்கும் லிவ் இன் உறவு சரி என்று தோன்றினால், பிறகு அதில் வேறு எந்தப் பிரச்னையும் இருக்கக்கூடாது. திருமணம் செய்து, கருத்துவேறுபாடுகளால் விவாகரத்து பெறுவதைக் காட்டிலும் லிவ் இன் உறவில் இருந்து பிரிவது மேலானது என எண்ணுகிறேன் என்றார். dinamani.com
அப்துல் கலாமின் மலிவு ஸ்டேன் கண்டுபிடிப்பு கமிஷன் வியாபாரிகளால் முடக்கப்பட்டது?
இதய நோயால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு, குறைந்த செலவில் தரமான சிகிச்சை
கிடைப்பதற்காக, முன்னாள் ஜனாதிபதி, அப்துல் கலாம், பிரபல டாக்டர் ராஜுவுடன்
இணைந்து, 'ஸ்டென்ட்' கருவியை கண்டுபிடித்தார். >எனினும்,
கமிஷன் ஆதாயத்திற்காக, தனியார் மருத்துவமனைகள் மட்டு மின்றி, அரசு
மருத்துவ மனைகளிலும் இந்த கருவிகள் பயன்படுத்தப்படாததால், அவரின்
கண்டுபிடிப்பு, ஏழைகளுக்கு பயனின்றி வீணாகி வருவதாக குற்றச்சாட்டு
எழுந்துள்ளது. இதுகுறித்து, மருத்துவத்துறை வட்டாரங்கள் கூறியதாவது:அறிவியல்
துறையில் அதீத ஞானமுடைய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், ராக்கெட்
தொழில்நுட்பம் தவிர, வேறு பல துறைகளிலும் சாதனை படைத்துள்ளார். போலியோவால்
பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, எடை குறைந்த செயற்கை கால்களை கண்டுபிடித்த
கலாமின் சாதனை அளப்பரியது. தவிர, இதய நோயாளி களின் நலனுக்காக, குறைந்த
விலையிலான ஸ்டென்ட்களை தயாரிக்க திட்டமிட்ட கலாம், பிரபல டாக்டர் ராஜுவுடன்
இணைந்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். இருவரின் கூட்டு முயற்சியால்,
குறைந்த விலையிலான ஸ்டென்ட் வடிவமைக்கப்பட்டது. இதற்கு, 'கலாம் - ராஜு
ஸ்டென்ட்' என, பெயரிடப்பட்டது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)











