செவ்வாய், 24 ஜூன், 2014

தமிழ்த் தேசிய நாடார்களின் கபட நாடக வேஷம் !

918fd6b5-df98-411c-856f-4cd9cad183ca_S_secvpf704a5ac4-7fc4-4708-9454-abb56df49f94_S_secvpfவே.மதிமாறன் : தூய இனவாதத்தோடு தமிழ்த் தேசியம் பேசுகிற நாடார் ஜாதி உணர்வாளர்கள், ‘என்ன எப்பப் பாரு.. பார்ப்பனர்களையே குறை சொல்றீங்க..?’ என்று பெரியார் தொண்டர்களிடம் கேட்கிறார்கள். அவர்களின் இந்தக் கேள்விக்குப் பின் இருப்பது தமிழ் உணர்வல்ல, பார்ப்பன நிறுவனங்களின் மூலமாக லாபமும் புதிய பார்ப்பன உறவும், தனி மனித லாபங்களும் முக்கிய பங்கு வகிக்கிறது.
அதனால் தான் பெரியாருக்கு துரோகம் செய்தவர்களையே சுட்டிக் காட்டி, ‘இது தான் பெரியார் இயக்கத்தின் யோக்கியதையா?’ என்று நற்பெயர் எடுக்கிறார்கள் தங்களின் பா. நிறுவனங்களிடமும் புதிய பா. உறவுகளிடமும்.
கம்யுனிஸ்ட், திராவிட இயக்கம், பெரியார், தலித் இயக்கம் என்று பலரை விமர்சித்து ஊர் நியாயம் பேசுகிற அவர்கள், தன் ஜாதி உணர்வாளர்களைக் குறித்து கள்ள மவுனம் காக்கிறார்கள்.
அது மட்டுமல்ல, ஈழப் பிரச்சினையில் காங்கிரசின் துரோகம் என்ற அடிப்படையில் தங்கபாலு, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ப. சிதம்பரம், நாராயணசாமி; காங்கிரஸ் அல்லாதவர்களில் கலைஞர், திருமாவளவன், வைகோ இவர்களை மிகக் கடுமையாக கண்டிக்கிற அவர்கள்,
காங்கிரசில் இருக்கிற குமரி அனந்தனையும் (மகள் தமிழிசை சவுந்தரராஜனை பாஜகவில் வசதியாக)  வசந்த குமாரையும் கண்டிப்பதே இல்லை.

ரிலையன்ஸை புறக்கணிப்போம்'- ட்விட்டரில் இணையவாசிகள் போர்க்கொடி

பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டரில், 'ரிலையன்ஸை புறக்கணிப்போம்' என்ற கோஷத்தை எழுப்பி, இந்திய இணையவாசிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) கவனத்தை ஈர்த்தனர்.
நிகழ்நேரத்தில் முக்கிய நிகழ்வுகள், பிரச்சினைகள், சுவாரசியங்கள், பிரபலங்கள், முக்கியச் செய்திகளையொட்டி, ட்விட்டர் தளத்தில் காரசார விவாதங்கள் அரங்கேறும்.
அந்த வகையில், இன்று காலை முதலே #BoycottReliance (ரிலையன்ஸை புறக்கணிப்போம்) என்ற ஹேஷ்டேக், இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் முன்னிலை வகித்தது.
ஹாஷ்டேகை பொறுத்தவரை, ஒரு குறிப்பிட்ட விஷயத்தையோ அல்லது விவகாரத்தையோ எடுத்துக்கொண்டு, அதையொட்டி தங்கள் கருத்துக்களை தெரிவித்து பதிவிடுவதால், அது ட்ரெண்டிங்கில் முன்னிலை வகிக்கும். ஒரு குறிப்பிட்ட ஹேஷ்டேகை பயன்படுத்தி, நொடிக்கு 20-க்கும் மேற்பட்ட ட்வீட்கள் பதிவாகும்போது, அந்த ஹேஷ்டேக் தேச அளவில் பிரபலமடையும்.
ரிலையன்ஸுக்கு எதிரான கோஷம் ஏன்?

கரூர்: இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை ! உடலை வாங்க மறுத்து சாலை மறியல் !

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அடுத்த பிச்சம்பட்டியை சார்ந்தவர் பொன்னுசாமி, இவர் இப்பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி நாகவள்ளி. இவருடைய இரண்டாவது மகள் வினிதா (17) இவர் 12ம் வகுப்பு முடித்து கரூர் அருகேயுள்ள வீரராக்கியம் தனியார் கொசுவலையில் பணிபுரிந்து வந்தார். வரும் 2ம் தேதி தொட்டியத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படிக்க உள்ள நிலையில் விடுமுறை காலத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் திங்கள்கிழமை (23-06-14) மாலை வேலை முடிந்து கிருஷ்ணராயபுரத்திலிருந்து பிச்சம்பட்டிக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது மர்ம நபர்கள் வினிதாவை வெற்றிலை கொடிக்கால் பகுதிக்கு தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததோடு அவரை கொலைசெய்து அங்கேயே விட்டு சென்றுள்ளனர்.

போரூர் ராமச்சந்திரா மருத்துவ கல்லுரி மாணவி தற்கொலை ! மாணவிகளின் பாலியல் ராக்கிங் காரணம் ?

சென்னை : சகமாணவியின் பாலியல் ரீதியான
ராகிங் கொடுமையால் மாணவி தற்கொலைசென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் பயின்று வந்த மாணவி ராகிங் கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தற்கொலைக்கு தூண்டிய சக மாணவிகளை போலீஸார்  கைது செய்துள்ளனர். போரூர் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் பி.எஸ்.சி.-இ.டி.சி.டி எனப்படும் அவசரசிகிச்சை தொடர்பான படிப்பை 2ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார்.காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளையார் பாளையத்தை சேர்ந்த அந்த மாணவி, விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை விடுதி அருகே யாரும் இல்லாத போது  அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது பற்றி அவரது தந்தை கமலக்கண்ணன் அளித்த புகாரின் பேரில் கல்லூரிக்கு சென்ற யோகலட்சுமியின் அறையில் போலீஸார்  சோதனை நடத்தினர். அதில் சில சந்தேகங்கள் உருவானது . இதையடுத்து அவரை கைது செய்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடல் ராயபேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.nakkheeran.in

போலி விசா, பாஸ்போர்ட் மூலம் 53 நாடுகளுக்கு 400 பேர் !

சென்னை: இங்கிலாந்து, கனடா, நியூசிலாந்து, அரபு உள்பட 53  நாடுகளுக்கு போலி விசா, பாஸ்போர்ட் மூலம் அனுப்பி வைத்த 5  இலங்கை தமிழர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.   குறிப்பாக, போலி  பாஸ்போர்ட் மற்றும் விசா மூலம் மலேசியா, இங்கிலாந்து, கனடா,  ஆஸ்திரேலியா உள்பட 53 நாடுகளுக்கு அவர்கள் சென்றுள்ளனர்.  இதுகுறித்து, உரிய விசாரணை நடத்த கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார்.  மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் நல்ல சிவம், துணை கமிஷனர்  ஜெயக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

மும்பை போலீஸ் தகுதிதேர்வில் 4 பேர் பலி ! இண்டர்வியுவே ஒரு என்கவுண்டரா ?

மும்பையில் போலீஸ் பணிக்கான தகுதி தேர்வில் 4 பேர் பலியானது தொடர்பாக மராட்டிய உயர் போலீஸ் அதிகாரிகள் பதிலளிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. 4 பேர் சாவு மராட்டிய மனித உரிமைகள் நலசங்கம் சார்பில் மும்பை ஐகோர்ட்டில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:- போலீஸ் ஆட்சேர்ப்பு, உடல் தகுதி தேர்வில் கலந்து கொண்டு பலியான 4 பேர் மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களின் குடும்பத்தினருக்கு மராட்டிய அரசு இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், போலீஸ் தேர்வில் பங்குபெற வந்தவர்களுக்கு குடிநீர், உணவு, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மராட்டிய அரசு ஏற்படுத்தி தரவில்லை.

திங்கள், 23 ஜூன், 2014

ஜல்லிக்கட்டு அனுமதி கோரிய 17 மனுக்கள் தள்ளுபடி! சென்னை ஐகோர்ட் கிளை உத்தரவு!

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக் கோரி மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து தொடுக்கப்பட்ட 17 மனுக்களை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக் கோரி கடந்த 2009 முதல் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வழக்கு தொடுக்கப்பட்டு, அவை நிலுவையில் இருந்தன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் ராமசுப்பிரமணியம், வேலுமணி ஆகியோர் அடக்கிய அமர்வு, ஜல்லிக்கட்டு வழக்கு தொடர்பாக மே 7ஆம் தேதி உச்சநீதிமன்றம் விதித்த தீர்ப்பை சுட்டிக்காட்டி மனுக்களை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டனர்.

Swiss கருப்புப் பணம் – ஃபிலிம் காட்டும் பாஜக !

எம்.பி.ஷாசுவிஸ் வங்கிகளில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர்களின் பட்டியல், புலனாய்வில் முக்கியமான உதவியாக இருக்கும் என்று கருப்பு பணம் பற்றிய சிறப்பு புலனாய்வு குழு தலைவர் நீதிபதி எம்.பி. ஷா கூறியிருக்கிறார். ஆனால் இந்த புலனாய்வு என்ன சாதித்து விடும்?
எம்.பி.ஷா
வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் இந்தியர்கள் திருட்டுத்தனமாக பதுக்கியுள்ள கருப்பு பணம் பற்றிய விபரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் எனக் கோரி ராம் ஜெத்மலானி உள்ளிட்ட பலர் உச்சநீதி மன்றத்தில் 2009-ல் வழக்கு தொடுத்திருந்தனர். 2011 ஜூலை 2-ம் தேதி ஓய்வுபெற்ற உச்சநீதி மன்ற நீதிபதிகள் எம்.பி ஷா, அரிஜித் பசாயத் ஆகியோர் தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்குமாறு, அப்போதிருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு, உச்சநீதி மன்றம் உத்திரவிட்டது.
அந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு போட்ட மனுவை கடந்த மே 1-ம் தேதி தள்ளுபடி செய்த உச்சநீதி மன்றம் மூன்று வாரத்திற்குள் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க வேண்டும் என உத்திரவிட்டது. சாதனை ஏதும் நிகழ்த்தவியலாத, இத்தகைய சட்டத்தின் பொந்து விளையாட்டைக் கூட ஆளும் வர்க்கம் விரும்பவில்லை. எனினும் உச்சநீதிமன்றம் அந்த விளையாட்டை கொஞ்சம் அதிகமாய் விளையாட விரும்பியது.

பேய்ப்படங்கள் நிச்சயம் வெற்றி பெரும் , தமிழ் திரையின் லேடஸ்ட் மூடநம்பிக்கை

தமிழில் வரும் பேய் படங்கள் வெற்றிகரமாக ஓடுகின்றன. இதனால் அதுபோன்ற கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க முன்னணி கதாநாயகிகள் ஆர்வம் காட்டுகிறார்கள். நயன்தாரா பேய் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தெய்வீக சக்தி கொண்ட பெண் கேரக்டரில் அவர் வருகிறார். இதில் அவருடன் புதுமுகங்கள் பலர் நடிக்கின்றனர். சுந்தர். சி. இயக்கும் அரண்மனை பேய் படத்தில் ஹன்சிகா நடிக்கிறார். இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இதில் ஆண்ட்ரியா, ராய் லட்சுமி போன்றோரும் நடித்துள்ளனர். குழந்தைகளும் பெரியவர்களும் டெலிவிஷன்களில் பேய் படங்களை விரும்பி பார்க்கின்றனர்.

அர்விந்த் கேஜ்ரிவால் ஒப்புதல் வாக்குமுலம் : (பிரதமர் கனவில்) டெல்லி ஆட்சியை விட்டு ஓடியது தவறுதான் ! இனி ஓடமாட்டேன் !


 நான் செய்தது பெரிய தவறுதான்: மறந்து விடுங்கள்: இடையில் ஓட மாட்டேன்: கெஜ்ரிவால்
வடக்கு டெல்லியில் ஆதர்ஷ்நகர் மெட்ரோ ரெயில் நிலையம் அருகில் நடந்த ஒரு கூட்டத்தில் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டு பேசினார். அப்போது கெஜ்ரிவால் பேசியதாவது:–
டெல்லி ஆட்சிப் பணியில் இருந்து 49 நாட்களில் நான் பதவி விலகியதற்காக முதலில் நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும். நான் செய்தது பெரிய தவறுதான். அதை மறந்து விடுங்கள்.
அப்பனே நீவிர் ஐந்தாண்டுகளுக்கு மனநோய் தெரபி எடுக்க வேண்டிய அளவு லூசாகி விட்டீர் உம்மை நம்பி வாக்களித்த மக்களை வெறும் சுய இன்பவாதிகளாக்கி விட்டீர்

தமிழகத்தில் முதல பெண் தவில் வாத்திய கலைஞர் ஐஸ்வர்யா !

ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா
அசுர வாத்தியமான நாகஸ்வரத்துக்கு இணையான லய வாத்தியம் தவில். எந்த ஒலிபெருக்கியின் துணையும் இல்லாமல் இடியைப் போல் ஒலிக்கக் கூடிய வாத்தியம். ஆண்கள் மட்டுமே கையாளத் தகுந்த இந்த வாத்தியத்தை அரிதாகக் கையில் எடுத்து, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த புஷ்பராணி திருச்செல்வம் புகழ்பெற்ற பெண் தவில் கலைஞராக மிளிர்ந்திருக்கிறார். இவருக்கு அடுத்துத் தவில் வாசிப்பில் சுடர்விட்டுக் கொண்டிருப்பவர், பெங்களூரில் வசிக்கும் ஐஸ்வர்யா நந்தகோபாலா.
தந்தை ராஜகோபாலிடம்தான் ஐஸ்வர்யா தவில் கற்றுக்கொண்டிருக்கிறார். ஏறக்குறைய 250 பேருக்குத் தவில் வாசிக்கக் கற்றுக் கொடுத்த ராஜகோபால், தன் மகள் ஐஸ்வர்யாவுக்கு முதலில் தவில் வாசிக்கக் கற்றுக் கொடுக்கவில்லை. தவிலையே தொடக்கூடாது என்று கண்டிப்பாகச் சொல்லியிருக்கிறார்.

இலங்கை இயக்குநரின் படம் வெளியிடுவது நிறுத்தம்: பாதுகாப்பு கோரி முதல்வருக்கு கடிதம் With you With out you !



வித் யூ.. வித் அவுட் யூ’ படத்தில் ஒரு காட்சி
இலங்கையைச் சேர்ந்தவர் தயாரித்துள்ள திரைப்படம், சென்னையில் திரையிடப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பாதுகாப்பு கேட்டு முதல்வர் ஜெயலலிதாவுக்கு படத் தயாரிப்பாளர் கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கையைச் சேர்ந்த பிரசன்ன வித்தனகே என்ற இயக்குநர் தயாரித்துள்ள ‘வித் யூ.. வித் அவுட் யூ’ என்ற படம், சர்வதேச திரைப்பட விழாவில் விருது பெற்றது. சிங்கள ராணுவத்தில் இருந்து வெளியேறிய பணக்கார அடகுக்கடை முதலாளி, இலங்கைத் தமிழ்ப் பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார்.
தனது கணவர் ராணுவத்தில் பணியாற்றியவர் என்பதும் இலங்கைப் போரின்போது, தமிழ்ப் பெண்ணை பலாத்காரம் செய்து கொன்றவர்களுக்கு உதவியதும் தெரிய வந்ததும் அந்தப் பெண் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்கிறார் என்பதுதான் படத்தின் கதை.  தமிழ் தீவிரவாத போர்வையில் திரைப்பட விநியோகஸ்தர்கள் மற்றும் படதயாரிப்பாளர்கள் இதன் பின்னணியில் இருப்பதாக நமக்கு  சந்தேகம் . போதிய தியேட்டர்கள் இல்லாமல் பல படங்கள் முடங்கி இருப்பதால் அவர்கள் தங்கள் படங்களை திரையிட எந்த எக்ஸ்ட்டேன்டுக்கும் போக கூடும் ?

நடிகர் விஜய்க்கு ஏழை பாழை என்றால் அவ்வளவு இளக்காரம் ? சினிமாக்காரன் சினிமாக்காரன் தாண்ட்டா !

உன்னை யாரோ பெத்திருக்க என்னை யாரோ பெத்திருக்க ஆனாலும் நீயும் நானும் அண்ணன் தம்பிடா.. என்று பாடும் நடிகர்கள் சிலரின் நிஜ முகம் தெரியணுமா... இதோ ஒரு சாம்பிள்... அந்த பெரிய நடிகரின் பங்களா சென்னையின் சினிமா நகரான சாலிகிராமத்தில் இருக்கிறது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலை அது. தினசரி பல ஆயிரம் பேர், இதான் நம்ம நடிகர் வீடு என்று ஆசையுடன் நின்று பார்த்துவிட்டுச் செல்வது வழக்கம். இது நடிகருக்கும் அவர் குடும்பத்துக்கும் பிடிக்கவில்லை. எனவே பங்களாவின் சுற்றுச் சுவர்களை மேலும் ஒரு 5 அடிக்கு உயர்த்தச் சொல்லி உத்தரவிட்டார் நடிகர். அதற்கென 5 தொழிலாளர்கள் அமர்த்தப்பட்டனர். பங்களாவின் ஒரு பகுதியில் கட்டிட வேலையில் ஈடுபட்டிருந்தனர் ஐந்து தொழிலாளர்களும். அப்போது சூட்டிங் முடிந்து வீடு திரும்பியிருக்கிறார் அந்த ஹீரோ. எதிர்பட்ட இந்த உழைப்பாளர்களை பார்த்திருக்கிறார். உழைக்கும் வர்க்கம் எப்படியிருக்கும்..? வெற்று மேனியும், அழுக்கு வேட்டியுடன், வியர்வை வழிய நின்றிருக்கிறார்கள்.

சென்னை ஒரு லட்சம் மாணவர்களுக்கு இலவச ஆங்கில பயிற்சி !

படம் : வள்ளலார்  ஆங்கில கல்வி .
ஒரு லட்சம் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சியளிக்க வித்யாரம்பம் அறக்கட்டளை திட்டமிட்டுள்ளதாக அதன் நிறுவனர் ரெங்கநாதன் தெரிவித்தார்.
வித்யாரம்பம் அறக்கட்டளை சார்பில் ஆங்கிலப் பயிற்சி பெற்ற குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களுடைய செயல்பாடுகளுக்கான பாராட்டு விழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் பேசியது:
தற்போது கல்வி என்பது வியாபாரமாக மாறிவிட்ட நிலையில், பொறுப்புணர்ந்து கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் குறைந்துவிட்டனர். உலக அளவில் மாணவர்கள் சாதிக்க ஆங்கில அறிவு அத்தியாவசியமானதாகிவிட்டது.

திமுகவின் சகல மட்டங்களிலும் கடும் கொந்தளிப்பு ? வென்றால் அவர்கள் (?) தோற்றால் நாங்களா ?

சென்னை : கட்சி நிர்வாகிகள், 33 பேரை, தி.மு.க., மேலிடம் நேற்று முன்தினம், 'சஸ்பெண்ட்' செய்தது, அந்தக் கட்சித் தொண்டர்கள் மற்றும் கீழ்மட்ட நிர்வாகிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அப்பாவிகள் பலரை பழிவாங்கி விட்டதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து ஆராய, தி.மு.க.,வில், சமீபத்தில், ஆறு பேர் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு, தோல்விக்கான காரணங்கள் குறித்தும், கட்சி யின் மறுசீரமைப்பு குறித்தும், 150 பக்க அறிக்கையை, கட்சி தலைமைக்கு வழங்கியது.
அதன் அடிப்படையில், தி.மு.க.,வில், மாவட்ட எல்லைகள் பிரிக்கப்பட்டு, புதிதாக, 33 மாவட்டங்கள், கட்சியில் அமைப்பு ரீதியாக உருவாக்கப்பட்டன.  திமுகவில் கலைஞரை விட ஸ்டாலினை விட துர்கா ஸ்டாலின்தான் பவர்புல் தலைவராம் அவரது லிஸ்டின் படிதான் வேட்பாளர் மாவாட்ட செயலாளர் ? நெசமாலுமா ? இரண்டு அம்மாக்களை நாடு தாங்குமா ?

திரைப்பட இயக்குநர் ராம. நாராயணன் காலமானார்

திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளருமான ராம.நாராயணன் காலமானார். இறக்கும்போது அவருக்கு வயது 67. சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்ட இவர், சிங்கப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், அவர் இன்று ஞாயிற்றுக்கிழமை, சிகிச்சைப் பலனின்றி இறந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட 125-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர் என்ற உலக சாதனையை தன்வசம் கொண்டிருந்த ராம. நாராயணன், பல வெற்றிப் படங்களைத் தயாரித்தவர்.

ஞாயிறு, 22 ஜூன், 2014

பிரெஞ்சு, ஜெர்மன் படிக்கும்போது ஏன் இந்தி படிக்கக்கூடாது?: பொன். ராதாகிருஷ்ணன் உதிர்க்கும் முத்துக்கள் ?

நாகர்கோவில்: தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகளில் பிரெஞ்சு, ஜெர்மன் படிக்கிறார்கள். அப்படி இருக்கையில் ஏன் இந்தி படிக்கக் கூடாது என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கேட்டுள்ளார். நாகர்கோவிலில் இன்று உதயக்குமார், ராதாகிருஷ்ணனைச் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பொன். ராதாகிருஷ்ணன் பேசுகையில், கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்ட குழுவைச் சேர்ந்த உதயகுமார் மற்றும் மீனவ கிராம மக்கள் என்னை சந்தித்து கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர். பிரெஞ்சு, ஜெர்மன் படிக்கும்போது ஏன் இந்தி படிக்கக்கூடாது?: பொன். ராதாகிருஷ்ணன் கூடங்குளம் அணுமின் நிலையம் வரக்கூடாது என்று ஆரம்பத்திலேயே நாங்கள் போராட்டம் நடத்தினோம். எங்கள் போராட்டத்தை யாரும் கண்டு கொள்ளவில்லை. உதாசீனப்படுத்தினார்கள். தற்போது அணுமின் நிலையம் தொடங்கப்பட்டு உள்ளது. அதை நிறுத்துவது என்பது கடினமான ஒன்றாகும். அந்த பகுதி மக்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

மறைந்த நடிகை கல்பனாவின் கதையை படமாக்கிய நடிகை பூஜா கண்ணீர் ! நீதிமன்ற தடை !

பூஜா காந்தி தயாரித்து நடிக்கும் படத்துக்கு தடை விதிக்கப்பட்டதால் கண்ணீர் விட்டு அழுதார். தடையை  நீக்க கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். ‘கொக்கி, ‘திருவண்ணாமலை போன்ற படங்களில் நடித்திருப்பவர் பூஜா காந்தி. தற்போது கன்னட படங்களில் நடிப்பதுடன் தயாரிப்பாளராகவும் ஆகி இருக்கிறார். மறைந்த கன்னட நடிகை கல்பனாவின் வாழ்க்கையை மையமாக வைத்து ‘அபிநேத்ரி என்ற படத்தை தயாரிப்பதுடன் நடித்தும் வருகிறார். தனது ரீ என்ட்ரி படம் என்பதால் இப்படத்தில் அதிக கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில் எழுத்தாளர் பாக்ய கிருஷ்ணமூர்த்தி என்பவர் ‘அபிநேத்ரி கதை தனது ஸ்கிரிப்ட்.  என்னுடைய அனுமதி இல்லாமல் இப்படத்தை தயாரிக்கிறார்கள் என்று பெங்களூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். http://www.youtube.com/watch?v=aQISOf8XBLo

குஜராத் முதல்வர் ஆனந்திக்கு ரூ.100 கோடியில் புதியவிமானம் வாங்கப்படுகிறது !

அகமதாபாத்: குஜராத் முதல்வர் ஆனந்தி படேல் பயணம் செய்வதற்காக ரூ.100 கோடியில் ஜெட் விமானம் வாங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து குஜராத்தின் புதிய முதல்வராக  பெண் எம்எல்ஏ ஆனந்தி பென் படேல் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள செல்வதற்கு வசதியாக புதிய விமானம் ஒன்றை வாங்க குஜராத் அரசு முடிவு செய்துள்ளது. உலகிலிலேயே கருப்பையை வாடகைக்கு விடும்  வாடகை தாய்மார்கள் அதிகமுள்ள குஜராத்திற்கு இந்த டாம்பீகம் ரொம்ப ரொம்ப ரொம்ப முக்கியம் ! அது சரி இந்த ஆனந்தி பட்டேலுக்கு அப்படி என்ன செல்வாக்கு மோடியிடம் ?

மோடி இளம்பெண்ணை வேவு பார்த்த விசாரணை ஊத்தி மூடப்படுகிறது !

இளம்பெண் வேவு பார்ப்பு விவகாரத்தில், விசாரணையை முழுமையாக கைவிடுவதற்கான நடவடிக்கையை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மேற்கொள்கிறது.
இந்த விசாரணையைக் கைவிடும் திட்டம் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகம் விரைவில் முடிவு எடுக்கும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது, அவரது உத்தரவின் பேரில் இளம்பெண்ணை போலீஸார் வேவு பார்த்ததாக புகார் எழுந்தது.
நரேந்திர மோடிக்கு எதிராக கூறப்படும் இந்தப் புகார் குறித்து விசாரணை ஆணையம் அமைத்து விசாரிப்பது என்று கடந்த டிசம்பர் மாதம் 26-ம் தேதி மத்திய அரசு முடிவு செய்தது. ஆனால், அந்த ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதியை நியமனம் செய்யும் பணி தாமதமடைந்தது. பெரிய மனுஷாள்னா வீக்னஸ் இருக்கதாய்ன் செய்யும் .. இனி வேறு பல கூத்துக்களும் நடக்கும் பாக்கதாய்ன் போரீக !

அழகிரி : திமுகவுக்கு இனி வளர்ச்சி கிடையாது ! அது முடிந்து விட்டது.

மு.க.அழகிரி திமுக தலைமையின் நடவடிக்கை கள் கட்சியின் அழிவுப்பாதைக்கு வழி வகுப்பதாக உள்ளது. திமுக வுக்கு இனி வளர்ச்சி என்பதே கிடையாது என்று மு.க.அழகிரி கூறியுள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி யைத் தொடர்ந்து திமுகவில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. மாவட்ட நிர்வாகங்கள் 34-ல் இருந்து 65 ஆக அதிகரிக்கப்பட்டது. இந்நிலை யில் பழனி மாணிக்கம், கே.பி.ராமலிங்கம் உள்பட 33 பேர் கட்சி யில் இருந்து சனிக்கிழமை சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதுகுறித்து திமுக முன்னாள் தென் மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி ‘தி இந்து’வுக்கு அளித்த பேட்டி: திமுக நடவடிக்கை பற்றி?
இதுதான் அவர்கள் கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கை (சிரிக்கிறார்).

கேபி.ராமலிங்கம் : தி.மு.க.வில் இருந்து எங்களை மட்டும் நீக்குவதா?: கழகம் மேலும் ஸ்டாலின் பிடியில் ?

பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. படுதோல்வி அடைந்தது. 40 தொகுதியில் ஒரு தொகுதியில் கூட தி.மு.க. கூட்டணி வெற்றி பெறவில்லை.
தேர்தல் தோல்வி குறித்து ஆராய 6 பேர் குழுவை தி.மு.க. தலைமை அமைத்தது. அக்குழுவினர் அளித்த அறிக்கையை அடுத்த தேர்தல் பணி செய்யாதவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
முன்னாள் மத்திய மந்திரி பழனி மாணிக்கம், மாநில விவசாய அணி செயலாளர், கே.பி.ராமலிங்கம் எம்.பி, தர்மபுரி தெற்கு மாவட்ட பொருப்பாளரும், முன்னாள் அமைச்சருமான முல்லை வேந்தன், தர்மபுரி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் இன்பசேகரன் உள்பட 33 பேர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் கே.பி.ராமலிங்கம், முல்லைவேந்தன் ஆகியோர் மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளர்கள். கட்சி எடுத்த நடவடிக்கையால் மாவட்ட செயலாளர் ஆவேசம் அடைந்துள்ளனர். உண்மையா பாத்தா ஸ்டாலினை முதல்ல நீக்கணும் .தமிழ்நாட்டுக்கு ஒரு அதிமுகவே சாபக்கேடாகிவிட்டது ! இதுல வேற இரண்டாவது அதிமுக ! இது தேவையா?  திமுகவுக்கு வரும் அல்லது இனி வரப்போகும் பல தோல்விகளுக்கும் ஸ்டாலின்தான் காரணம்

வடகறி: போலி மருந்து பிசினஸில் போலிஸும் துணைபோவதை அம்பலப்படுத்தும்

ஆப்பிள் ஐஃபோனுக்கு ஆசைப்படும் ஒரு அப்பாவி ஹீரோ எப்படி விபரீத சிக்கலில் சிக்கி தவிக்கிறார் என்பதை நகைச்சுவை கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர் சரவணன் ராஜன். காமெடி திரில்லராக இருக்கும் இந்தப் படத்தின் ஹீரோவாக ஜெய்யை தேர்ந்தெடுத்த இயக்குனருக்கு முதல் பாராட்டுகள். எங்கேயும் எப்போதும், ராஜா ராணி படங்களைத் தொடர்ந்து இந்தப் படத்திலும் அசத்துகிறார் ஜெய்.நல்ல ஃபோன் வச்சிருந்தாதான் பொண்ணுங்க லவ் பண்ணுவாங்கன்னு அசட்டுத் தனமாக நண்பன் பாலாஜி சொல்வதை நம்புகிறார் ஜெய். 2000 ரூபாய் வைத்துக்கொண்டு ஃபோன் வாங்க நினைக்கும் ஜெய்க்கு ஊரையே அலறவைத்து சத்தம் போடும் கொரியன் போன் தான் கிடைக்கிறது.

இந்து முன்னணி பிரமுகர் கொலை: லாட்ஜ்களில் போலீசார் சோதனை

சென்னை அம்பத்தூர் எஸ்டேட் பஸ்நிலையம் அருகில், திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் சுரேஷ்குமார் (வயது 47), மர்ம கும்பலால் கடந்த 18-ந்தேதி இரவு வெட்டி கொலை செய்யப்பட்டார். சுரேஷ்குமார் கொலை வழக்கில், குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர். இந்தநிலையில் அம்பத்தூரில் உள்ள அனைத்து ‘லாட்ஜ்’களிலும் போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது வெளியூரில் இருந்து வந்து தங்கியிருக்கும் நபர்களின் விவரங்களை சேகரித்தும், அவர்களின் அடையாள அட்டைகளையும் போலீசார் பரிசோதனை செய்தனர். மேலும், தேடப்படும் கொலையாளிகள் யாரேனும் போலியான முகவரியில் தங்கியிருந்தனரா? என்றும் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.maalaimalar.com

சமையல் எரிவாயு விலையை உயர்த்த மத்திய அரசு திட்டம்?

புதுடில்லி : ரயில் கட்டண உயர்வை அடுத்து, சமையல் எரிவாயு சிலிண்டர் விலையையும், மாதம்தோறும், 10 ரூபாய் உயர்த்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த விலை உயர்வு குறித்த அறிவிப்பு, மத்திய பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவியேற்றது முதல், ரயில் கட்டணம் உயர்த்தப்படலாம் என்பதை, புதிய ரயில்வே அமைச்சராக பொறுப்பேற்ற, சதானந்த கவுடா கூறி வந்தார்.அதன்படி, நேற்று முன்தினம் ரயில் பயணிகள் கட்டணம், 14.2 சதவீதமும், சரக்கு கட்டணம், 6.5 சதவீதமும் உயர்த்தப்பட்டது. இந்த கட்டண உயர்வுக்கு, நாடு முழுவதும் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.இந்நிலையில், ரயில் கட்டண உயர்வை தொடர்ந்து, சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் உயர்த்தப்படலாம் என, தகவல் வெளியாகி உள்ளது.