வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு விடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
திரிணமூல்
காங்கிரஸ் கட்சியின் 6 அமைச்சர்கள் மத்திய அமைச்சரவையில் இருந்து விலகியதை
அடுத்து பல்வேறு முக்கியத் துறைகளுக்கு அமைச்சர்களை நியமிக்க வேண்டிய நிலை
ஏற்பட்டது. மேலும், மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக் மரணம் அடைந்ததால்
மேலும் ஒரு வெற்றிடம் ஏற்பட்டது.இதற்கிடையே, கூட்டணிக்
கட்சிகள் முக்கிய அமைச்சர்கள் பதவியைக் கேட்டு நிர்பந்திப்பதால், எந்தவொரு
முடிவையும் எடுக்க முடியாமல் மத்திய அரசு குழம்பியுள்ளது.இதற்கிடையே, சரியாக
செயல்படாத அமைச்சர்களை கட்சிப் பணியாற்ற அனுப்பிவிட்டு புதிய நபர்களை
அமைச்சரவையில் சேர்க்க சோனியா தரப்பு ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.<
மும்பை:
பெரும் நெருக்கடியில் சிக்கித் தவித்துவரும் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம்
தனது ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய சம்பள நிலுவைத் தொகையில் 3 மாத ஊதியத்தை
3 பகுதிகளாக தருவதாக அறிவித்துள்ளது. ஆனால் அதை ஏற்க முடியாது என்று
ஊழியர்கள் தெரிவித்து விட்டனர்.
செப்டம்பர் 30ம் தேதி முதல் கிங்பிஷர் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருகிறது. மேலும் அதன் சேவையும் முடங்கிப் போயுள்ளது. முதலில் நிறுவனத்தின் பைலட்டுகளும், என்ஜீனியர்களும் ஸ்டிரைக்கில் குதித்தனர். அடுத்து கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டது. இதனால் கடந்த ஒரு மாதமாக நிறுவன ஊழியர்கள் பெரும் தவிப்பில் உள்ளனர்.