வியாழன், 16 ஜூலை, 2026

OCI card holders இந்திய குடியுரிமையோடு இலங்கை குடிமக்களாக இருந்து இந்திய சேவையை செய்வார்கள்

 இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளியினருக்கு இந்திய அரசு தேடி தேடி வெளிநாட்டு இந்தியர்களுக்கான குடியுரிமை வழங்குகிறது!
பூரண இலங்கை குடியுரிமை உள்ள இந்திய வம்சாவளி மக்களை மீண்டும் ஒரு அரை இந்தியர்களாக மாற்ற முயல்கிறது. 
ஒரு மில்லியனுக்கு மேற்பட்டவர்களை இந்த திட்டத்தில் உள்வாங்க முடியும்
ஒரு வேளை அகண்ட பாரத கனவு திட்டமோ?
ஏற்கனவே இலங்கை அமைச்சரவையியே இந்திய குடியுரிமையாளர்கள் உள்ளனர் 
இவர்கள் யாருக்காக வேலை செய்கிறார்கள்? 
அடிக்கடி அஜித் தோவாலை ( முன்னாள் ரா அதிகாரி+ இந்நாள் பாதுகாப்பு ஆலோசகர்) பகிரங்கமாகவே சந்திக்கிறார்கள் 
ஆனால் தமிழகத்தில் உள்ள முகாம் வாழ் மக்களை ( 90 வீதம் இந்திய வம்சாவளி) இன்னும் அகதிகளாகவே இந்திய அரசு வைத்திருக்கிறது 



இதே போன்றொதொரு திட்டத்தை  வெளிநாட்டு வாழ் இலங்கை மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படும் போது இந்த இந்திய குடியுரிமையாளர்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள்
அதாவது இலங்கை நாடாளுமன்றத்திலும் இலங்கை அமைச்சரவையிலும் கூட இந்த இந்திய குடியுரிமையாளர்கள் பொறுப்பு வாய்ந்த பதவிகளில் இருந்து கொண்டு இந்திய அரசின் விருப்பத்தை நிறைவேற்றுகிறார்கள்  போலும்!  
அதாவது இலங்கை மக்கள் இலங்கையை விட்டு சென்றுவிட்டால்  தாய்நாட்டோடு எந்த தொடர்பும் இல்லாமல் அடியோடு  துண்டிக்க படவேண்டும் என்பதுதான் இந்த அரை இந்திய குடியுரிமையாளர்களின் விருப்பமாக இருக்கிறது 
எப்படி இருக்கிறது பார்த்தீர்களா?
இவர்கள் இந்திய குடியுரிமையோடு இலங்கை குடிமக்களாக இருந்து இந்திய சேவையை செய்வார்கள் 
ஆனால் இலங்கை பூர்வ குடிமக்கள்  ஒரு போதும் இலங்கையோடு எந்த தொடர்பும் வைத்து கொள்வதை இவர்கள் விரும்ப வில்லையாம் ?
ஒட்டகத்திற்கு இடம் கொடுத்தால் என்ன நடக்கும் என்பதற்கு இதை விட வேறு உதாரணம் தேவை இல்லை 
சிங்கள மக்களின் கவனத்திற்கு இது இன்னும் வரவில்லை என்பதுதான் இவர்களின் அதீத உற்சாகத்திற்கு காரணம் 

கருத்துகள் இல்லை: