சனி, 10 அக்டோபர், 2026

நாளை ஆட்சிக்கு வந்தாலும் திருந்த மாட்டீர்கள் நேற்று போல்தான் நடப்பீர்கள்

சுயமரியாதை சமூக நீதி சுயசிந்தனை இந்த மூன்றையும் உயர்த்தி பிடித்தால் ஆதிக்க வாதிகளுக்கு உன்னை பிடிக்காமல் போகும். தனிமனித விழுமியங்கள் பலருக்கு பிடிப்பதில்லையே. ஓரத்தில் பதுங்கி நின்று ஓலம் பாடுவார்கள். ஒய்யாரமாக நின்று ஜாலம் பேசுவார்கள். உன் மீது சேறு வீச ஆயிரம் பேர் வருவார்கள் ஆனால் காலம் உன்னை கரம் கூப்பி வாழ்த்தும்! காலம்தான் நீதிமான் art Ravi Palette
May be a doodle

 Kulitalai Mano :  திமுக வெற்றி பெற வேண்டும் என்ற வெறி எல்லாம் இப்போது எனக்கு வருவதில்லை
வெற்றி பெற்றால் மகிழ்வேன் 
வெற்றி பெற்று திமுக என்ன செய்யப்போகிறது ?
இலவசங்களை அள்ளி வீசும்
ஒரு 50 குடும்பங்கள் நாடு முழுவதும் கம்பீரமாக பவனி வரும் 
மன்னர்களைப் போல மந்திரிகள் நடப்பீர்கள் 
கோயில் கோயிலா ராசநடை நடப்பீங்க 
என் பக்திதான் ஆட்சி தந்தது என்பீர்கள் 
கட்சிக்காரனை மதிக்க மாட்டீர்கள் 
யார் திமுக அழிய வேண்டும் என ஒரு கொள்கையுடன் அலைகிறார்களாே அவர்களுடன் நட்பில் திரிவீர்கள்
மந்திரி அவன் மகன் மகள் என பதவிகளை நிரப்புவீர்கள் 
வேறு யாரையும் நிமிர்ந்து கூட பார்க்க மாட்டீர்கள் 
நாளை ஆட்சிக்கு வந்தாலும் திருந்த மாட்டீர்கள் 
நேற்று போல்தான் நடப்பீர்கள் 


நாட்டிற்கு மக்களுக்கு நன்மை செய்ய திமுக மட்டுமே அத்தாரிட்டி என சொல்லவில்லை.
யாரும் நன்மை செய்யட்டும் 
மக்கள் ஏற்கும் எவனும் நாட்டை ஆளட்டும்
திமுக பேரறிஞர் அண்ணா ஆரம்பித்து கலைஞரால் வளர்ந்த இயக்கம்
அது அமைதியாக இயக்கமாக இருக்கட்டும்
திமுக உடன்பிறப்புகள் திமுக விற்கு வாக்களிப்பார்கள் மாற மாட்டார்கள் 
மக்கள் வாக்களித்தால் ஆளுங்க 
வாக்களிக்கலைன்னா அமைதியா இருங்க 
துடிக்காதீங்க 

கருத்துகள் இல்லை: