திங்கள், 13 ஜூலை, 2026

புலிகளால் தீயிட்டு கொளுத்தப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்த வரலாறு

May be an image of text that says "இலங்கை -இந்திய ஒப்பந்தம் வந்த வரலாறு கௌராபதிப்பகம் களரா பதிப்பகம் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் imgflip.com imgflip com"

 ராதா மனோகர் : திரு அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கமும் இலங்கை இந்திய ஒப்பந்தமும்!
இலங்கை இந்திய ஒப்பந்தத்தை புலிகள் மூர்க்கத்தனமாக எதிர்த்தார்கள் 
அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டவர்களை எல்லாம் கொன்றொழிப்பதில் குறியாக இருந்தார்கள் 
அதில் ஒப்பமிட்ட ராஜீவ் காந்தியையே கொன்றார்கள் 
அந்த ஒப்பந்தத்தில் மக்களுக்கு எதிரான ஏதாவது ஒரு ஒற்றை விடயமாவது இருக்கிறதா?
இல்லையே!
அந்த ஒப்பந்தம் சாதாரண மக்களுக்கு ஒரு ஜனநாயக வெளியை பெற்று தந்தது 
இதுதான் புலிகளை அச்சுறுத்திய விடயம் 
சாதாரண  மக்கள் மகிழும்போதெல்லாம் பயந்து நடுங்குவார்கள் புலிகள் 
அந்த பயத்தின் காரணமாக அந்த சாதாரண மனிதர்களை கொல்வார்கள் 
சாதாரண மனிதர்களின் சுயசிந்தனை சுயமரியாதை எல்லாம் புலிகளுக்கு பெரும் பயத்தை கொடுத்தது 


மக்களை வெறும் கும்பல்களாகவே வைத்திருப்பது மட்டும்தான் அவர்களின் வியாபாரத்திற்கு ஏற்புடையதாக இருந்தது 
இந்த உளவியல் நோய்  எல்லா வெறுப்பு அரசியல்வாதிகளுக்கும் உண்டு 
மக்களை வெறும் கும்பல்களாக மட்டுமே வைத்திருந்தால் மட்டுமே இவர்களின் அதிகாரம் நிலைத்து நிற்கும்.
இலங்கை இந்திய ஒப்பந்தம் ஒரு மாநில சுயாட்சிக்கு உரிய எல்லா அம்சங்களையும் உள்ளடக்கி இருந்தது.
திரு அமிர்தலிங்கம் அவர்களின் தமிழ் தேசிய அரசியல்  அவ்வளவு நேர்மையானது அல்ல.
திரு ஜி ஜி பொன்னம்பலத்தை துரோகி என்று கூறி அதையே ஒரு ஒரு மூலதனமாக்கி திரு  எஸ் ஜெ வி செல்வநாயகம் திறந்த வெறுப்பு அரசியல் கடை அது!
இதை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தினார் திரு அமிர்தலிங்கம் அவர்கள்  
அதாவது இவர் அல்பிரட் துரையப்பா ஒரு துரோகி என்று வெறுப்பு அரசியல் வியாபாரத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தினார்  
இவர்களிடம் இருந்த துரோகி வியாபாரத்தை புலிகள் மொத்தமாக பறித்தெடுத்து  வந்தவன் போனவன் நின்றவன் படுத்தவன் ஆடு மாடு கோழி  குயில் மயில் என்று எல்லாவற்றையும் துரோகி துரோகி என்று வகை தொகையில்லாமல் கொலைவெறியாட்டம்  ஆடினார்கள்  
மொத்தமாக மக்களை முள்ளிவாய்க்காலில் கொண்டு போய் சேர்த்தார்கள் 
இந்த மொத்த தமிழ்த்தேசிய  விபசாரத்தை விட கேவலமான அரசியலில் 
தப்பி தவறி வந்த ஒரே ஒரு நல்ல விடயம்  இலங்கை இந்திய ஒப்பந்தம் மட்டுமே!
இந்த ஒற்றை காரணத்தால்  திரு அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் வரலாற்றில் இடம் பெற்றுள்ளார் 
ஆனால் இவரை கொன்ற கொலைக்கரர்களை  கூடவே வைத்திருந்து ஊட்டி ஊட்டி வளர்த்ததில் இவரின் பங்கும் பெரிதுதான் 
காலம் கடந்து உண்மையை புரிந்த கொண்ட பொழுது உண்மையாக காலம் கடந்து விட்டிருந்தது 
திரு அமிர்தலிங்கம் அவர்களை பிரபாகரன் கொன்றான் 
அவரின் அயராத உழைப்பின் பயனாக உருவான இலங்கை இந்திய ஒப்பந்தம் என்ற சொல்லே ஒரு தீண்டத்தகாத சொல்லாக  மாற்றினார்கள் புலிகள்.
திரு அமிர்தலிங்கம் வர்கள் இது பற்றி ஒரு நூல் எழுதியிருந்தார் 
அந்த நூலை  புலிகளும் புலிகளின் தமிழ நண்பர்களும் சேர்ந்து தேடி தேடி தீயிட்டு கொளுத்தினார்கள் 

ஒரு பிரதி கூட இல்லாமல் போனது.
பின்பு நண்பர் ரூபசங்கரியின் உதவியோடு ஒரு போட்டோபிரதியை பெற்று அதை டைப் செய்து திரு கௌரா ராஜசேகரனிடம் கொடுத்தேன்  
அவர் அதை ஒரு அழகிய நூலாக பொதுவெளிக்கு கொண்டுவந்தார் 
இந்த இடத்தில் அவருக்கு நன்றி சொல்ல நாம் கடமை பட்டிருக்கிறோம் 

யாழ்ப்பாண பொதுசன நூல் நிலைய தீக்கு எதிராக ஓயாமல் நீலி கண்ணீர் வடிப்போர் பட்டியலில் இருந்த பல தமிழ் தலைவர்கள் தொண்டர்கள் குண்டர்களும் இந்த நூலை தேடி தேடி கொழுத்தியவர்கள்தான்.
இந்த நூலை திரு கௌரா ராஜசேகரன் அவர்கள் பதிப்பித்து வெளியிட்டிருந்தார் 
இந்த நூலை நாங்களே முன்பு கொழுத்தி இருக்கிறோம் என்று அந்த தலைவர் திரு கௌரா அவர்களிடம் நேரடியாக கூறினார்.
கருத்து சுதந்திரத்திற்கு எவ்வளவு பெரிய மரியாதையை கொடுத்திருக்கிறார்கள் இவர்கள்? 
சில ஆண்டுகளுக்கு முன்பு திரு அமிர்தலிங்கம் அவர்களின் மகன் திரு பகீரதன் அவர்கள் ஆசிரியர் வீரமணி அவர்களை  யாழ்ப்பாணத்திற்கு அழைத்து தன் தந்தையின் புகழ்ஞ்சலி நிகழ்ச்சியை நடத்தி இருந்தார் 
இதில் வேடிக்கை என்னவென்றால் திரு அமிர்தலிங்கம் அவர்கள் எழுதிய நூலை புலிகளுக்கு அஞ்சி திரு பகீரதன் அவர்களே ஒதுங்கிதான் நின்றார் 
இந்த நூலை கொழுத்தியவர்களையே அழைத்து திரு அமிர்தலிங்கம் அவர்களுக்கு புகழஞ்சலி செய்தார்கள் 
இந்த செய்தியை எவர் மீதும் சேறு பூசும் நோக்கத்தில்  நான் குறிப்பிடவில்லை 
புலிகள் விதைத்து விட்டு போன உளவியல் வியாதி stockholm syndrome எவ்வளவு தூரம் பகுத்தறிவாளர்களை கூட பாதித்திருக்கிறது  என்பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்பதுதான் எனது நோக்கம்.
26 August 1927 – 13 July 1989 திரு அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களுக்கு புகழஞ்சலி 

கருத்துகள் இல்லை: