வியாழன், 16 ஜூலை, 2026

திரு அல்பிரட் துரைப்பா 100 பிறந்த நாள்! யாழ்நகர மக்கள் குடிக்கும் ஒவ்வொரு சொட்டு நீரிலும் இவரின் பெயர் எழுதப்பட்டிருக்கிறது


 ராதா மனோகர்
: திரு அல்பிரட் துரைப்பா என்ற வாராது வந்த மாமணிக்கு இன்று  100 பிறந்த நாள் 
இலங்கையின் மொத்த தமிழ் அரசியலும் அல்பிரட் துரைப்பா என்ற மனிதனின் முன்னால்  நிரந்தர குற்றவாளியாக கூனி குறுகி நிற்கிறது.
எந்த காலத்திலும் எந்த நியாயமும் கூற முடியாதவாறு குற்றவாளி பட்டத்தை சுமந்து கொண்டு நிற்கிறது இலங்கை தமிழ் அரசியல்
இனி வரும் சந்ததிகளுக்கும் கூட இந்த தமிழ் தேசிய அரசியலானது விட்டு சென்றது,
வெறும் துப்பாக்கி குண்டுகள் மட்டுமே
உலகின் எந்த இனத்திற்கும் இந்த கேவலம் வரக்கூடாது.
தமிழ் என்றால் என்னவென்று தெரியாது
 தேசியம் என்றாலும் என்னவென்றும் தெரியாது 
அரசியல் என்றாலும் என்னவென்றும் தெரியாது 
தெரிந்தது எல்லாம் வெறும் துப்பாக்கிகளும் அதன் குண்டுகளும் மாத்திரமே.
தங்களுக்கு தாங்களே சவக்குழி தோண்டுவதை எல்லாம்  வீரமென்றும் தீரமென்றும் அரசியல் என்றும் ரசித்து ரசித்து  ஊழிக்கூத்து ஆடியது தமிழ் தேசியம்!
இவர்களை உசுப்பேத்தி உசுப்பேற்றி பொழுது போக்கிய தமிழக தமிழ் அரசியல்வாதிகள் 
இவர்களை எல்லாம் வரலாறு என்றென்றைக்கும் தூற்றி கொண்டே இருக்கும்.
திரு அல்பிரட் துரையப்பா என்ற மனிதனின் சமூக பணிக்கு இணையாக இன்றுவரை எந்த புழு பூச்சி கூட உருவாகவில்லையே.
திரு அல்பிரட் துரையப்பா என்ற தேவபுத்திரனை நேரடியாகவும் மறைமுகமாகவும் கொன்ற ஒருவருக்கும்  கூட நல்ல சாவு வரவில்லை என்பதையும்  நாம் இங்கே பதிவு செய்து கொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் 
காலம் உங்களை கவனித்து கொண்டுதான் இருக்கிறது!
யாழ்ப்பாண நகரில் உள்ளவர்கள் குடிக்கும் ஒவ்வொரு சொட்டு தண்ணீரிலும் அல்பிரட் துரையப்பாவின் பெயர் எழுதப்பட்டு இருக்கிறது 
இன்று  யாழ்ப்பாண நகரை பார்க்கும் ஒவ்வொரு ஜோடி கண்களுக்குள்ளும் அல்பிரட் துரையப்பாவின் அழகிய முகம் மின்னி கொண்டிருக்கிறது,
இன்னும் எத்தனையோ சாதனை சிகரங்களை எல்லாம் தொட்டு விட்டு சென்றிருக்கிறார்!
அவற்றை எல்லாம் காலம் பதிவு செய்துகொண்டுதான் இருக்கிறது See less

கருத்துகள் இல்லை: