செவ்வாய், 6 அக்டோபர், 2026

யாழ்பாணத்தில் ஆசிரியை கொலை , தாய் படுகாயம் – தப்பிச் சென்ற வாலிபர் ரயிலில் பாய்ந்து உயிரிழப்பு!

May be an image of one or more people, people smiling and text

  ilakkiyainfo.com  : யாழ்ப்பாணத்தில் இளம் பெண்ணொருவரை கத்தியால் குத்தி கொலை செய்த பின் அப்பெண்ணின் தாயாரை கத்தியால் குத்தி படுகாயத்திற்கு உள்ளாக்கிய இளைஞன் புகையிரதம் முன்பாக பாய்ந்து உயிரை மாய்த்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 
உயிரிழந்த பெண்ணின் நண்பர் ஒருவருக்கும் பெண்ணின் தாயாருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதன் காரணமாக குறித்த பெண்ணை கொலை செய்துள்ளதோடு தாயாரை கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கோவில் வீதியில் உள்ள வீடொன்றினில் அத்துமீறி நுழைத்த இளைஞன் வீட்டில் இருந்த இளம்பெண் மீது கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டதில் குறித்த பெண் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். 


May be an image of text
அதேவேளை குறித்த பெண்ணின் தாயார் மீதும் இளைஞன் கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்டதில், தாயார் படுகாயமடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தாக்குதலை மேற்கொண்ட இளைஞன் அங்கிருந்து தப்பி சென்று அரியாலை பகுதியில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு தபால் புகையிரதம் முன் பாய்ந்து உயிரை மாய்ந்துள்ளார். 

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள

கருத்துகள் இல்லை: