minnambalam.com - Mathi : தாராபுரம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வாக்குப் பதிவு தொடங்கும் நிலையில், தவெக வேட்பாளர் சத்தியபாமா “ரூ.31 கோடி செலவு செய்தேன்” என்று பேசுவதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சத்தியபாமா, பின்னர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு விஜய்யின் தவெகவில் இணைந்தார். தற்போது தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளராக போட்டியிட்டுள்ளார். தாராபுரம் தொகுதியில் இன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் சத்தியபாமா பேசுவதாக ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் ஒருவருடன் உரையாடும் சத்தியபாமா, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து பேசுகிறார். அப்போது, “எடப்பாடி பத்து பைசா எடுக்க மாட்டாரு. பத்து பைசா எடுக்க மாட்டாரு. போன தடவ 31 கோடி செலவு…” என்று சத்தியபாமா கூறுகிறார்.
இந்த வீடியோவை முன்வைத்து, “லாபம் இல்லாமலா மக்களுக்கு துரோகம் செய்து கட்சி மாறியிருப்பார்.! துரோகத்திற்கு முடிவுரை எழுதிட தாராபுரம் மக்களே தயவுசெய்து சிந்தித்து வாக்களியுங்கள்.!” என அதிமுகவினர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக