Ancy Bency : திமுகவிற்கு அறிவுரை சொல்ற அளவிற்கு எனக்கு தகுதி இல்லை அதனால் ஒரு சிறிய வேண்டுகோள்:
மொதல்ல திமுக உறுப்பினர் சேர்க்கையை ஓப்பன் சோர்சா மாத்துங்க, கிளை நிர்வாகி சொன்னதான் சேர்ப்பேன் என்று இருக்கும் கேவலமான சிஸ்டத்தை மாத்துங்க
அவனுங்க பண்ற ஆட்டம் தாங்க முடியல...
10 வருடத்திற்கு ஒரு முறை இளைஞர்களை கட்சியில் பார பட்சமின்றி எந்த வித கட்டுபடுமின்றி சேருங்க, கொள்கை தெரியுதோ இல்லையோ சேருங்க..
கொள்கை கற்பிக்கலாம்
விசிக, பாமக கட்சி ஆளுங்களுக்கு நம் ஆளுங்க தெரிஞ்சே உறுப்பினர் அட்டை வாங்கி கொடுக்கறாங்க அதை குறைங்க...
தற்புகழ்சியை விடுங்க, நாங்க அத செஞ்சோம் இதை செஞ்சோம் என்று சொல்வதை குறைச்சுகோங்க, சில நேரங்களில் அமைதி நமக்கு நன்மையை தரும்.....
எதிரியை பழி வாங்குங்க, நம்மளை தொட்டா இவன் எப்போ ஆட்சிக்கு வந்தாலும் திருப்பி கொடுப்பான் என்ற பயம் இருக்கணும்....
மக்கள் சேவையை அவர்களின் தேவைக்கு மட்டும் செய்ங்க , தேர்தலில் எப்படி வெற்றிக் பெறுவது என்று மட்டும் யோசியுங்கள்... அஜித் உங்களை எதிர்த்து பேசி விட்டார் என்று நீங்க விஜய்க்கு சன் டிவி மூலமா Free PR வேலை செஞ்சு அனுபவிப்பது போதும்....
கடைசியா, அரசியல் செய்ங்க பாரபட்சம் இல்லாம, நேர்மையா இருக்கணும் சரியா இருக்கணும் என்ற மைன்ட் செட் ல இருந்து வெளிய வாங்க....
காலம் ஒரு கேவலத்தை நம் கண்ணில் காட்டி உள்ளது அந்த கேவலத்தை அடிக்க அரசியல் நாகரீகம் பார்க்காமல் இறங்கி வர வேண்டும்
காலம் மாறிக்கொண்டிருக்கிறது அதற்கு ஏற்ப நம்மை தகவமைப்பு செய்து கொள்ளா விட்டால் வாழ்ந்து கெட்ட குடும்பம் போல் ஆகிவிடுவோம்....
இது ரொம்ப முக்கியம் ஆரியத்தை எதிர்த்து பேசுவதை விடுத்து ஆட்சிக்கு வந்த உடன் ஆரிய கொள்கையை அடிமட்டத்தில் எப்படி அழிப்பது என்று யோசியுங்கள், திமுக ஆட்சிக்கு வந்த பின்பு நீங்கள் ஆரியத்தை எதிர்த்து பேசும்போதெல்லாம் அவர்கள் இந்துக்களுக்கு எதிரான பேசுகிறார்கள் என்று அவபெயரை உருவாக்குகிறார்கள், எதிர்த்து பேசுவதை விடுத்து அமைதியாக அழிக்க முயலுங்கள்...
ஆரியம் என்பது தான் என்ற ஆதிக்க மனப்பான்மையில் இருக்கும் இந்துத்துவம் இந்துக்கள் அல்ல
கலைஞர் சொன்னது போல் திமுக தொண்டர்கள் பெரும்பான்மையினர் இந்துக்களே.
பத்திரிக்கை
தொலைக்காட்சி
பேஸ்புக், ட்விட்டர்,
என்று மாறி மாறி அரசியல் களம் மாறி இன்று influncer என்று நிலை ஒன்று வந்துள்ளது, அவர்களின் வேலையே பொதுமக்களுடன் எப்போதும் இருப்பது போல் இருந்து தேர்தல் நேரத்தில் குறிப்பிட்ட கட்சிக்கு வாக்கை கேட்பது தான், திமுக அதற்கு ஏற்ப மாற வேண்டும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக