புதன், 15 ஜூலை, 2026

இலங்கை நாடு எப்படி உருப்படும்? படாது

Rajethan Makeswaran :உள்ளூர் விவசாயிகளிடம் நெல் விற்க முடியாமல் மற்றும் அதிக அளவில் இருக்க அரசு இவ்வளவு நெல்லை இறக்குமதி செய்ய காரணம் என்ன என நினைக்கிறீர்கள்?? தவறு 1.அரசின் மீதா? 2.விவசாயத் திணைக்களத்திலா? 3. கம நல சேவை திணைக்களத்திலா? 4.விவசாய அமைச்சிலா? 5.விவசாயிகளிலா? 6. நுகர்வோர் இலா?

May be an image of text that says "21.06.2026 40.7% %. Madawala News 0 f 078 965 2989 கடந்த ஆண்டில் அரிசி இறக்குமதி 40.7% வீதத்தினால் அதிகரிப்பு!!" ராதா மனோகர் : இதுதான் இறக்குமதியாளர்கள் மாபியாவின் கைங்கரியம் 
உள்ளூர் உற்பத்திக்கு போட்டியாக இறக்குமதியாகும் பொருட்களுக்கு அந்நிய செலாவணி எப்படி கிடைக்கிறது 
அரபு வீடுகளில் வாழ்க்கையை தொலைக்கும் பெண்களும் உலகம் முழுவதும் குளிர் வெயில் கடும்பனிகளில் காய்ந்து சருகாகி போனவர்களும் இலங்கைக்கு கொண்டுவரும் பணம்தான் அந்நிய செலாவணி 


இதை அரசும் அதிகாரிகளும் லஞ்சம் கமிஷன் எல்லாம் வாங்கி கொண்டு இறக்குமதியாளர்களுக்கு வாரி வாரி வழங்குகிறார்கள் 
அவர்கள் உலக நாடுகளில் அடிமாட்டு விலைக்கு வாங்கும் பொருட்களை உள்ளூர் உற்பத்திக்கு போட்டியாக 
இறக்குமதி செய்து கொட்டுகிறார்கள் 
இங்கே எவனும் நேர்மையாளன் அல்ல 
எல்லோரும் கொள்ளைக்காரர்கள்தான் 

இறக்குமதி என்பது மக்களின் மருத்துவம் மற்றும் உள்ளூர் அபிவிருத்தி போன்ற துறைகளுக்கு உதவி செய்வதாக மட்டுமே இருக்க வேண்டும் 
இறக்குமதியாளர் மாபியாயவும் அரசியல் மாபியாவும் கூட்டு கொள்ளை 
உள்ளூர் நெல் விற்பனையாகாமல் தேங்கி நிற்கிறது 
இறக்குமதியாகும் நெல்லுக்கு அந்நிய செலாவணி வாரி வீசப்படுகிறது 
இந்த நாடு எப்படி உருப்படும்?

கருத்துகள் இல்லை: