hindutamil.in - தமிழினி : சென்னை: அஜித்குமார் காவல் மரணத்தின்போது பொறுப்பேற்று மன்னிப்பு கேட்டார் அன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின். அப்போது ‘சாரி வேண்டாம் சார். எங்களுக்கு நீதி வேண்டும்' என விஜய் சொன்னார். இன்று 'ரீல்ஸ் வேண்டாம் எங்களுக்கு நீதி வேண்டும்' என மக்கள் கேட்கின்றனர் என திமுக வழக்கறிஞர் அணி இணை செயலாளர் பரந்தாமன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “நாகர்கோவிலில் விசாரணைக்கு சென்ற மாற்றுத்திறனாளி சபரிவர்மன் மரணமடைந்துள்ளார். நீதிமன்றக் காவலில் 10-ஆம் தேதி உடல் நலத்துடன் நன்றாக இருந்த சபரிவர்மனை நேரில் பார்த்த உறவினர்கள், 13-ஆம் தேதி இறந்திருக்கிறார் என்ற செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்தச் செய்தியும், பல போராட்டங்களுக்கு பிறகே வெளிப்பட்டுள்ளது. இதனைக் கண்டித்து அவரது உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அஜித்குமார் காவல் மரணத்தின்போது பொறுப்பேற்று மன்னிப்பு கேட்டார் அன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின். அப்போது ‘சாரி வேண்டாம் சார், எங்களுக்கு நீதி வேண்டும்’ என விஜய் சொன்னார். இன்று 'ரீல்ஸ் வேண்டாம் எங்களுக்கு நீதி வேண்டும்' என மக்கள் கேட்கின்றனர்.
தமிழ்நாட்டில் நீதிமன்றக் காவலில் இருந்த சபரிவர்மனின் திடீர் மரணம், மக்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிற வேளையில், பெரம்பூர் வீதிகளில் வலம்வருவது போல, முதல்வர் விஜய் சினிமா ஷூட்டிங் நடத்தி வருகிறார்.
நீதிமன்றக் காவலில் உயிரிழந்துள்ள சபரிவர்மன் குறித்து உளவுத் துறை, முதல்வருக்கு தெரியப்படுத்திய நிலையில், அது குறித்து வாய் திறக்காமல், திசை திருப்பும் அரசியலில் ஈடுபட்டு வருகிறார் விஜய்.
தவெக ஆட்சிப் பொறுப்பேற்று 60 நாட்களில் போலீஸ் சித்ரவதையால் 4 மரணங்கள் நடந்துள்ளன. விஜய் அரசு மீது கொலைப்பழி சுமத்துகிறோம். அதற்கு எங்களுக்கு தார்மிக உரிமை இருக்கிறது.
சாமானியருக்கு ஒரு சட்டம், தவெகவினருக்கு ஒரு சட்டமா? கரூரில் திமுகவை, அதிமுகவை ஓடுகிறார்கள் என்றார். இப்போது விஜய்தான் இப்பிரச்சினைகளைக் கண்டு ஓடிக் கொண்டிருக்கிறார். எங்கள் ஆட்சியில் லஞ்சம் , ஊழல் இல்லை என சொல்கிறார்கள். அதற்காக அரசு அதிகாரிகளை காவு கொடுக்கிறார்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக