tamil.oneindia.com -Halley Karthik : சென்னை: கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக அதிக அளவில் வெற்றிப்பெற்ற தொகுதிகளில் தோராயமாக 30,000 வாக்காளர்கள் SIR நடவடிக்கை மூலமாக நீக்கப்பட்டிருப்பதாக 'தி இந்து பிசினஸ் லைன்' தெரிவித்திருக்கிறது. அப்படி எனில், திமுக பலமாக உள்ள தொகுதிகளை மட்டும் குறிவைத்து அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்டார்களா? என்று பலரும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.
SIR நடவடிக்கை என்பதே தேவையில்லாத ஆணி என்று எதிர்க்கட்சிகள் கூறி வந்த நிலையில், தற்போது 'தி இந்து பிசினஸ் லைன்' வெளியிட்டிருக்கும் டேட்டா விவாதங்களை கிளப்பியிருக்கிறது.
Businessline Study
அதாவது 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக வென்ற தொகுதிகளில் தான் சராசரியாக அதிகபட்சமாக 31,000 வாக்காளர்களின் பெயர்கள் SIR மூலம் நீக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதிமுக 2021ல் வெற்றி பெற்ற தொகுதிகளில் சராசரியாக 27,000 வாக்காளர்கள் மட்டுமே நீக்கப்பட்டிருக்கின்றனர் என 'தி இந்து பிசினஸ் லைன்' கூறியிருக்கிறது.
சாதாரணமாக பார்த்தால் இரண்டுக்கும் இடையில் வெறும் 4,000 வாக்குகள்தானே வித்தியாசம் என்று தொன்றலாம். ஆனால் பல தொகுதிகளில் இந்த எண்ணிக்கைதான் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் எண்ணிக்கையாக இருந்திருக்கிறது.
உதாரணத்திற்கு திருப்பத்தூரை எடுத்துக்கொள்ளுங்கள். இங்கு வெறும் 1 வாக்கு வித்தியாசத்தில் திமுகவின் மூத்த அமைச்சராக இருந்த பெரிய கருப்பன் தோற்கடிக்கப்பட்டார். வேப்பனஹள்ளியில் 138 வாக்குகள், கன்னியாகுமரியில் 214 வாக்குகள், போளூரில் 227 வாக்குகள், திருக்கோவிலூரில் 285 வாக்குகள், பரமத்தி வேலுரில் 308 வாக்குகள், குளித்தலையில் 579 வாக்குகள், கும்பகோணத்தில 679 வாக்குகள், பழனியில் 693 வாக்குகள் என.. மொத்தம் 32 தொகுதிகளில் திமுக வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறது.
சாதாரண ஏழை எளிய மக்கள், பழங்குடியினர், சிறுபான்மையினர் மற்றும் விளிம்புநிலை மக்களின் பெயர்கள் திட்டமிட்டு நீக்கப்பட்டிருப்பதாகவும், இவர்கள் அனைவரும் காலங்காலமாக திமுகவின் அசைக்க முடியாக வாக்கு வங்கியாக இருந்தார்கள் என்றும் திமுக குற்றம்சாட்டியுள்ளது.
மறுபுறம் காங்கிரஸ் இந்த விஷயத்தில் வித்தியாசமான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது. அதாவது தேசிய அளவில் ராகுல் காந்தி வாக்கு திருட்டு குறித்து காட்டு கத்து கத்திக்கொண்டிருக்கிறார். ஆனால் வாக்கு திருட்டு எந்த அளவுக்கு நடந்தது என்பதை எதிர்க்கட்சிக்ள அறிவியல் பூர்வமாக நிரூபிக்க வேண்டும் என்று திமுக மீது கையை காட்டி சைஸாக ப.சிதம்பரம் நகர்ந்துக்கொண்டார்.
மட்டுமல்லாது, வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர்கள் நீக்கப்பட்டது முற்றிலும் தவறானது என்று கூறும் அவர், அந்த பெயர்கள் மீண்டும் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.
எது எப்படி இருப்பினும், திமுகவின் கோட்டைகளை குறி வைத்து வாக்காளர்கள் அதிக அளவில் நீக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் உரிய பதில் அளிக்க வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக