![]() |
![]() |
முதலமைச்சர் பங்கேற்கும் அரசு விழா தொடங்கி தவெகவின் கட்சி விழாக்கள் வரை பத்திரிகையாளர்களுக்கு அனுமதியில்லை. இப்படி துளியும் பத்திரிகையாளர்களை மதிக்காத ஒரு அரசு தான் விஜயனை விசாரிப்பதன் மூலம் பத்திரிகையாளர்களாகிய நமக்கு மிரட்டல் விடுக்கிறது.
பட்டு வேட்டி சட்டையில் வந்தார், டிபன் பாக்ஸ் கொண்டு வந்தார் என்ற கணக்கில் தான் ஏற்கனவே ஊடகங்கள் இயங்கிக் கொண்டிருக்கிறது. பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூட கேள்வி எழுப்பினால் நீ யார் , எந்த டிவி என்ற நோக்கில் தான் சில அரசியல் தலைவர்களின் பதில் இருக்கிறது. சம்மந்தப்பட்ட பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கான பதில் வருவதில்லை. ஊடக விவாதங்களில் பங்கு பெறும் பத்திரிகையாளர்கள் மீதும் இதே தாக்குதல். அதன் நீட்சி தான்
பத்திரிகையாளர் விஜயன் மீதான விசாரணை சம்பவம்.
பத்திரிகையாளர் என்பவர் பல்வேறு நபர்களிடம் பேசுவதும் செய்திகளை சேகரிப்பதும் அவர்களது தொழில் சார்ந்த விவகாரம். அதற்காக அந்த நபர்கள் செய்யும் குற்றங்களுக்கு எல்லாம் பத்திரிகையாளர்கள் பொறுப்பேற்க முடியுமா.?
இன்று விசாரணை என்ற பெயரில் அலைக்கழிக்கப்படும் பத்திரிகையாளர் விஜயன்; நாளை நம்மில் யாராக வேண்டும் என்றாலும் இருக்கலாம் என்று எச்சரிக்கை விடுக்கிறது.
பத்திரிகையாளர்கள் மீது இதுவரை சார்பு நிலை சாயம் அடித்து இயங்க விடாமல் முடக்கினார்கள்.
இப்போது பத்திரிகையாளர்களை மிரட்ட விஜயனிடம் விசாரணை என்ற பெயரில் சர்வாதிகாரத்தை கையில் எடுத்திருக்கிறது இந்த அரசு. அதற்கு வன்மையான கண்டனங்கள்.
போர்முனை சூழலில் செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளர்களுக்கு கூட சட்டப் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
ஆனால் இங்கே தான் தினம் தினம் பத்திரிகையாளர்கள் பல்வேறு தாக்குதல்களுக்கு ஆளாகின்றனர். போதாததற்கு சமூக வலைதளங்கள் வழியாக பத்திரிகையாளர் மீது ஏவப்படும் வன்ம குடோன்கள் வேறு வகை. இதன் நீட்சியாக பத்திரிகையாளர்கள் எதிர்கொள்ளும் உளவியல் பாதிப்புகளை இங்கே சொல்லிமாளாது.
சட்டப் பாதுகாப்பு,பொருளாதார பாதுகாப்பு என்ற எதுவுமின்றி இங்கு பத்திரிகையாளர்களாக வாழ்வதே சவால் தான். இத்தகைய அனைத்து சவால்களையும் எதிர் கொண்டு 20 ஆண்டுகளுக்கு மேலாக பத்திரிகையாளராக பணியாற்றும் விஜயன் மீது தமிழ்நாடு அரசும் , முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையும் விசாரணை என்ற பெயரில் நடத்துவது அப்பட்டமான ஒடுக்குமுறை


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக