ஞாயிறு, 28 ஜூன், 2026

கிரிக்கெட் மாணவிகளை வன்புணர்ந்த கேரளா பயிற்சியாளருக்கு 99 ஆண்டுகள் சிறை

ilakkiyainfo.com  :கிரிக்கெட் பயிற்சி பெற வந்த இளம் வீராங்கனைகளை மிரட்டிப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், பயிற்சியாளர் மனு (40) என்பவருக்குத் தொடர்ச்சியாகக் கடும் தண்டனைகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
வள்ளக்கடவு பகுதியைச் சேர்ந்த மனு, கேரள கிரிக்கெட் சங்கம் சார்பில் பயிற்சியாளராகப் பணியாற்றி வந்தார். கடந்த 2018-ஆம் ஆண்டு, பயிற்சிக்கு வந்த வீராங்கனைகளை மிரட்டிப் பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அதை வீடியோவாகவும் எடுத்து மிரட்டியுள்ளார். பாதிக்கப்பட்ட வீராங்கனைகள் அளித்த புகாரின் பேரில், திருவனந்தபுரம் கண்டோன்மெண்ட் பொலிஸார் அவர் மீது 6 போக்சோ (POCSO) வழக்குகளைப் பதிவு செய்து கைது செய்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்து வரும் திருவனந்தபுரம் போக்சோ விரைவு நீதிமன்ற நீதிபதி அஞ்சு மீரா பிர்லா, குற்றவாளி மனுவிற்குத் தொடர்ச்சியாகத் தண்டனைகளை வழங்கி வருகிறார்:

    முதல் வழக்கு: 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை.

    இரண்டாவது வழக்கு: 35 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ. 66,000 அபராதம்.

    மூன்றாவது வழக்கு: 48 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ. 79,000 அபராதம்.

தற்போது வழங்கப்பட்ட தண்டனைகள், முந்தைய தண்டனைகள் முடிந்த பிறகு தொடங்கும் வகையில் அமைந்துள்ளன. இதன் மூலம், இதுவரை 3 வழக்குகளில் அவருக்கு மொத்தம் 99 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், நான்காவது வழக்கிலும் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான தண்டனை விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

கருத்துகள் இல்லை: