ராதா மனோகர் : தமிழ்நாட்டில் எந்த தலைவருக்கும் கிடைக்காத வைரத்தூண்களுக்கு நிகரான தொண்டர்கள் கிடைத்தது கலைஞருக்குதான்!
இது எப்படி நிகழ்ந்தது என்பது மிக பெரிய ஆய்வுக்கு உரியது.
ஏற்றங்களும் இறக்கங்களும் கணக்கு வழக்கில்லாமல் கலைஞரை புரட்டி போட்ட அளவு வேறெந்த தலைவரையும் புரட்டி போடவில்லை.
இவ்வளவு ஏற்ற இறக்கங்களை சந்தித்தும் ஏதோவொரு விடயம் கலைஞரின் அத்திவாரமாக நின்றிருக்கிறது.
எந்த புயலிலும் அடித்து கொண்டு போகாத ஒரு உறுதியான பண்பு கலைஞரை காப்பாற்றி கொண்டே வந்திருக்கிறது.
அந்த பண்புதான், இன்று கூட கலைஞர் என்று சொன்னதுமே கண்கலங்கும் தொண்டர்களை கலைஞருக்குக் பெற்று தந்திருக்கிறது.
மனிதர்கள் அடிப்படையில் அன்பானவர்கள்தான்
சக மனிதர்கள் மீது ஒரு இனம்புரியாத இரக்கம் எல்லோருக்கும் உண்டு
அது வெளிப்படுவதில்லையே தவிர அது இல்லையென்பதில்லை.
சமூகத்தின் நாதியற்ற மனிதர்களின் உயர்வுக்கு தன்னால் ஒரு சிறு கல்லைத்தானும் நகர்த்தி வைக்க முடியுமா என்று ஓயாமல் சிந்தித்தவர் கலைஞர்
அது மட்டுமல்ல தனக்கு வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் கொஞ்சம் கூட கண்துஞ்சாது அவற்றை செயல்படுத்தி காட்டியவர் கலைஞர்
அப்படி ஒவ்வொரு மனிதர்களின் வாழ்வையும் கலைஞர் தொட்டபோதெல்லாம் மனித நேயர்களின் உள்ளத்தை அவர் தொட்டார்.
ஒவ்வொரு மனிதர்களுக்குள்ளும் உறைந்து கிடைக்கும் அந்த மானிட நேயத்தை கலைஞர் தட்டி எழுப்பி கொண்டே இருந்தார்.
கலைஞர் நிறைவேற்றிய அத்தனை திட்டங்களிலும் ஊர் பேர் தெரியாத பல மனிதர்களின் வாழ்வுக்கு வசந்தம் வீசப்பட்டிருக்கும்.
கலைஞரை காதலிக்கும் கூட்டத்தில் இந்த மானுட நேயர்களை அதிகமாக காணலாம்
கலைஞரின் தமிழ் வீச்சால் கவர பட்டவர்களை விட கலைஞரின் மானுட நேயத்தால் கவரப்பட்டவர்கள்தான் அதிகம்.
எல்லாவற்றிலும் மேலாக கலைஞர் தந்து விட்டுப்போன இந்த மானிட மரபை கடந்த திமுக ஆட்சியின் போது திரு மு க ஸ்டாலின் அவர்கள் கொஞ்சம் கூட தடம் மாறாமல் தொடர்ந்திருக்கிறார்
இந்த கலைஞரின் லெகசியை காப்பாற்றுவது இலகுவான காரியம் அல்ல
அந்த பாரிய பணியை நிறைவேற்றிய திராவிட மாடல் அரசுக்கு மக்கள் என்றும் நன்றி உடையவர்களாக இருப்பார்கள் .
இந்த மானுட நேயர்கள் இருக்கும் வரை கலைஞரின் காதலர்கள் தொகை கூடிக்கொண்டே போகும்.
மறைந்த சட்டமன்ற உறுப்பினர் ஜெ அன்பழகன் இந்த தொண்டர் கூட்டத்தில் ஒருவர்
அவர் சட்டமன்றத்தில் பேசும் பொழுது ஒரு முறை ,
"சாதாரணமா வரல்லைடா திமுககாரன்" என்று பேசிய அந்த பேச்சு திமுக தொண்டர்களுக்கே ஒரு வரைவிலக்கணமாக இன்று பட்டி தொட்டி எல்லாம் ஒலிக்கிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக