வெள்ளி, 3 ஜூலை, 2026

திமுக தோத்தது திமுகவிற்கு தெரியும்.. -ஈழப்போராட்டத்தை காண்பித்துதான் இயக்கங்களை வளர்த்து கொண்டிருந்தோம் - தோழர் மனோஜ்

 ராதா மனோகர் : இன்றைய தமிழர்கள் பெரிதும் இனவாதிகள்தான் 
இதை கூறினால் பலருக்கும் கோபம் வரும் 
நாம்தானே யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற உலக மானுடவியல் பேசியவர்கள் என்று ஒரு பதில் சொல்வார்கள்.
தமிழர்களிடையே எவ்வளவு மோசமான நோயிருந்திருந்தால்,
 இப்படி ஒரு ஸ்ட்ராங்கான மருந்தை முன்னோர்கக்ள் கண்டு பிடித்திருப்பார்கள்,
என்று நாம் பதிலடி கொடுக்கலாம்?
நாம் தமிழர்கள் ரேசிஸ்ட் தான்!   
ஆனால் இதுதான் உண்மை .
திராவிட சித்தாந்தம் இனவாதத்திற்கு நேரெதிரான கோட்பாடு 
தமிழர்களின் இனவாத சிந்தனைக்கு தீனி போட்டு வளர்த்தது தமிழ் தேசியம் என்ற  முகமூடியை போட்டுகொண்டு வந்த வெறுப்பு அரசியல் வியாபாரிகள்தான்.
இன்று இந்த வெறுப்பு அரசியலின் பக்க விளைவுகள் மிக மோசமானது 
இவர்களின் முதல் குறி சுயசிந்தனை 
தமிழ் தேசியர்களிடம் இது சுத்தமாக இல்லை 
இவர்கள் ஒரு வெறுப்பு அரசியல் பஜனையே கோஷ்டிதான் 
அடுத்ததாக இந்த தமிழ் அரசியல் வியாபாரிகள் குறிவைத்தது  சுயமரியாதை கோட்பாட்டைதான் 


இன்று ஒரு வெறும் நடிகன் .. எந்தவித அரசியல் கோட்பாடும் இல்லாத, சொந்த குடும்பத்தை கூட துரத்தி விட்ட ஒரு வெத்து வேட்டை மக்கள் தெரிவு செய்திருக்கிறார்கள் 
என்னால் இங்கே யார் பதர்கள்?
சந்தேகமே இல்லாமல் மக்களில் பெரும்பாலோர் பதர்களேதான்.
இவர்களை வெறும் பதர்களாக்கிய அரசியல் எது? 
இதனால்தான் இன்று ஜாதி மதம் போன்ற விஷக்காய்ச்சல் தமிழர்களின் வீடுகள் தோறும் செழித்து வளர்ந்து விட்டது. அது ஆணவ கொலை வரை நீள்கிறது 
இவர்களின் சமூக நீதி என்பது யார் உண்மையான தமிழர்கள் என்ற டி என் ஏ  ஆய்வில்தான் உயிர் வாழ்கிறது 
எவ்வளவு கேவலமான வீழ்ச்சி இது?   
தோழர் மனோஜ்  அறிவு நாணயம் உள்ள  திராவிட சித்தாந்த வாதி. 
இவரின் காணொளியில் ஒரு பலவிடயங்களை கூறியிருக்கிறார் 
இவரின் பேச்சில் ஒரு பகுதி :
2009 வரை ஈழப்போராட்டம் என்ற ஒன்று இருந்தது 
ஆனால் உண்மையில் ஈழப்போராட்டம் என்ற ஒன்றை காண்பித்துதான் நாம் நமது இயக்கங்களை வளர்த்து கொண்டிருந்தோம் 
அதன் பிறகு இழைஞர்களை ஈர்ப்பதற்கு நம்மிடம் கன்டன்ட் இல்லை என்பதுதான் உண்மை 
அதுவரைக்கும் ஈழப்போராட்டமா? பெரியார் பதிப்பகத்திற்கு போவோமா
ராமகிருஷ்ணன் (பெரியார் திராவிட கழகம்)  அண்ணைக்கிட்ட போவோம்  
மணியண்ணன் (தந்தை பெரியார் திராவிட கழகம்) கிட்ட போவோம் என்கின்ற ஈர்ப்பு சக்தி இருந்தது.
அதன் பின்பு எதை வைத்து இளைஞர்களை நம்மிடம் ஈர்ப்பதற்கு எமக்கு வழி தெரியவில்லை 
அதன் விளைவுதான் சீமானுடைய வளர்ச்சி தோற்றம் எல்லாம் 
அதர்மம் சேனல் வழியாக ஏராளமான வீடியோக்கள் சீமானை குறித்து வெளியிட்டேன் 
ஏனெனில் சீமான்தான் பார்ப்பனீயத்தின் முகமாக நின்று திராவிட இயக்கத்திற்கு வரவேண்டிய வரவுகளை தடுத்த நபர் சீமான் ...
மேலும் தொடர்ச்சியாக பல முக்கிய கருத்துக்களை தோழர் மனோஜ் இதில் கூறுகிறார் 
முழுவதுமாக கேளுங்கள்   


கருத்துகள் இல்லை: