ராதா மனோகர் :திமுகவை அதிகமாக அல்லது மிக மோசமாக விமர்சிக்கும் பலரும் ஏதோவொரு காலத்தில் திமுகவை ஆதரித்தவர்களாகவே இருப்பது வழக்கம்
எம்ஜியாரின் பிரிவினைக்கு முன்பிருந்தே இந்த லிஸ்ட் வளர்ந்தது
விலகி போனவர்கள் ஏதோவொரு சுயநலம் சார்ந்த விடயத்தின் காரணமாகவே விலகி போனார்கள் என்று கூறுவதும் வழக்கம்தான்
அநேகமாக அதுவும் உண்மைதான்.
ஆனாலும் கூட சில சமயங்களில் விலகலுக்கு நியாயமான காரணங்களும் இருந்தது உண்டு
இன்னும் சிலரை திமுகவே கொஞ்சம் தள்ளி வைப்பதுவும் அல்லது ஒதுக்கி வைப்பதுவும் கூட எல்லா கட்சிகளிலும் நடக்கும் அரசியல் வித்தைகள்தான்.
அந்த வரிசையில் திரு பி டி ஆர் தியாகராஜன் இன்னும் திமுகவில்தான் இருக்கிறார் என்று எண்ணுகிறேன்
அவர் எந்த நேரமும் வெளியே போக கூடும் என்று எனக்கு தோன்றுகிறது
அவர் திமுக மேடைகளில் அதிகமாக காணப்படுவதில்லை
எனவே அவரை அப்படியே விட்டுவிடுவோம் என்று எண்ணுகிறார்களோ தெரியவில்லை,
அவர் எங்கிருந்தாலும் மின்னக்கூடிய நட்சத்திரம்தான்!
திமுக அரசின் பல சாதனைகளுக்கு அத்திவாரமாக இருந்து பணியாற்றியவர் திரு பி டி ஆர்தான்!
இதை எவரும் மறுக்க மாட்டார்கள்
இன்றுவரை தொடரும் பல நல்ல விடயங்கள் அநேகமாக அவர் போட்ட பாதையின் விளைவுகள்தான்!
அவர் நிதி அமைச்சராக இருக்கும் வரை வடநாட்டான் எல்லாம் அவர் முன்னால் வெறும் பிக்மி பொம்மைகளாகதான் தெரிந்தார்கள்.
தமிழக ஊடகங்களுக்கு மட்டுமல்லாமல் பிற மாநில தொலைக்காட்சிகளுக்கும் பி டி ஆர் கதாநாயகன்தான்.
தமிழக தலைவர்கள் என்றாலே ஒரு அலட்சியத்தோடு அணுகும் வடநாட்டு தொலைக்காட்சிகள் எல்லாம் பி டி ஆரை பேட்டி காண்பதற்கு முதல் நாள் தூங்காமல் நெறைய ஹோம் வேர்க் செய்ய வேண்டி இருந்தது.
பி டி ஆர் வாயை திறந்தால் தங்கள் வண்டவாளம் தெரிந்து விடும் என்று நிஜமாகவே பயந்தார்கள்.
இப்படிப்பட்ட வரை நிதி அமைச்சில் இருந்து தூக்கியதும் பாஜக நிம்மதி பெருமூச்சு விட்டது.
திமுகவின் அத்தனை எதிரிகளும் மகிழ்ந்தார்கள்
அவர்களின் மகிழ்ச்சிக்கு காரணம் இருந்தது
அதைத்தான் சென்ற தேர்தலில் நாம் கண்டோமே.?
அறிவு இருப்பவர்களை பேரறிஞர் வளர்த்துவிடுவார்
கலைஞர் அரவணைத்து இருப்பார்
இந்திய ஒன்றியமே கண்டு நடுங்கிய மேதையாக திமுகவின் முகமாக இருந்தவரை முதல்வர் ஸ்டாலின் யாருடைய யோசனையாலோ தூக்கி எறிந்தார்.
சொன்னால் வலிக்கும் ...
யாழ்ப்பாணதில் முன்பு யோகர் சுவாமி என்ற ஒரு மகான் இருந்தார்
அவர் மிகவும் பிரபலமான ஒரு ஆத்மீக பெருந்தகை
இவரின் ஏராளமான போதனைகளில் ஒரு முக்கியமான வாக்கியம்,
"எல்லாம் எப்போதோ முடிந்த காரியம்" என்பதாகும்
பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்களை நிதி அமைச்சில் இருந்து தூக்கி அடித்ததில் இருந்துதான்
அந்த முடிந்த காரியம் ஆரம்பித்து இருக்கும் என்று தோன்றுகிறது! See less
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக