![]() |
Sharmila Seyyid : இத்தனை ஆண்கள் கேள்வி எழுப்பியபோது கொந்தளித்தபோது றிழா மர்சூக் பதட்டமடையவில்லை. நிதானமாக இருந்தார். ஆனால் ஸர்மிளா ஸெய்யித் கேள்வி கேட்டதும் அவர் கொதித்தெழும்புகிறார்.
அப்போது , ஸர்மிளா ஸெய்யித்திற்கு இஸ்லாத்தை விட்டு வெளியேறிவள்; முர்தத் என்று பத்வா அளித்தவர். இவள் கொல்லப்படவேண்டியவள் என்றவர்.
இப்போது, பெட்டை நாய்; சமூகத்தை நிர்வாணப்படுத்தியவள் என்ற பத்வாக்களை அளித்திருக்கிறார். நிர்வாணமானால் திரும்பவும் ஆடையை உடுத்திக்கொள்ள முடியும். குண்டு வைத்து நூற்றுக்கணக்கான உயிர்களைக் கொன்றால், போன உயிர்களைத் திரும்ப பெற முடியா.
ஆக மொத்தமாக அவர் பத்வா பெக்டரியை இன்னமும் மூடவில்லை என்பது உறுதியாகத் தெரிகிறது.
ஆனால் என் கேள்விகள் அவர் என்னைத் தனிப்பட்ட ரீதியாக அச்சுறுத்தியதைப் பற்றியதோ, தற்போது என்னை நடத்தைக் கொலை செய்வதைப் பற்றியதோ அல்ல.
எனது கேள்விகள் அவரது கருத்தியலைப் (Ideology) பற்றியது. பெண்களை இழிவுபடுத்தும் மனப்பான்மை அவர் பற்றியிருக்கும் வஹாபிய தீவிரவாத சிந்தனையின் ஒரு பகுதியானது. காபிர்களைக் கொல்வது, குண்டுதாரிகளை உருவாக்குவது போன்ற சிந்தனை வழியில் உள்ள ஒருவரால் பெண்ணை இழிவுபடுத்துவதொன்றும் பெரிய காரியமில்லை. அல்வா சாப்பிடுவதுபோல நாக்கில் வைத்தாலே கரைந்துபோகும் செலவற்ற செயல்.
சிறையிலிருந்து வெளியே வந்த ஓரிரு ஆண்டுகளுக்குள் அவர் ஆயிரக்கணக்கான முகநூல் ஃபாலோவர்களைப் பெற்றுள்ளார். உங்களில் ஒருவராலாவது அது முடிந்ததா?என்று அவரது லண்டன் வாழ் வஹாபிய செயற்பாட்டாளர் , சஹ்ரானிய சிந்தனை ஆதரவாளர் உமையாள் பெருமையாகக் கேட்டது பலருக்கும் நினைவிருக்கும்.
அவரைப் ஃபோலோ பண்ணும் ஆயிரக்கணக்கானோர் யார்? அத்தனை பேரும் இயற்கை விவசாயத்திற்காக உயிரைக் கொடுக்கப் போகிறவர்களா? எனக்கு அப்படித் தோன்றவில்லை. அவர்களில் முக்கால்வாசிப்பேர் முன்னர் சஹ்ரானின் கருத்தியல் வட்டாரத்துடன் தொடர்புடையவர்களாக இருக்கலாம் என்ற கேள்வியை சமூகம் எழுப்புவதற்கு உரிமையுள்ளது. அதனால்தான் அவரது சிந்தனை மாற்றம் குறித்து வெளிப்படையான விளக்கம் இங்கே அவசியமாகிறது.
எனக்கு முன்பாகப் பலரும் இதே கேள்வியைத்தான் எழுப்பியிருந்தனர். அவர்கள் கோமாதாவில் பால் கறப்பது போல் மடியைத் தடாவிக் கேட்டதை, நான் தலையில் சம்மட்டியால் அடித்தாற்போலக் கேட்டேன். அவ்வளவே. ஆனால் பெண் என்றதும் அவள் ஆடை குறித்தும் ஒழுக்கம் குறித்தும் கீழ்த்தரமாகப் பேசும் தனது பாசறை மாணாக்கரை களத்தில் விளையாடவிட்டு வேடிக்கை பார்ப்பதோடு கள நிலவரத்தை முழுமையாக திசை திருப்பியுள்ளார்.
சும்மாவே கிழக்கிஸ்தான்களுக்கு ஸர்மிளா ஸெய்யித் என்றால் அவ்வளவு லவ். அவளைப் போல எவ்வளவு அடித்தாலும் திருப்பியடிக்கும் துணிவானவளை பார்த்திராத சொம்பு தூக்கிகள், அவள் சம்பந்தப்பட்ட விடயங்களில் வகை வகையாக கலாசார வகுப்பெடுக்க அத்தர் அடித்துக் கொண்டு ஓடிவருவர்.
பத்வா பேக்டரி யாவாரம் நல்லபடியாக நடக்கட்டும். என்னைப் பற்றிய தனிப்பட்ட தாக்குதல்கள் இந்த விவாதத்தின் மையமல்ல. மையக் கேள்வி ஒன்றே ஒன்று தான்.
தனது கடந்த கால வஹாபிய, தீவிரவாத சிந்தனைகளை அவர் கைவிட்டாரா இல்லையா? தனது சிந்தனைகளைப் பரப்பவும் ஆள் சேர்க்கவும் இதே முகநூலைத்தான் பயன்படுத்தினார். இவ்வளவு பத்வா அளிக்கத் தெரிந்தவருக்கு தான் தவறான கொள்கைகளில் இருந்தேன் என்றும், என்னால் அந்தக் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டவர்கள் அதிலிருந்து விலகிவிடுங்கள் என்றும் ஒரு பத்வாவை அளிக்க என்ன கஸ்டம்.
நீதிமன்றம் அவரை 'புனிதர்' என்று அறிவித்து விடுதலை செய்யவில்லை. நீதிமன்றுக்கே நம் நாட்டாமை செல்லவில்லை என்றால் பாருங்களேன். வெறும் தடுப்புக் காவலில் குற்றப் பதிவுகூட இல்லாமல் வைக்கப்பட்டிருந்துள்ளார். சந்தேகத்தின் பேரில் கைதான பல இளைஞர்கள் இன்னமும் லட்சங்கள் செலவழித்து அதிலிருந்து மீண்டுவரப் போராடிக் கொண்டிருக்கையில் சஹ்ரானை தொட்டிலில் வைத்து ஆட்டி அவனுக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்த பொறியியலாளர் வழக்கே இல்லாமல் வெளியே ஒருவதெல்லாம் இலங்கையில் மட்டும் தான் காணமுடியும்.
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் அரசும் , அரசியல்வாதிகளும் இணைந்து நடாத்திய ஒரு சதியென்பது யாவரும் அறிந்த உண்மை.இவர் வெளிநாட்டிலிருந்து தந்திரமாக காய் நகர்த்தி, ஆதாரங்களை அழித்து மிக கெட்டித்தனமாக தப்பித்திருக்கிறார். இவரை மீண்டும் கைது செய்து சூத்து சிவக்க வெளுத்து விசாரிக்கவேண்டியது தற்போதைய இலங்கை பாதுகாவல் துறையின் பணி. அவர் முழுமையான, சுயாதீனமான விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்.
ஆனால் அதோடு சேர்த்து இன்னொரு கேள்வியும் நிலைத்திருக்கிறது. சமூகத்தில் இன்று ஒரு இயற்கை விவசாயியாகவும், புனிதராகவும் அப்பாவியாகவும் தன்னை முன்னிறுத்தும் ஒருவர், தனது முன்னைய கருத்தியல் குறித்து சமூகத்திடம் வெளிப்படையாகப் பொறுப்புக்கூற வேண்டாமா?
அவர் விதைத்த கருத்துகள் தவறானவை என்று தெளிவாக மறுத்து, அவற்றால் பாதிக்கப்பட்டவர்களை அதிலிருந்து விலகுமாறு அழைக்காதவரை, அவரது சிந்தனை மாற்றம் குறித்து கேள்விகள் எழுந்து கொண்டேதான் இருக்கும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக