வெள்ளி, 3 ஜூலை, 2026

தலைமைக்கு எதிராக கொந்தளிக்கும் திமுக தொண்டர்கள்

ராதா மனோகர்  திமுகவின் உண்மையான ஆதரவாளர்கள்  இன்றைய அரசியல் சூழ்நிலையை ஆய்வு செய்து பல கருத்துக்களை பொதுவெளியில் முன்வைக்கிறார்கள் 
இன்னும் சரியாக  சொல்லப்போனால் இவை  தமிழ்நாட்டு  நலன் சார்ந்தவை!
தமிழ்நாட்டு நலனும் திமுக நலனும் வேறு வேறு என்று கருதாத தொண்டர்கள் இவர்கள்.  
ஒரு காரசாரமான கருத்து மோதல்கள் நடக்கும் போது பலருக்கும் விருப்பம் இல்லாத விடயங்கள் வெளியே வருவது இயல்புதான் 
அதுதான் சரியான ஜனநாயக பொதுவெளியுமாகும் 
இப்படி வெளிப்படையாக கருத்து கூறுவோர்களின் உள்நோக்கம் பற்றி சந்தேகம் எழுப்புவோர்கள் பெரும்பாலும் தலைமையை குளிர்விக்க வேண்டும் என்ற ஜால்ரா மனநிலை கொண்டவர்கள்தான்.
எல்லா அரசியல் கட்சிகளின் வீழ்ச்சிக்கும் ஜால்ராக்கங்களின் பங்கே பிரதானமாக இருந்தது என்பது வரலாறு.
இதில் கருத்து கூறும் எல்லோரும் மக்கள் நலன் சார்ந்து சிந்திப்பவர்கள்தான் 
திமுக ஆதரவாளர்கள்தான்!
இன்னும் சரியாக சொல்லப்போனால் இவர்கள் பலரும் நடுநிலைமையாளர்கள் கூட கிடையாது 
இவர்கள் திமுக ஆதரவாளர்கள் பெரும்பாலும் தன்னார்வலர்கள்


 
Rajendra Selvaraj : கரூர் நெரிசல் மரணங்கள் நிகழ்ந்து மூன்று நாட்களுக்குப் பிறகு அப்போதைய நடிகர் விஜய் வெளியிட்ட வீடியோவில் சொன்னார்.. 
"சிஎம் சார்.. பழிவாங்கறதுன்னா என்னை பழிவாங்குங்க.... 
நான் வீட்லதான் இருப்பேன்...!" 
அதாவது கரூர் நிகழ்வுக்கு திமுகதான் காரணம் என்று அவர் மறைமுகமாக சொன்னது..! 
அந்த வீடியோ வெளிவந்தது.. செப்டம்பர். 30. 2025. 
அதன் பிறகு இந்த 9 மாதங்களில் "என் மேல தூக்கி பழியைப் போட்டீங்க.... என் மேல தூக்கி பழியைப் போட்டீங்க....!" இப்படியே ஒரு முப்பது தடவையாவது சொல்லிருப்பாரு.... 
குறிப்பாக முதல்வரான பிறகு திருச்சி நன்றியறிவிப்புக் கூட்டத்திலும், உச்சமாக சட்டமன்றத்திலும் கூட...! 
இதில் விஜயைத் தவிர, அவரது கட்சியின் முன்னனித் தலைவர் இதைப் போலவே "திமுகதான் காரணம்..!" என்று பேசிய எண்ணிக்கையெல்லாம் கணக்கற்றது...  !
எல்லாவற்றிலும் மேலாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா.... 
தேர்தலுக்கு முன்பாகக்கூட கொஞ்சம் அடக்கி வாசித்த ஆதவ், தேர்தல் வெற்றிக்குப் பிறகு மிகுந்த ஆவேசத்துடன் இந்தப் பழியை திமுக தலையில் சுமத்திக்கொண்டிருக்கிறார்.. 
உச்சமாக நேற்று அதிமுக முன்னாள் அமைச்சர்கள் இணைப்பு விழாவில் "காவல்துறையை பயன்படுத்தி கரூரில் தவெக தொண்டர்களை திமுக அரசுதான் கொன்று குவித்தது..! அந்தக் கணக்கை விரைவில் தீர்ப்போம்..!" என்று ஆவேசமாக பேசுகிறார்..
ஒரு தெளிவான, உறுதியான குற்றச்சாட்டு...!
இதில் நமக்கு எந்த இடத்தில் இவ்வளவு அளவுகடந்த எரிச்சல் வருகிறது என்றால்.... ஏன் திமுக இந்தக் குற்றச்சாட்டை இவ்வளவு மெத்தனமாக, இவ்வளவு பாராமுகமாக கையாள்கிறது...?!
திமுக தலைமை மனதுக்குள் என்ன "ரத்தம் வழிய சிரித்துக்கொண்டே அடிவாங்குகிற ஆட்டோ மாணிக்கம்"  என்ற பாட்ஷா பாத்திரமாக தன்னைக் காட்டிக்கொள்கிறதா, தெரியவில்லை....!
கரூர் விவகாரத்தில் அரசு அதிகாரிகள் சார்பில், தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எனும் வகையில் அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில்,  அத்தனை விளக்கங்கள், ஊடகங்கள் சார்பில் காணொலிக் காட்சிகளைக் காட்டி, ஒவ்வொரு நொடியாக விவரித்து அத்தனை விளக்கங்கள் வழங்கப்பட்ட பிறகும், "அது திமுக செய்த தவறுதான்..!" என்று தவெக கண்முன்னே பரப்பிக் கொண்டிருக்கிறது... 
ஆனாலும் திமுக இதை மென்மையாகத்தான் கையாளும் என்றால் அதைவிட தொண்டர்களை அவமதிக்கும் செயல் வேறு இருக்க முடியாது.. 
இதைப்போலவே தேர்தல் முடிவுக்குப் பிறகு அதிமுக-திமுக கூட்டணி சேர்த்து ஆட்சியமைக்க முயன்றது எனும் செய்தியையும் தவெக பரப்பி வருகிறது.. 
ஆதவ் அர்ஜூனாவுக்கு கரூர் சம்பவம் பேசுபொருள் என்றால், நிர்மல்குமாருக்கு "அதிமுக- திமுக கூட்டணி.." பேசு பொருள். 
இந்த இரு குற்றச்சாட்டுகளுக்கும் கழகத்தலைமை உடனடியாக உறுதியான, வலிமையான பதிலடியை விரைந்து கொடுக்கவில்லை என்றால், அது பொதுமக்கள் மத்தியிலும், தொண்டர்கள் மத்தியிலும் மிகப்பெரிய சோர்வை, நம்பிக்கை சேதாரத்தை ஏற்படுத்தும்..!
தவெகவினரால்,எடப்பாடியார் கண் முன்னே அதிமுக கரைக்கப்படுவது எல்லோருக்கும் வெளிப்படையாக தெரிகிறது.. அவர்கள் அங்கிருந்து நிர்வாகிகளைக் கரைத்துக் கொண்டிருக்கிறார்கள்... 
மேற்கண்ட குற்றச்சாட்டுகளால் திமுக மீது, கட்சியினர் அல்லாத வெகுமக்கள் மத்தியில் இருக்கிற நம்பிக்கையை கரைத்துக் கொண்டிருக்கிறார்கள்.... 
அது கண்ணுக்கு தெரியவில்லை என்றால் நாம் இத்தனை ஆண்டுகால கட்சி என்று பெருமையடித்துக் கொள்வதில் பொருளே இல்லை....!
இன்னும் எத்தனை காலம்தான் அந்த பாழாய்போன நாகரீக அரசியலை கட்டியழப்போகிறீர்கள் ....???
What's your plan Thalaivare..

Umar Farooq : இதே மனநிலையில் பேசியவன் தான் நான்,
ஒரு எதார்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள், அரசியல் களத்தில் திமுக என்றுமே தனித்து விடப்பட்ட கட்சியே, அன்றைக்கு கரூர் சம்பவத்தில் செந்தில் பாலாஜி எதிர்வினை ஆற்றினாரே தவிர கூட்டணியில் இருந்த யாரும் அதற்குத் பெரிதாக எதிர்வினை ஆற்றவே இல்லை, இன்னும் சொல்லப்போனால் சம்பவம் நடந்த இரண்டு நாளில் திருமா ஆதவை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார், அதன் பின்புதான் விஜய் வீடியோ வெளியிட்டார், இந்த உண்மை தற்போது வெளியில் வந்திருக்கிறது,
முதல் மூன்று நாட்கள் எல்லோரும் எஸ்கேப் ஆனார்கள் நாம் தான் குற்றவாளிகள் போலீஸ் நம்மை சும்மா விடாது என்ற அச்சத்தில் இருந்தார்கள், ஆனால், திருமா இங்கிருந்து உள்ளடி வேலை செய்தநிலையில் முதலில் விபத்து என்றார்கள், பிறகு சிஎம் சார் என்னோடு மோதுங்கள் என்றார்கள், அதன் பின்பு தான் கான்ஸ்பிரேஷன் தியரி வந்தது,
பாஜக ஆதரவாக குதித்தது, இந்த சூழலை சாதகமாக பயன்படுத்தி ஆதவ் ன் வாய்ஸ் ஆஃப் காமன் நிறுவனம் பாதிக்கப்பட்ட குடும்பங்களை பணத்தை கொடுத்து சரிக்கட்டியது, ஒரு குடும்பமாவது உறுதியாக நின்றிருந்தால், வழக்கு பதிந்திருக்கலாம், இப்படி ஒரு சம்பவம் இதற்கு முன்பு எந்த ஒரு வழக்கிலும் நடந்ததே கிடையாது, பாதிக்கப்பட்டவர் இவ்வளவு விரைவாக பணத்தைப் பெற்றுக் கொண்டு விலை போவது, கூட்டணி என்ற பெயரில் அத்தனையும் துரோகிகள் இந்த நிலையில் ஸ்டாலின் தொட்டிருந்தால் விளைவு வேறாக இருந்திருக்கும், இதையெல்லாம் ஸ்டாலின் யோசிக்காமலா இருந்திருப்பார்.
இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை, பொறுமையாக வேடிக்கை பாருங்கள், இப்போது நடக்கும் எதையும் ஆறு மாதம் கழித்து மக்கள் மறந்து விடுவார்கள், எதுவும் ஞாபகம் இருக்காது, இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளில் சிபிஐ பட்டவர்த்தனமாக அறிக்கை சமர்ப்பித்து கைது நடவடிக்கையை மேற்கொள்ளும், ஸ்டாலினுக்கு தெரியும் இந்த உண்மையை எப்படி மக்கள் மன்றத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று..
மக்களின் சொகுசு மனநிலைக்குள் ஒளிந்து கொண்டு கல் எறிகிறார்கள், இப்போது நாம் எதை பேசினாலும் எடுபடாது, ஓராண்டு ஆட்சி செய்து பட்ஜெட் தாக்கல் செய்யும் போது தோற்று விழிபிதுங்கி நிற்கும் நேரம் நாம் ஆட்டத்தை தொடங்க வேண்டும், இரண்டு ஆண்டுகள் தற்குறிகளை ஆட்சி செய்ய விட்டால், அவர்களே அவர்களை காலி செய்வதற்கான ஆயுதத்தை கையில் கொடுப்பார்கள்,
அதை இறுக பிடித்துக் கொண்டு கடைசி இரண்டு ஆண்டு வெறியாட்டம் ஆட வேண்டும், இப்படி ஒரு கட்சி இருந்த தடமே தெரியாமல் அழித்துவிடலாம், ஆந்திராவில் ஜெகன்மோகன் காலியானது போல, இனி எந்த ஒரு நடிகனுக்கும் அரசியல் ஆசையே வரக்கூடாது அப்படியான ஆட்டம் ஆட வேண்டும்... நடக்கும்.

KA Thiyagarajan Dmk Edappadi : நீங்கள் சொல்வது போல் எல்லாம் நடக்க வேண்டும் என்றால் இன்னொரு 25 ஆண்டுகளுக்கு பின்னர் தான் நடக்கும் 
சிபிஐ எந்த மோடியோ அமித்ஷாவோ நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்க போவதில்லை 
விஜய் உள்ளே வளைத்து போட மட்டும் தான் யோசிப்பார்கள் 
எல்லாம் முட்டாள்தனமான யோசனையாக தெரிகிறது 
காலம் கடந்து கொண்டிருக்கிறது 
தொண்டர்கள் குறைந்து கொண்டிருக்கிறார்கள் கவலையில் செத்துக் கொண்டிருக்கிறோம் ஒவ்வொருவனுடைய அறிக்கையை பார்த்து திமுகவில் தலைமை என்ன செய்து கொண்டிருக்கிறது என்று மிகுந்த மன வருத்தத்துடன் நாங்கள் எல்லாம் கொதித்துக் கொண்டிருக்கிறோம் 
நீங்கள் பொறுமையாக நடக்கும் ஓராண்டு இரண்டாம் ஆண்டு என்று கூறிக் கொண்டிருக்கிறீர்கள் 
பேரறிஞர் அண்ணா கூறியிருக்கிறார் வி லக்காத உண்மையும் வீணாப் போகும் என்று ஆகவே நம்முடைய எதிர் கருத்துக்களை உடனுக்குடன் உடனுக்குடன் பதிலடி மூலம் தலைவர் தெரிவிக்கவில்லை என்றால் கட்சி முழுவதும் அழிந்து நாசமா போன பின்பு தூக்கி நிறுத்துவேன் என்று சொல்லுவது போல தெரிகிறது 

அவ்வப்போது பதில் கொடுக்க வேண்டும் 
தலைமை வாய் திறக்க வேண்டும் ஐந்தாண்டு காலம் முழுமையான ஆட்சி நடத்தி விட்டு மீண்டும் இரண்டாண்டு ஆகட்டும் மூன்றாண்டு ஆகட்டும் என்று பேசி என்ன பயன் நாங்கள் எல்லாம் 40 ஆண்டு கால கட்சியில் உழைத்து இன்றைக்கு இது போல ஒரு ஆட்சி இதுபோல ஒரு மோசமான நிலையை கண்டதில்லை என்று பொங்கிக் கொண்டிருக்கிறோம்

Abdul Rahuman Jamaludeen : Umar Farooq சும்மா இருந்தால் எல்லாம் நடக்கும் என்ற அதீத ஆசை.
இந்திய அரசியலில் செயல்படுபவர்களுக்கு மட்டும் தான் வாய்ப்பு. அது சரியாகவோ அல்லது தவறாகவோ!

Hussain Sikkandar : தொண்டர்கள் மற்றும் அனுதாபிகளுக்கு வரும் கோபம் கூட இல்லாமல் ஏன் தலைமை இருக்கிறது என்று தெரியவில்லை

Karunakaran R : மென்மையான போக்கை கைவிட்டு கலைஞர் காலத்து அரசியலை கையில் எடுத்து அவதுறு பரப்புபவர் அபாண்ட குற்றசாட்டு சொல்பபவர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் இவர்களை போன்றவர்களுக்கு இவர்கள் பாணியிலே பதிலளிக்க வேண்டும்


Abdul Rahuman Jamaludeen : காவல்துறையைக் கொண்டு மக்களைக் கொன்றொழித்தார்
என்பது சாதாரண குற்றச்சாட்டல்ல. இதில் காவல்துறையும் வருகிறது. அதே காவல்துறை தான் இப்போது இவர்கள் கையில் உள்ளது.
இந்த பாயிண்டைக் கூட பயன்படுத்த முன்வராத திமுக மீது கொஞ்சம் கொஞ்சமாக சந்தேகம் உருவாக ஆரம்பிக்கும். அது நிச்சயமாக தமிழ்நாட்டு அரசியலுக்கு நல்லதல்ல

Senthil Sriniga :  உச்சநீதி மன்றத்தில் வழக்கு பதிவு பண்ணியாச்சுங்க, நமக்கு இருக்கும் ஆதங்கம் தலைமைக்கும் பலமடங்கு ஆதங்கம் கோபம் எல்லாம் இருக்கும் பொய் பேசறவனுக தான் பதட்டத்தில் இருப்பானுக,உண்மை ஒன்றே
அறம் வெல்லும்

Vickyrichard :மாவட்டம் பிரிக்கப்படவில்லை என்றால் கழகம் நாசமாகிவிடும்.. அதிமுக போல் திமுக வும் கரையும்..

இரா. தமிழ்க்காந்தன் : ஆதவ் ஆட்டம் கூடிட்டே போகுது.உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுக்க உள்ளார்கள்.

Ashika BE : திமுக என்ன செய்யணும்னு நினைக்கிறீங்க எப்படி பதிலடி கொடுக்கணும்னு நினைக்கிறீங்க?

Rajendra Selvaraj :  இந்த மாதிரியான அதிரடி அரசியலைத்தான் திமுக தொண்டன் தலைமையிடமிருந்து எதிர்பார்க்கிறான்...தற்குறிப்பயல்களிடம் அமைதியான நாகரீக அரசியல் செய்யாமல் அவனுகளை எப்போதும் Defence mode ல் வைத்திருந்து திமுக Offence mode ல் இருக்க வேண்டும்....
May be an image of text that says "BREAKING NEWS SUN NEWS GC உச்சநீதிமன்றத்தில்.. கரூரில் காவல்துறைய வைத்து எங்கள் மக்களை கொன்று குவித்ததாக பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜு அர்ஜூுனாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாட திமுக முடிவு. சிபிஐ ல் ஆதவ் பெயரும் இடம் பெற்ற நிலையில் அவரே காவல்துறையை குற்றம்சாட்டி பேசியது சர்ச்சையானது. 03JU 03JUL2026 2026 SUNNEWSTAMIL f SUNNEWS sunnewslive.in"

Ajithsivaraja Muthappa :  அதுவே தெரியாம தானே இந்த பதிவு. சம்பவம் நடந்த அன்றே அந்த பஸ்ஸ கைப்பற்றி அதில் இருந்த வீடியோ பதிவுகளை கைப்பற்றியிருக்கலாம். அதில் ஒரு காப்பி கட்சிக்கும் எடுத்திருக்கலாம்.

Mohideen MP : அதான் இப்போ அனுபவிக்காரு... அப்பவே செய்ய வேண்டியதை செய்திருந்தால்....

சுரேஷ்பாபு சூனா பானா  ·: என்ன மசுரு பிளானோ... இந்தாளு பண்றதை பார்த்தா செம கடுப்பாகுது. உடனே உடனே எதிர்வினை ஆற்றுவதற்கு என்ன கேடு ... இத்தனை பெரிய தலைகளை வெச்சுகிட்டு....
இவனுகளே வளர்த்து விட்ருவானுக போல

கருத்துகள் இல்லை: