புதன், 6 மே, 2026

தமிழகத்தில் இனி RSS/ பாஜக அரசின் செயல் திட்டங்கள் செயல்படுத்தப் படும்.!

 Kandasamy Mariyappan  :  RSS... எதிரியை அழிக்க, எல்லா யுத்திகளையும் கையாளும்.
முடியாது போனால், தன்னையே அழித்துக் கொண்டு, தனக்கான மற்றொன்றை உருவாக்கும்.!
அப்படித்தான், 1971 முதல் திமுகவை அழிக்க முயன்று, பிறகு அதிமுகவை உருவாக்கி அதுவும் பலனளிக்காமல் போனதும்... 
தமிழ்நாட்டில், அது தனக்கான ஒரு அரசியல் இடத்தை உருவாக்கியுள்ளது.!
2026 தேர்தல் முடிவை நன்றாக கவனித்தால் இது புரியும்.!
இளைஞர்கள் மத்தியில் ஹீரோவாக இருந்த பாஜக அண்ணாமலை ஓரங்கட்டப்பட்டார்.!
நயினார் நாகேந்திரன், வானதி, முருகன், தமிழிசை எல்லாம் அமைதியாக்கப் பட்டனர்.!
பாஜக போட்டியிட்ட 27 இடங்களில், 26 இடங்களில் தோல்வியை வாங்கி கொண்டது.! அதாவது, தன்னையே அழித்துக் கொண்டது.!
ஜோஸஃப் விஜயின் சினிமா பிரபலத்தை பயன்படுத்திக் கொண்டு, தவெக போட்டியிட்ட 233 தொகுதிகளில், சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், சேலம் போன்ற நகர்ப்புறங்களில் மட்டுமே வெற்றிபெற வைத்தது.!


தவெகவை, 107 இடங்களில் மட்டுமே வெற்றிபெற வைத்துள்ளது.!
ஆட்சி அமைக்க தேவையான கூடுதல் இடங்களுக்காக, தனது பழைய தோழமையான அதிமுகவை அணுக வைத்துள்ளது.!
தவெக வெற்றிக்கான காரணம்...
நகர்ப்புறங்களில் அவருக்கான ரசிகர்கள் அதிகம் என்று சொல்லிக் கொள்ளலாம்.!
EVM ஃப்ராடு செய்வதென்றால், பாஜகவே நின்று வெற்றி பெற்றிருக்கலாமே என்றால்.., 
அவர்களுக்கு வாக்கு வங்கி இல்லை என்பதால், உண்மை தெரிந்து விடும்.!
அதிமுக கூட்டணியில் இருக்கும் இப்போது, 27 இடங்களில் வெற்றிபெற வைத்திருக்கலாமே என்றால்.., 
பாருங்கள் ஜோஸஃப் விஜய் அலையால் நாங்களே தோற்கடிக்கப் பட்டோம் என்று கூற முடியும்.! 
இப்போது, RSS/ பாஜக திட்டத்தின் படி தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கப்படும்.!
RSS/ பாஜக அரசின் செயல் திட்டங்கள் முழுக்க செயல்படுத்தப் படும்.!
அவர்களுக்கான இடம் உருவாக்கப்பட்டு விட்டது.!
இனிமேல் அவர்களுக்கு...

கருத்துகள் இல்லை: