புதன், 6 மே, 2026

தவெகவுக்கு எடப்பாடி ஆதரவு கிடையாது! திட்டவட்டமாக சொன்ன ஓ.எஸ். மணியன்

 tamil.oneindia.com - Vigneshkumar  : சென்னை: தவெகவுக்கு அதிமுக ஆதரவு தராது என்று மாஜி அமைச்சர் ஒ.எஸ். மணியன் கூறியிருக்கிறார். சென்னையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவரை சந்திப்பிற்கு பிறகு, ஒஎஸ் மணியன் இந்த கருத்துகளை கூறினார். 
அதிமுகவிடம் ஆதரவு கேட்டு தவெக பேச்சுவார்த்தை நடத்துவதாக லீமா ரோஸ் கூறிய நிலையில், மனியன் அதற்கு நேர்மாறான தகவலை கூறியுள்ளார்.
தமிழக அரசியலில் மே 4 தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு 108 இடங்களைப் பிடித்துத் தனிப்பெரும் கட்சியாகத் தமிழக வெற்றிக் கழகம் உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியமைக்கத் தேவையான 118 என்ற மேஜிக் எண்ணைத் தொட இன்னும் 10 இடங்கள் தேவைப்படுகின்றன.



இந்த தேர்தலில் அதிமுக 47 இடங்கலை மட்டுமே பெற்ற நிலையில், அவர்களிடம் தவெக ஆதரவு கேட்கலாம் என சொல்லப்பட்டது. இதற்கிடையில், அ.தி.மு.கவிடம் ஆதரவு கேட்டுத் த.வெ.க பேச்சுவார்த்தை நடத்துவதாக அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ் நேற்றிரிவு கூறி பெரும் பரபரப்பை கிளப்பியிருந்தார்.

இந்தச் சூழலில் தான் இது தொடர்பாக ஓ.எஸ் மனியன் இது தொடர்பாக முக்கிய விளக்கத்தை கொடுத்துள்ளார். அதாவது தவெகவுக்கு அதிமுக ஆதரவு கொடுக்காது என அவர் கூறியுள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவரை சந்தித்து ஆலோசனை நடத்திய பிறகு மனியன் இந்த கருத்துகளை தெரிவித்தார். தவெக ஆட்சியை அமைக்க அதிமுக ஆதரவு கொடுக்குமா என்ற கேள்விக்கு "இல்லை" என பதிலளித்துவிட்டு சென்றார்.

தவெக ஆட்சியை அமைக்க இன்னும் 10 இடங்களை தேவை. சிறுசிறு கட்சிகளை வைத்து விஜய்யால் ஆதரவை திட்ட முடியும். இருப்பினும், அந்தளவுக்கு குறைந்த மெஜாரிட்டி என்றால் எப்போது வேண்டும் என்றாலும் ஆட்சிக்கு ஆபத்து என்ற சூழலே இருக்கும். இதன் காரணமாகவே அதிமுகவிடம் ஆதரவு கேட்க தவெக விரும்பியிருக்கிறது.

அதிமுகவுக்கு 47 இடங்கள் இருப்பதால் அவர்களிடம் ஆதரவு கேட்பது தொடர்பாக முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. இந்தச் சூழலில் தான் தவெகவுக்கு அதிமுக ஆதரவு தராது என்பதை ஒ.எஸ். மனியன் திட்டவட்டமாக கூறியிருக்கி

கருத்துகள் இல்லை: