ஆர் எஸ் எஸ் இன் சம்பள கூலிக்கட்சிதான் தமிழக வெற்றி கழகம் என்பதில் சந்தேகமே இல்லை.
இப்போது தமிழ்நாட்டில் ஆட்சியை பிடித்திருப்பது ஆர் எஸ் எஸ்தான்
கடந்த ஒரு நூற்றாண்டாக தமிழ்நாட்டை அவர்களின் ஆரிய சனாதன ஆதிக்கத்திற்குள் கொண்டுவருவதற்கு விடாது முயற்சி செய்தார்கள்
அதன் பலனை தற்போது ஓரளவு பெற்றுவிட்டார்கள் என்றுதான் தெரிகிறது
இந்திய மண்ணின் வெகுஜன மக்களை ஆள்வதற்கு ஆரியம் உருவாக்கிய மதவெறி கோட்பாடுதான் சனாதன பார்ப்பனீயம்..
தப்பி தவறியும் மண்ணின் மக்களுக்கு கல்வி செல்வம் அதிகாரம் கிடைத்து விடக்கூடாது என்பதுதான் அவர்களின் முக்கிய கொள்கை.
சுயமரியாதை இயக்கத்தின் நீட்சியான இன்றைய திராவிட முன்னேற்ற கழகம் இந்திய மண்ணின் மக்களின் அத்தனை உயர்வுக்கும் உந்துவிசையாக செயல்பட்டு கொண்டிருப்பதை எதிரிகளும் ஏற்று கொள்வார்கள்.
ஆரியத்தின் முதல் குறி மொழி
அடுத்த குறி கல்வி
அதற்கடுத்த குறி அடித்தட்டு மக்களின் பொருளாதார மீட்சி.
கிடைக்கும் சிறிய வாய்ப்பை கூட பயன்படுத்தி தங்களின் ஆதிக்க திட்டங்களை ஒவ்வொன்றாக நிறைவேற்றுவார்கள்
நடிகன் விஜய் அதற்கு உறுதுணையாக இருப்பான்
இன்று தமிழக வெற்றி கழகத்தின் மதுரை எம் எல் ஏ முழுக்க முழுக்க ஹிந்தி மொழியில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுப்பது ஒன்றும் தற்செயலான நிகழ்வு அல்ல.
ஆர் எஸ் எஸ் இன் நிகழ்ச்சி நிரலை எவ்வளவு வேகமாக நாம் நிறைவேற்றுவோம் என்று தங்களின் முதலாளிகளுக்கு கொடுக்கும் தவேகவின் உறுதி மொழிதான் இந்த ஹிந்தி மொழி பேட்டி
அவ்வளவு தூரம் ஆர் எஸ் எஸ் இற்கு அடிமைகளாக இவர்கள் சேவகம் புரிகிறார்கள்
அதிலும் ஒரு முஸ்லீம் எம் எல் ஏ மூலம் இந்த சிக்னலை ஆர் எஸ் எஸ் தலைமை பீடத்திற்கு உணர்த்திய இவர்களின் நரித்தந்திரம் புரிகிறது.
தமிழக மக்களுக்கு திராவிடத்தால் கிடைத்த ஒவ்வொரு நலன் திட்டத்திலும் இனி கைவைப்பார்கள்
அடுத்ததாக கல்வியில் இருந்து தமிழர்கள் படிப்படியாக அப்புறப்படுத்தப்படுவார்கள்
மக்களே சினிமா நரிகளிடம் ஊர் நாட்டாமையை கொடுத்து விட்டீர்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக