![]() |
குமரிக் கிழவனார் : நான் தேர்தலில் நாதக சார்புநிலை எடுத்திருந்தேன்.
நான்கு நாதக வேட்பாளர்களை ஆதரித்து பதிவுகள் எழுதியிருக்கிறேன்.
மூன்று நாதக வேட்பாளர்களிடம் நேரடி தொடர்பில் இருந்தேன்.
இரண்டு வேட்பாளர்களின் களப்பணிக்கு பின் துணையிருந்தேன்.
கிட்டத்தட்ட அவர்களின் எல்லா தேர்தல் நடவடிக்கைகளையும் ஏதோ ஒரு விதத்தில் நெருக்கமான தொடர்பில் இருந்தேன்..........
தேர்தல் கணிப்புகளில் இதுவரையில்லாத ஒரு வகையில் நான் மிக தவறாக கணித்திருந்தேன்.
அதை நான் ஒத்துக்கொள்கிறேன்.
விசில் நோயால் இத்தனை லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்று நான் முன் உணரவில்லை.
தேர்தல் களத்திற்கு வராமல் எந்தவொரு கள செயல்பாடும் இல்லாமல் அடுத்த தெருவுக்கே இவன்தான் வேட்பாளர் என்று தெரியாமல் இருந்தும் அறுபதாயிரம் எழுபதாயிரம் வாக்குகளை தருமளவிற்கு விசில் பெருநோய் மக்களை பாதித்திருந்தது........
ஆனால் நான் முகநூலில் பொதுவில் இல்லாமல் நான் அரசியல் பேசும் முகநூல் தாண்டிய உறவுகளிடம் தொடர்ந்து சொன்ன ஒரு விஷயம்,
தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்த விஷயம் முகநூலில் மறைமுகமாக எழுதியது சில அரசியல் நண்பர்களின் பிண்ணூட்டங்களில் பதிந்தது சரியாக மிகச்சரியாக நடந்திருக்கிறது.......
டிசம்பரில் விஜய் காங்கிரஸால் வளர்க்கப்படுகிறார்.
காங்கிரஸ் விஜய்க்கு நிதி உதவி செய்கிறது.
அவர்களது டார்கெட் 2029 பொது தேர்தல். அதற்கான ஒருவன் அவர்களுக்கு தேவையென்பதாலும், விஜயை வைத்து குறைந்தபட்சம் மூன்று மாநிலங்களில் வேலை செய்ய முடியும் என்பதால் விஜயை வளர்ப்பது காங்கிரஸ் என்று அடித்து பேசியிருந்தேன்.
ராகுல் - பிரியங்காவின் ப்ரெயின் சைல்ட் தான் விஜய்.
அவருக்கான நிதி ஆதாரத்திற்கு பின் துணை பிரியங்கா வகையறா என்றும் நிறைய நண்பர்களிடம் பேசியிருக்கிறேன்.......
விஜய் இரண்டாவது விசாரணைக்கு ஒரு இரவுக்கு முன்பே டில்லி போனபோதும்,
அதற்கு அடுத்த நாள் காலை கழகம் அடைந்த பதட்டம்,
கனிமொழியின் உடனடி பிரியங்கா சந்திப்பு போன்றவற்றையும் தேடிப்பாருங்கள்.
இதை குறிப்பிட்டே நண்பர்கள் பலரிடம் நான் எனது காங்கிரஸ் வளர்க்கும் விஜய் கருத்தையே முன் வைத்திருக்கிறேன்......
தமிழ்நாட்டு கூட்டணி சமயத்தில் நடந்த சலசலப்பின் போது ப்ரவீன் மானிக்தாகூர் போன்ற ராகுலுக்கு நெருக்கமானவர்களை எடுத்த ஸ்டாண்டை குறிப்பிட்டும், விஜய் காங்கிரஸ் வளர்ப்பு என்று மீண்டும் எனது கருத்தில் உறுதியாக இருந்தேன்......
இந்தியாவின் முன்னணி தேர்தல் ஸ்ட்ராட்டஜி நிறுவன பொறுப்பில் இருப்பவர்கள் மற்றும் எனக்கு நெருக்கமான அரசியல் லாபியில் இயங்கும் அண்ணன்களும் விஜய்யின் நிதி ஆதாரத்தில் காங்கிரஸ் பங்கு உண்டு என்று உறுதிப்படுத்தியிருந்தார்கள்......
கழக கொத்தடிமைகளான தமிழக காங்கிரஸ்தான் இதை சரியாக புரிந்து கொள்ளாமல் மயக்கத்தில் இருந்து கூட்டணியை கோட்டை விட்டார்கள்.
ராகுலின் அந்த கோபம்தான் தமிழக தேர்தலையே புறக்கணித்தது.
அந்த கூட்டணி அமையாவிட்டாலும் அதன் லாபத்தை இருபக்கமும் (விஜய் & கழகம் ) அவர்கள் கணக்கிட்டிருந்தார்கள் என்பது எனது எண்ணம்.........
விஜய் பாசக பின்புலத்தோடு வருகிறார் என்று பலர் எனது பதிவுகளில் கமெண்ட் எழுதும்போது, ஆணித்தரமாக இல்லை என்றும், எனது குடும்ப வாட்ஸ்அப்புகளில் கொஞ்சம் விலாவரியாகவும் இதை பதிவு செய்திருக்கிறேன்.....
விஜய் பன்னிரண்டு சதவிகித வாக்குகளுக்கு மேல் பெற்று ஒரே ஒரு சீட் வென்றாலும் காங்கிரஸுக்கு மகிழ்ச்சிதான் என்று பலரிடம் பேசியிருக்கிறேன்......
பிரச்சார நேரத்தில் விஜய் காரைக்குடி தவிர்த்து எங்கும் காங்கிரஸ் தொகுதிகளில் கால் பதிக்கவில்லை. காங்கிரஸை அவர் சீண்டவில்லை.....
நான் காங்கிரஸ் வளர்ப்பு விஜயை அவதானித்திருந்ததால், விஜயை இன்னும் தீவிரமாக எதிர்த்தேன்.......
நான் ஒரு தமிழ்தேசியவாதி. காங்கிரஸ், பாசக ஆதரவு நபர்கள் யாராக இருந்தாலும் அவர்களை எதிர்ப்பதே எனது அறம்........
நான் மேல் சொன்ன கருத்து சுருக்கம்தான். இன்னும் சான்றுகளோடு நான் பலரிடம் பேசியிருக்கிறேன். அவர்களில் சிலரை பின்னூட்டத்தில் இணைக்கிறேன்.......
விஜய் ஆதரவை திடீரென எடுத்த தமிழ்தேசியர்கள் ஈழ ஆதரவாளர்கள் என்று தங்களைதாங்களே சொல்லிகொள்பவர்களுக்கு எனது ஆழ்ந்த வாழ்த்துகள்....

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக