புதன், 6 மே, 2026

எடப்பாடியில் தொலைக்காட்சி சின்னத்திற்கு EVM போட்டது 50000 வாக்குகள் . உதயசூரியனுக்கே வெறும் 44000 தான்! புரிகிறதா இ வி எம் தில்லுமுல்லு?

 Muralidharan Pb : ஒரு எளிமையான கேள்வி. உணர்வுபூர்வமாக சிந்திக்காமல் கொஞ்சம் பகுத்தறிவோடு சிந்திப்போம்.
காட்சி ஒன்று
தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் விஜய் நிக்கறாரு, அவர் திமுகவில் இரண்டு முறை வென்ற ஆர்.டி. சேகரை எதிர்த்து நிற்கிறார். அதிமுக கமுக்கமாக கூட்டணிக்கு விட்டுக்கொடுத்து கிட்டத்தட்ட பரிச்சயமில்லாத முகமான பாமகவின் திலகபாமாவை நிற்க வைக்கிறது என்டிஏ.
இதைவிட பெசல் அயிட்டம் தான் அடுத்த காட்சி.
காட்சி இரண்டு.
எடப்பாடியில் எதிர்கட்சித் தலைவரான பழனிச்சாமி நிற்பது எப்போதோ முடிவானது. தவெக சார்பில் நிற்க வைக்கப்பட்ட வேட்பாளரோட நிலை என்ன? அவர் தலைமறைவு. அவரது டம்மி கேண்டிடேட்டான அவரது மனைவியோட வேட்புமனுவும் நிராகரிக்கப்பட, வேறு சுயேட்சை வேட்பாளர் பிரேம்குமார் என ரசிகர் மன்ற நிர்வாகியின் பெயரை தலைவர் முன்மொழிகிறார், தவெகவின் விசில் சின்னம் கிடைக்காததால் அவருக்கு தொலைக்காட்சி பெட்டி சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்.


ஆனால் பாருங்க மற்ற இடங்களில் விசில் சின்னத்துக்கு விழுந்த வாக்குகள் ஏராளம். வேட்பாளர் பெயரே தெரியாமல் விஜய்க்காக விசில் சின்னத்தில் வாக்கு விழுகிறது என பொதுவாக புரிந்துகொண்டாலும், எடப்பாடி பழனிச்சாமியை எதிர்த்து பிரேம்குமார் வாங்கிய வாக்குகள் நமது அய்யத்தை அதிகரிக்கிறது. 
பழனிச்சாமியோட இரட்டை இலைக்கு 1.48 லட்சம், சுயேச்சையாக நின்ற பிரேம்குமார் நின்ற தொலைக்காட்சி சின்னம் பெற்றவை திமுகவைவிட அதிகம். உதயசூரியனுக்கு 44000. தொலைக்காட்சிக்கு 50000 வாக்குகள்.
சத்தியமாக சொல்லுங்க இதெல்லாம் நம்பற மாதிரியாக இருக்கு?
எத்தனை பெரிய பிராடு நடந்துள்ளது?
ஊர் பேரே தெரியாத வேட்பாளருக்கு 50000 வாக்குகளா? அதுவும் எடப்பாடி தொகுதியில்? டேய் என்னங்கடா இது?

கருத்துகள் இல்லை: