வியாழன், 7 மே, 2026

“திமுக – அதிமுக கூட்டணி… எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர்…” – பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன் பகீர் கணிப்பு

 Arivazhagan T -     news18-tamil : 
"தவெக ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுவதில் தாமதம் ஏற்படுது, அதிமுக, திமுக கூட்டணி, எடப்பாடி பழனிசாமி முதல்வராகலாம்” என மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தவெக தனிப்பெரும் கட்சியாக 107 இடங்களை (தவெக தலைவர் விஜய்யின் ஒரு தொகுதி நீங்கலாக) வைத்துள்ளது. 
இதனைத் தொடர்ந்து காங்கிரஸிடம் பேசி ஆதரவு பெற்றுள்ளது. 
இதன் மூலம், காங்கிரஸின் ஐந்து எம்.எல்.ஏ.க்கள் தவெகவுக்கு ஆதரவு கொடுத்துள்ளனர்.

இதன் மூலம் தவெகவின் பலம் 112ஆக உள்ளது.
இதனையடுத்து தவெக தலைவர் விஜய், காங்கிரஸின் ஆதரவு கடிதத்துடன் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரைச் சந்தித்து ஆட்சி அமைக்க ஆதரவு கோரினார். 
இதனைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகை தரப்பில் இருந்து பெரும்பான்மைக்கான 118 வந்தபிறகு ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பதாக சொல்லியிருப்பதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், இன்று நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் ஆசிரியர் கார்த்திகைசெல்வன் நெறியாளுகையில் நடந்த ‘சொல்லதிகாரம்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே. ராதாகிருஷ்ணன் பங்கேற்று பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்களை தெரிவித்துள்ளார்.

விவாதத்தில் பேசிய ஆர்.கே. ராதாகிருஷ்ணன், “நான் முதலில் விசிக, இடதுசாரிகள் வருவார்கள் என நினைத்தபோது, அவர்கள் தற்போது கூட்டணிக்கு செல்வதற்கு வாய்ப்பில்லை. 
இன்றைய காலை மற்றும் மாலைக்குள் நிலவரங்கள் மாறிவிட்டன. 
அடுத்ததாக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்துகள் என சொல்லவேண்டிய சூழல் வரலாம்.

முதல் கட்சியை ஆட்சி அமைக்க அழைத்தும் அவர்களால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. பெரும்பான்மையில் ஆளுநர் திருப்தி அடையவில்லை. 
அதனால், அடுத்த பெரிய கட்சியை ஆட்சி அமைக்க அழைப்புவிடுக்கலாம். 
அடுத்த பெரிய கட்சி திமுகதான் என்றால், அது ஆதரவு கடிதம் கொடுத்தால் போதும் அல்லவா?
அடுத்த கூட்டணி என்பது திமுகதான். 
ஆனால், அவர்களிடம் ஆதரவு கடிதம் பெற்றாலும், அதுவும் ஆளுநரின் ஆலோசனைக்கு உட்பட்டது. பெரும்பான்மையை நிரூபிக்க சட்டமன்றத்திற்குள்தான். வேறு எங்கும் தேவையில்லை என உச்சநீதிமன்றம் சொல்லி உள்ளது.

கருத்துகள் இல்லை: