Kalar Kasi Viswanathan : 2006 இல் இருந்து 2011 வரை திமுக ஆளுங்கட்சி கலைஞர் முதலமைச்சர்.
2011 மீண்டும் திமுக ஆட்சிக்கு வர முடியவில்லை.
கலைஞர் அவர்களுக்கும் வயது ஆகிவிட்டது.
இந்த நேரத்தில் மதுரையில், 2014 ல், அண்ணன் அழகிரியார் அவர்களை ஏதோ ஒரு பொய் காரணத்திற்கு கட்சியை விட்டு நீக்கினார்கள்.
2016 தேர்தலில் திமுக மீண்டும் தோல்வி..
2017ல் கலைஞர் மறைந்தார்.
அதன் பிறகு நடந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக வெற்றி.
2021 இல் திமுக ஆட்சி மலர்ந்தது
அண்ணன் ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சரானார்..
அதன் பிறகு இந்த ஐந்து வருட காலங்களில் சுமார் 6 லட்சம் கோடி கடன் வாங்கி,,
தமிழ்நாட்டு மக்களுக்கு திட்டத்திற்கு மேல் திட்டம் செய்தார் அண்ணன் ஸ்டாலின் அவர்கள்.
மகளிர் உரிமைத்தகையையும் இலவச பஸ் பயணமும்,
நான் முதல்வன் திட்டமும் காலை மாலை உணவு திட்டமும் கண்டிப்பாக நாம் திமுகவுக்கு நல்ல பெயர் உள்ளது.
தொழில் வளர்ச்சியில் இந்தியாவில் இரண்டாம் இடத்தில் தமிழ்நாடு உள்ளது..
இதுவும் அண்ணன் ஸ்டாலின் ஆட்சியில் நல்ல வளர்ச்சி.
ஆனால் அடிப்படையான விஷயங்கள் இரண்டு.
எல்லா தரப்பு மக்களுக்கும் கண்டிப்பாக மகளிர் உதவி கொடுத்திருக்க வேண்டும்.
பொங்கலுக்கு 3000 ரூபாய் கொடுத்தார் அது எல்லா ரேஷன் கார்டுகளுக்கும் கொடுத்திருக்க வேண்டும்.
கோடைகால சிறப்பு ரூபாய் ஐந்தாயிரம் வரவு வைத்ததை குறிப்பிட்ட மகளிர்க்கு மட்டும் கொடுக்காமல்,,
அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் தலா 2000 வீதம் போட்டு இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
கூட்டணி கட்சிகளுக்கு கொடுத்து இருக்கும் முன்னுரிமை,
கட்சிகாரர்களுக்கு கொடுக்காது மிகப்பெரிய பின்னடைவு.
மாவட்ட வாரியாக மாவட்ட செயலாளர்கள் தன்னை ஏதோ வானத்திலிருந்து குதித்தது போல்,
கீழே இருக்கும் கழக உடன்பிறப்புகளை பார்க்க மறுத்தது மிகப்பெரிய தோல்விக்கு ஒரு காரணம்.
அமைச்சர் பெருமக்கள் யாருமே பார்க்க மாட்டேன் தலைமைக்கு மட்டும் சரியாக இருப்பேன் என்று,,
சொல்லி தனக்குத்தானே தோல்வியை தேடிக் கொண்டவர்கள் அமைச்சர் பெருமக்கள்.
பாட்டிலுக்கு பத்து ரூபாய், அமைச்சர்,ஏதோ இவர் ஒருவர் மட்டுமே தலைமைக்கு நல்லவர்..
மற்றவர்கள் வேண்டாதவர்கள் என்று நினைத்து,,
இருக்கின்ற கீழ்மட்ட நிர்வாகிகளுக்கும் கழக உடன்பிறப்புகளுக்கு,
எதுவுமே செய்யாமல் விட்டது மிகப்பெரிய தோல்விக்கு ஒரு காரணம்.
மாவட்டச் செயலாளர்களும் அமைச்சர்களும் வியாபாரிகளாக மாறியது தோல்விக்கு மிகப்பெரிய காரணம்.
மதுரையில் தென் மண்டல தளபதி, என்று அழைக்கும் அண்ணன் அஞ்சாநெஞ்சர் அவர்களை உதாசீனப்படுத்தியது தோல்விக்கு ஒரு காரணம்.
இந்த நேரத்தில் அண்ணன் அஞ்சாநெஞ்சரை பற்றி ஒரு வார்த்தை சொல்லிய தீர வேண்டும்.
அஞ்சாநெஞ்சர் மதுரையில் நிர்வாகத்தில் இருந்திருந்தால்,
மதுரையில் மாநகராட்சியில் இவ்வளவு பெரிய ஊழல் நடந்திருக்காது..
தவறு செய்தவன் யாராக இருந்தாலும் அவரைப் பார்த்தவுடன்,,
பயந்து மரியாதையுடன் கட்சி பணி மட்டும் செய்வான்.
உழைக்கின்ற கட்சிக்காரர்களை உயர கொண்டு போகும் பழக்கம்,,
அண்ணன் அழகிரியாரை,, தவிர வேறு யாருக்குமே கிடையாது.
கட்சிக்காரர்கள் யாராவது தவறு செய்தால் உடனே நடவடிக்கை எடுப்பார்.
தவறு என்று யார் செய்தாலும் கூப்பிட்டு கண்டிப்பார்.
கண்டித்த பிறகு இரண்டு நாட்கள் கழித்து அந்த தொண்டனை கூப்பிட்டு புத்திமதி சொல்லி பேசுவார்.
அண்ணன் தென் மண்டல தளபதி இருக்கும்போது தவறு செய்யவே பயப்படுவார்கள்.
அதனாலதான் இப்பொழுது அளவுக்கு அதிகமாக கட்சிக்கு கெட்ட பேர் வாங்கி கொடுத்தவர்கள்..
ஊழல் செய்தவர்கள் அளவுக்கு மீறி ஆடியவர்கள், மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்தவர்கள், இப்போது வரைக்கும்,
அஞ்சா நெஞ்சே பற்றி பதிவு போடுபவர்களை பார்த்து,, உடனே தலைமைக்கு ஏட்டிக்கு மூட்டி சொல்லி,
பதிவு போட்டவர்களை கட்சிக்கு எதிரானவர்கள், என்று சொல்லி தன்னுடைய சுயநலத்தை வளர்த்துக் கொள்வார்கள்.
அண்ணன் அஞ்சாநெஞ்சரை கட்சிகுள் வரவிடாமல் பார்த்துக் கொண்டார்கள்..
கட்சிக்கு இவ்வளவு பெரிய கெட்ட பெயர் வாங்கி கொடுத்து, கழக உடன்பிறப்புகளை கவனிக்காமல் விட்டது,
இப்போது இருக்கின்ற நிர்வாகிகளுக்கு, தலைமை மீது பயம் விட்டுப் போன காரணத்தினால்,,
தான்தோன்றித்தனமாக ஆட ஆரம்பித்து விட்டார்கள், விளைவு மிகப் பெரிய தோல்வி..
இந்த ஒரு வார காலமாக சென்னை மாவட்டத்தைச் சார்ந்த பல நண்பர்கள் அதாவது வந்தேறி கழக உடன்பிறப்புகள்,,
நம் தலைவரை தோற்கடித்த சேகர் பாபுவை புகழ்ந்து பாடி கொண்டிருக்கிறார்கள்..
இன்றைக்கும் பதவி பணம் இதைவிட அஞ்சா நெஞ்சன், உடைய பாசத்துக்கு கட்டுப்பட்டவர்கள்தான்,, இந்த தென் மண்டலம்.
சென்னை யாரால், தோத்தது உலகத்திற்கே தெரியும்.
மதுரை யாரால், தோற்றது உலகத்திற்கே தெரியும்.
ஈரோடு யாரால் ,தோற்றது என்பது உலகத்திற்கே தெரியும்.
.
சேலம் யாரால்,தோத்தது உலகத்திற்கே தெரியும்.
கோயம்புத்தூர்,யாரால் தோத்தது உலகத்திற்கே தெரியும்.
எட்டு மாவட்டங்களை தவிர,,அதாவது 33 தொகுதியில் மட்டுமே விசில் கட்சி ஒரு சீட்டு கூட பெறவில்லை.
பெரிய வேதனை சென்னை 14 தொகுதி தோல்வி.
மதுரை ஒன்பது தொகுதி தோல்வி.
இதில் கவனித்து பார்த்தீர்கள் என்றால் ஒரு உண்மை தெரியும்.
நம் திமுக 8 மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட செயலாளர்கள் கடினமான உழைப்பால் தொண்டர்களை மதித்ததால் விசில் உள்ளே வர முடியவில்லை.
சென்னை இருப்பது அறிவாலயம். அண்ணன் ஸ்டாலின் இருக்கிறார்.
தம்பி உதயநிதி இருக்கிறார்.. மாப்ள சபரீசன் இருக்கிறார்.
அருமை சகோதரி கனிமொழி இருக்கிறார்.
திமுகவின் ஒட்டுமொத்த பெரிய தலைவர்கள் சென்னையில் இருக்கிறீர்கள்.
தலைமையில்,,இருப்பவர்களே தோல்வியை சந்தித்துள்ளீர்கள்.
மற்ற மாவட்டங்களில் அதாவது குறிப்பாக, சென்னை மாநகராட்சியில் தலைவரே தோத்து போயிட்டாரு,
நம்ம தோத்தா என்ன ?? மற்ற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட செயலாளர்கள் தோல்வி,
சென்னையிலே தலைமையே,,தோல்வி.
மற்ற மாவட்டங்களை, கேள்வி கேட்க முடியாத நிலை உள்ளது.
எல்லாம் தெரிந்த தலைமை நடவடிக்கை எடுக்காமல்,
ஆய்வு குழு என்ற பெயரில் ஆய்வு நடத்தி அதன் பிறகு கூட்டம் நடத்தி,
அதன் பிறகு மாவட்ட வாரியாக எல்லோரும் சந்தித்து,
அப்புறம் மாவட்டங்களை பிரித்து, மீண்டும் பழைய மாவட்டங்களே பதவிக்கு போட்டு,
அதே அரைத்து மாவை அரைத்து, உணர்வாளர்,உண்மை கருத்துகளை சொல்பவர்களை குற்றவாளி ஆக்கி,
மீண்டும் தனக்கு வேண்டியவர்களை சால்ரா,,தட்ட வைத்து மாவட்ட நிர்வாகம் மீண்டும் அதே பல்லவி அதே ராகம்.
ஒன்றை நினைவுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன்.
த வேகா. ஆளுங்கட்சி. அதிமுகவை அழித்து ஆளுங்கட்சியில் ஆட்களை இழுக்க ஆரம்பித்து விட்டார்கள்.
ஆளுங்கட்சிக்கு விழுந்த வாக்கு 35 சதவீதம்.
திமுக கூட்டணியில், இருந்து போன கூட்டணி கட்சினர்கள்,வாக்குகளை உங்கள் கணக்கில் விட்டு விடுகிறேன்.
அதிமுகவில் இருந்து சார சாரையாக போய்க்கொண்டிருக்கும் தொண்டர்கள்,,
அதிமுகவில் இருந்து போன தொண்டர்கள் சதவீதத்தை கணக்கெடுத்துக் கொள்ளுங்கள்.
இப்பொழுது புதிதாக திமுகவில் இருக்கும் மூன்றாம் கட்ட நிர்வாகிகள் மாவட்ட வாரியாக,,
அதாவது துணை அமைப்பாளர்கள்.. வார்டு பிரதிநிதிகள்.. நகர் மன்ற உறுப்பினர்கள் தா.வே.கா.பக்கம் கொஞ்சம் கொஞ்சமாய் போய்க்கொண்டிருக்கிறார்கள்.
நிர்வாகிகள் எத்தனை சதவீதம் என்பதை யூகித்து கொள்ளுங்கள்.
நாங்கள் எல்லாம் உணர்வாளர்கள்.
பதவிக்கு, பட்டத்திற்கு வரப் போகிறவர்கள் அல்ல.
விவசாயம் செய்து கொண்டு,, கழக உணர்வோடு எங்களால் முடிந்த கழகப் பணியை செய்து கொண்டிருக்கிறோம்.
இந்த இயக்கம் நன்றாக இருக்க வேண்டும் என்று
,இருக்கின்ற குறை நிறைகளை எடுத்துச் சொல்லும் சாதாரண கழக உடன்பிறப்பு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக