புகச்சோவ் புகச்சோவ் : மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி அவர்கள் கொடுத்த திருத்தத்தை ஏதோ தமிழ்நாட்டிற்கு எதிரானதை போல சித்தரித்து CPIM சண்முகம் அவர்களும், அன்புமணியும் அறிக்கையும், மேடையும் போட்டு பேசியுள்ளனர்.
இவர்கள் பரப்பியதோடு ஒரு விவசாய சங்கத்தையும் உதயநிதி அவர்கள் பெரிய குற்றத்தை செய்ததை போல அறிக்கை விட வைத்துள்ளனர்.
இதை உடனடியாக expose செய்ய வேண்டும் என்று 4 மணி நேரம் ஆய்வு செய்தேன்.
பலரிடம் பேசி குறிப்புகளை எடுத்தேன். அதில் உதயநிதி அவர்கள் சொன்ன திருத்தம் தான் சரி.
அது தான் தமிழ்நாட்டிற்கு நல்லது என்று தெரிய வந்தது. அதை விரிவாக எழுதியுள்ளேன். அவசியம் படியுங்கள் பரப்புங்கள்.
தோழர் சண்முகம் exposed
மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தில் உதயநிதி கொண்டு வந்த திருத்தத்தை உடனே ரத்து செய்து புதிய தீர்மானம் விஜய் போட வேண்டும் என்று திமுகவுக்கு எதிராக பேசி இருக்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தோழர் சண்முகம் அவர்கள்.
அதாவது, 2018 ஆம் ஆண்டே ஆற்றின் குறுக்கே கட்டுமான பணி செய்வதாக இருந்தால் தமிழ்நாடு நிலைபாட்டை கேட்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு கொடுத்துவிட்டது. அது இறுதி தீர்ப்பு. அது 15 வருடத்திற்கு செல்லுபடியாகும் போது, ஸ்டாலின் அவர்கள் யாருக்கும் தெரியாமல் 4.3.26 அன்று மேகதாது அணை குறித்து விவாதிக்க புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தை விஜய் கொண்டு வந்த தீர்மானத்தில் சேர்த்து நிறைவேற்றி விட்டார்கள். உச்சநீதிமன்ற தீர்ப்பு இருக்கும் போது எதற்காக புதிய நடுவர் மன்றம் என்று தனக்கு எல்லாம் தெரிந்ததை போல பேசி உள்ளார் தோழர் சண்முகம்.
உண்மை என்ன?
இவர் சொல்வதை போல 2018 ல் வந்த உச்சநீதிமன்ற தீர்ப்பில் காவிரி படுகை அணைகள் பற்றி மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த பட்டியலில் மேகதாது இல்லை. எனவே உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சொன்னதை போல புதிய நடுவர் மன்றம் அமைப்பதே சரியானது.
இவர் சொல்வதை போல உச்சநீதிமன்ற தீர்ப்பு இருக்கு 15 வருடத்திற்கு பேச முடியாது என்றால் எப்படி ஒன்றிய அரசு திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகாவிற்கு ஒப்புதல் கொடுத்தது? உச்சநீதிமன்ற தீர்ப்பு இருக்கும் போது, எதனால் திட்ட அறிக்கை தயார் செய்ய கர்நாடகாவிற்கு தடை இல்லை என்று 2025 ல் உச்சநீதிமன்றம் அனுமதி கொடுத்தது?
இவர் சுட்டிக்காட்டும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு கொடுத்த பின்பு தான் ஒன்றிய நீர்வளத்துறை, மேகதாது அணை கட்ட திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு அனுமதி கொடுக்கிறது. இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு போடுகிறது. அதில் 2025 ஆம் ஆண்டு மேகதாது கட்ட திட்ட அறிக்கை தயாரிக்க எந்த தடையும் இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு கொடுத்துள்ளது. இந்த தீர்ப்பை மறு சீராய்வு செய்ய மீண்டும் மனு போட்டது தமிழ்நாடு அரசு. ஆனால் உச்சநீதிமன்றம் நம்முடைய மனுவை இந்த மாதம் தான் மீண்டும் தள்ளுபடி செய்தது.
2025 லேயே உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததால் தான், மேகதாது என்பது புதிய பிரச்னை. எனவே அது குறித்து விவாதிக்கணும் என்றால் புதிய நடுவர் மன்றம் தான் அமைக்க வேண்டும் என்று திமுக அரசு கடிதம் எழுதியது. அது நமக்கு சாதகமானது. இது எதுவுமே தெரியாமல் பேசியுள்ளார் தோழர் சண்முகம்.
இவர் மனதில் ஆழமான திமுக வெறுப்பு ஊறி போயுள்ளது. அதை வன்மமாக கக்கி கொண்டே இருக்கிறார். உங்களுக்கு தெரிந்த விஷயம் தமிழ்நாடு உரிமையை நிலைநாட்டிய திமுகவிற்கு தெரியாதா? தோழர் சண்முகம் அவர்களே வன்மத்தை குறையுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக