வெள்ளி, 9 ஜனவரி, 2026

நீதிபதி ஹரிஷ் வைத்தியநாதன் சங்கர் + நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத்! இரண்டு கருங்காலிகள்

May be an image of daisGauthaman Munusamy  :   நேற்று, உன்னாவ் தலித் சிறுமி பாலியல் வன்புணர்வு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் செங்காருக்கு  2 டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் தண்டனையை நிறுத்தி, அவருக்கு பிணை வழங்கியும் உத்தரவிட்டதை பற்றி எழுதியிருந்தேன். 
பதிவின் லிங்க் கீழே 
இந்த ஆணையை வழங்கிய இரண்டு நீதிபதிகள் யார், இவர்கள் பின்னணி என்ன என்று பார்த்தால்....
நீதிபதி ஹரிஷ் வைத்தியநாதன் சங்கர்
🔸கோத்ரா கலவரம் வழக்கில் குஜராத் அரசு சார்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர்.
🔸ராமஜென்மபூமி வழக்கு வழக்கில் கோயில் கட்ட வேண்டும் என்று வாதிட்ட வழக்கறிஞர்.
🔸 மார்ச் 2025ல் "பிராமண சமூகங்கள் இந்து மறுமலர்ச்சியுடன் வரலாற்று உறவுகளைக் கொண்டுள்ளன" என்ற சர்ச்சைக்குரிய அறிக்கை:


🔸விசாரணையின்றி 5 ஆண்டுகள் சிறையில் இருந்த உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் ஆகியோருக்கு ஜாமீன் மறுத்த உத்தமர். 
நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத்
🔸முஸ்லிம்களின் சொத்துக்களை குறிவைத்து புல்டோசர் இடிப்பதற்கு எதிரான மனுக்களை எல்லாம் மொத்தமாக தள்ளுபடி செய்த புண்ணியவான்
🔸சத்குரு ஜக்கி வாசுதேவின் ஈஷா அறக்கட்டளை மோசடி செய்ததாகக் கூறப்படும் விமர்சன பதிவுகளை நீக்குமாறு சமூக ஊடக தளங்களுக்கு உத்தரவிட்டவர்.
🔸விசாரணையின்றி 5 ஆண்டுகள் சிறையில் இருந்த உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் ஆகியோருக்கு ஜாமீன் மறுத்த மற்றொரு உத்தமர்
 

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

Superimcourt head neethipathi qualified