ராதா மனோகர் : 1965 இல் நடந்த இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் தமிழகத்தில் வெடித்தது.
இதற்கு முன்பே 1939 இலும் இந்தி எதிர்ப்பு போராட்டம் தமிழகத்தில் தீவிரமாக நடந்தது.
65 இல் நடந்த போராட்டத்தை மையமாக வைத்து புதிய பராசக்தி திரைப்படம் வெளியாக உள்ளது
இது சாதாரண மக்களுக்கும் வரலாற்று ஆர்வலர்களுக்கும் பெரும் ஆர்வத்தை தூண்டி இருக்கிறது!

இது பற்றி அந்த கால இலங்கை பத்திரிகைகளில் இச்செய்திகள் எப்படி வெளியாகி இருக்கும் என்ற ஆவலின் காரணமாக தேடியதில் பல செய்திகள் கிடைத்தன
இந்த போராட்டம் இலங்கை தமிழ் மக்களிடையே பெரும் எழுச்சியையும் உணர்ச்சியையும் எழுப்பி இருந்தது.
அந்த காலக்கட்டங்களில் வியட்நாமில் பௌத்த மதத்திற்கு எதிராக பல அடக்கு முறைகள் நடந்துள்ளன.
அதற்கு இலங்கை சர்வதேச மட்டத்தில் பல கண்டன குரல்களை எழுப்பி இருந்தது
யாழ்ப்பாண மாநகராட்சி மன்றம் வியட்நாம் பௌத்தத்திற்கு குரல் கொடுப்பது போல தமிழ்நாட்டின் இந்தி திணிப்பு போராட்டத்திற்கும் ஆதரவாக இலங்கை உலக நாடுகளில் குரல் எழுப்ப வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்ற பட்டது.
இந்த போராட்டம் தொடர்பான சில செய்திகளை ஈழநாடு பத்திரிகையில் இருந்து இங்கு தந்துள்ளேன்
( பின் குறிப்பு : இந்த போராட்டத்தை அப்படியே சிங்கள மொழிக்கு எதிரான போராட்டமாக ரீமிக்ஸ் செய்வதில் செல்வா கோஷ்டி வெற்றி பெற்றது தெரிந்ததே!)





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக