மாலை மலர் : இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வந்த தலித் மாணவி, பேராசிரியர் மற்றும் சீனியர் மாணவிகளின் துன்புறுத்தலால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இமாச்சல பிரதேசம் தர்மசாலாவில் உள்ள அரசு கல்லூரியில் பயின்ற 19 வயது தலித் மாணவி, ராகிங், பாலியல் துன்புறுத்தல் மற்றும் மன உளைச்சலால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த டிசம்பர் 26ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
முன்னதாக அந்த மாணவி இறப்பதற்கு முன்பு கண்ணீர் மல்க பேசிய வீடியோ ஒன்று நேற்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவி தனது மரணத்திற்கு முன் வெளியிட்ட வீடியோவில், புவியியல் துறை உதவிப் பேராசிரியர் அசோக் குமார் என்னை தொடர்ந்து பாலியல் ரீதியாகவும் மன ரீதியாவும் துன்புறுத்தினார்.
கடந்த செப்டம்பர் 18ம் தேதி ஹர்ஷிதா, ஆக்ரிதி, கோமோலிகா ஆகிய மூன்று சீனியர் மாணவிகள் என்னை ராக்கிங் செய்து கொடூரமாக தாக்கினர்.
இதுபற்றி வெளியே சொன்னால் விளைவுகள் மோசமாக இருக்கும் என மிரட்டினர்' என்று தெரிவித்திரிருந்தார்.
மாணவியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையிலும், மாணவி பேசிய வீடியோவின் அடிப்படையிலும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
உதவிப் பேராசிரியர் அசோக் குமார் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் ஜாமீன் பெற்று வெளியில் உள்ளார்.
முதல்வர் சுக்விந்தர் சிங் சுகுவின் உத்தரவைத் தொடர்ந்து கல்வித்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
மூன்று சீனியர் மாணவிகள் மீது ராகிங் தடுப்புச் சட்டம் மற்றும் தாக்குதல் நடத்தியதற்கான வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து விசாரிக்க பல்கலைக்கழக மானியக் குழு (UGC) தானாக முன்வந்து 5 பேர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.
A heart-wrenching video of the 19-year-old student #Pallavi from Himachal Pradesh who died after being ragged and harassed has emerged, in which she speaks about repeated instances of sexual assault by a professor in her college. The teenager, a student of the Government… pic.twitter.com/QQiBEYtpzo
— Vikramjit Singh MP (@vikramsahney) January 3, 2026
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக