சனி, 10 ஜனவரி, 2026

நாம் ஏன் bathroom க்குள் மட்டும்தான் மிகவும் சுதந்திரமாக இருப்பதாக உணர்கிறோம்?

May be an image of hairdryer and text that says "corbis"
May be an image of text that says "வாழ்வியல் சிந்தனைகள்... கனடா வாழ் இலங்கைத் தமிழரின் எண்ணங்கள் ராதா மனோகர் 8838211644 என்ற எண்ணுக்கு க்கு GPAY செய்து, வாட்ஸாப்பில் முகவரியை அனுப்பவும் CHOZHARAJAN ALANGARAM; விலை ரூ 220 மேலே உள்ள QR .ஐ ஸ்கேன் செய்தும் பணம் அனுப்பலாம் SIBI Pathippagam 1E, North street, Athanur Madurai-625503 Contact-8838211644 Contact"

 ராதா மனோகர் : bathroom க்குள் நாம் மிகவும் சுதந்திரமாக இருப்பதாக உணர்கிறோம் அல்லவா?
இந்த உணர்வு வேறு எங்கு எமக்கு கிடைக்கிறது?
உங்கள் வாழ்க்கை உண்மையிலேயே உங்கள் வாழ்க்கையாகதான் இருக்கிறதா? 
இந்த கேள்வி எப்போதாவது உங்கள் மனதில் எழுந்திருக்கிறதா?
பதில்களை விட கேள்விகள்தான் உண்மையிலேயே மிகவும் சுவாரசியமானவை.
ஏனெனில் கேள்விகள் உங்கள் மனத்தை தாலாட்டாது - மயக்காது.
கேள்விகள் அறிவுக்கு உரியன.
பெரும்பாலும் உங்கள் வாழ்க்கை உங்கள் வாழ்வாக இருப்பதில்லை என்பது இருட்டில் ஒழித்து வைக்கப்பட்ட பெரிய உணமையாகும்.
இதுதான் உங்கள் வாழ்க்கை இதுதான் உங்கள் விருப்பம் அல்லது இது உங்கள் வெறுப்பு போன்ற பலவிதமான தீர்மானங்களும் உங்கள் மீது பதியப்பட்டவையே அன்றி உண்மையில் அவை உங்கள் ஒரிஜினல் தீர்மானங்களாக இருப்பது அரிதிலும் அரிதேயாகும்.



இரவல் எண்ணங்களும் இரவல் விருப்பங்களும் இரவல் வெறுப்புக்களும் உங்களை உங்களுக்கே உரிய நோக்கத்திற்கு உங்களை ஒருபோதும் அழைத்து செல்லாது.
உயர்ந்த இசை மேதையாக வரவேண்டியவர் ஒரு உப்பு சப்பில்லாத கிளார்க்காக வாழ்ந்து முடிப்பதும்,
 சிறந்த நிர்வாகியாக வரவேண்டியவர் சம்மந்தமே இல்லாத எஞ்சினியராக வெறுப்புடனே வேலைபார்த்து முடிப்பதுவும்,
 ஏறக்குறைய எல்லோருக்கும் நடப்பது ஏன்?
 உங்களின் மனம் என்பது ஒரு ice berg.
 கடலில் மிதக்கும் பனிப்பாறை போன்றது. 
வெளியில் தெரிவது மிக சிறிய  அளவுதான். 
பெரும்பகுதி கடலில் முழ்கி கண்ணுக்கு தெரியாமல் இருக்கும். 
ஆனால் அதுதான் மிகப்பெரும் பாறை. பெரும் பெரும் கப்பல்களை மூழ்கடித்துவிடும். 
ஆனானப்பட்ட titanic கப்பலே மூழ்கியது கண்ணுக்கு தெரியாத கடலுக்குள் மறைந்து இருந்த பனிப்பாறையில் தானே.

உங்களின் உள்ளே மறைந்து இருக்கும் உங்கள் unconscious mind ஐ கண்டு பிடிப்பது பெரிய சவாலான காரியமே. 
ஆனால் மிக முக்கியமாக கண்டு பிடித்தே ஆகவேண்டிய தேவை இருக்கிறது,

உளவியல் வல்லுனர்கள் தற்போது இதைப்பற்றி பெரும் ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார்கள்.
ஒருவர் எந்த வித புறக்காரணிகளும் இல்லாமல் தனிமையில் இருக்கும் பொது ஓரளவு தனது unconscious mind ஐ அறிய முடியும்.

ஏறக்குறைய எல்லோருமே பாத்ரூம் பாடகர்களாகவே இருப்பது இதன் அற்புதமான சான்றாகும்.
bathroom க்குள் நாம் மிகவும் சுதந்திரமாக இருக்கிறோம். 
அந்த சுதந்திர உணர்வுதான் எமது உண்மையான சுதந்திர உணர்வு. 
அதனால்தான் அங்கு நம்மை அறியாமலேயே எதாவது ஒரு பாட்டை முணுமுணுக்கிறோம் அல்லது ham பண்ணுகிறோம். 

இது ஒன்றும் தற்செயலாக நடைபெறும் காரியம் அல்ல. 
பூரண சுதந்திர உணர்வு வந்ததும் எமது conscious mind அனேகமாக காணமல் போய்விடுகிறது.
எமது conscious  mind பெரும்பாலும் ஒரு பயத்தின் அடிப்படையிலேயே கட்டி எழுப்பட்டதாக இருப்பது ஒரு துர்அதிஷ்டமாகும் .
எப்போது நமது conscious   mind காணமல் போகிறதோ அப்போது நமது unconscious mind சுயமாக  வெளிப்படுகிறது.

எமது unconscious mind பெரும்பாலும் வார்த்தைகளை உருப்போடுவதில்லை.
 அது உணர்வுகள் உணர்சிகளுடன் தான் உறவாடுகிறது.
நமது நுண் உணர்வுகளை நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். 
அதன் பின் அதை எமது வாழ்வின் மிக முக்கிய பங்காளியாக என்ன வேண்டும்.

இசை ஓவியம் சிற்பம் போன்ற நுண் கலைகள் எல்லாம் unconscious mind இல் இருப்பவைதான்.
 conscious mind சதா காரண காரியத்தை அலசி அலசி கணக்கு போடு வேலையை தான் பெரிதும் செய்கிறது.

சிருஷ்டியில் முக்கிய பங்கு வகிப்பது unconscious mind தானே ஒழிய சதா கணக்கு பார்க்கும் conscious mind  அல்ல. 
உங்களின் சிருஷ்டி ஆற்றலை வளர்த்துக்கொள்ள இசை நடனம் ஓவியம் சிற்பம் போன்ற ஏதாவது ஒரு கலையுடன் உங்களை ஈடுபடுத்தி கொள்ளவேண்டும். 
பிறரின் அங்கீகாரத்திற்காக செய்வது அதன் அடிப்படை நோக்கத்தை கெடுத்து விடும். 

கூடுமானவரை எந்த வித மான பிரதி பலனையும் எண்ணாது உங்களுக்கு எது விருப்பமோ அதை தினசரி ரசித்து ரசித்து  செய்து வாருங்கள்,
 மெல்ல மெல்ல உங்கள் power house எது வென்று உங்களுக்கு தெரிய வரும்.
 இந்த போர்முலாவை கண்டு பிடித்து விட்டால் அதன் பின் எடுத்த காரியம் எல்லாம் வெற்றிதான் 
வெற்றி மேல் வெற்றிதான்!

வாழ்வியல் சிந்தனைகள் நூலில் இருந்து 

கருத்துகள் இல்லை: