சனி, 10 ஜனவரி, 2026

இந்தியா கூடணியில் இருந்து திமுக விலக முடிவா?

May be an image of text

 ஜெயராமன்  :  இந்தியா கூடணியில் இருந்து திமுக விலக முடிவா? 
என்ன காரணமாக இருக்கும்? 
காங்கிரஸை பலவீனப்படுத்தும் அந்த சிலீப்பர் ஷெல்கள் யார்? 
1. திருச்சி வேலுச்சாமி
2. மாணிக் தாக்கூர்
3. பிரவீன் சக்ரவர்த்தி
4. கார்த்தி சிதம்பரம்
5. கே. எஸ். அழகிரி
6. ஜோதிமணி
7. சசிகாந்த் செந்தில். 
கீழே இருக்கும் இவர்கள் எல்லாம் காங்கிரஸ் சட்டசபை உறுப்பினர்கள்/அவர்கள் வென்ற தொகுதியுடன்:
1. K. Selvaperunthagai – Sriperumbudur (CLP Leader)
2. Durai Chandrasekar – Ponneri
3. J.M.H. Aassan Maulaana – Velachery


4. A.M. Munirathinam – Sholinghur
5. R. Ganesh – Udhagamandalam
6. Tharahai Cuthbert – Vilavancode
7. S. Rajesh Kumar – Killiyoor
8. J.G. Prince – Colachel
9. S. Rajkumar – Mayiladuthurai
10. A.M.S.G. Ashokan – Sivakasi
11. R.M. Karumanickam – Thiruvadanai
12. M.R. Radhakrishnan – Virudhachalam
13. Ruby R. Manoharan – Nanguneri
14. M. Ramasamy – Aruppukottai 
15. C. Jayakumar – Palani
16. S. Palani – Vedasandur
17. T. Ramachandran – Aranthangi 
இப்போது நடைபெறப் போவதும் சட்டசபை தேர்தல் தான். 
இவர்களில் யாராவது ஒருத்தர் குரல் எழுப்பியதுண்டா? 
ஏன் வெட்டி முண்டங்களும்,
வீணாய் போன தெண்டங்களும் கிடந்து குதிக்கின்றன? 
எல்லாம் அந்த நாக்பூரான்களுக்கே வெளிச்சம். 
திமுக இதுகாலமும் அமைதி காத்தது. 
இனி எல்லாமே எல்லை மீறிப்போய் விட்டது. 
காங்கிரஸின் வீழ்ச்சியை பார்ப்போமா? 
டெல்லியின் முதல்வர் ஷீலா தீட்சித் (காங்) டெல்லி வரலாற்றில் அசைக்க முடியாத முடிசூடா மன்னராக பதவியை வகித்தார்.
15 ஆண்டுகள் 25 நாட்கள் ஷீலா தீட்சித் முதலமைச்சராகப் பணியாற்றினார். 
டிசம்பர் 3, 1998 முதல் டிசம்பர் 28, 2013 வரை. 
டெல்லியில் இந்திய தேசிய காங்கிரஸின் தொடர்ச்சியான மூன்று தேர்தல் வெற்றிகளுக்கு அவர் வழி வகுத்தார், 
இப்போ டெல்லியில் காங் அங்கே இருக்கா? 
1960 முதல் 2014 வரை மஹாராஷ்ட்ராவில் ஆட்சில் இருந்த காங் இப்போ அங்கே இருக்கா? 
1950 முதல் 1988 வரை உத்திர பிரதேஷத்தில் ஆட்சியில் இருந்த காங் இப்போ அங்கே இருக்கா?
இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். 
ராகுல்காந்தி அவர்களின் உழைப்பு விழலுக்கு இறைத்த நீர் என எல்லோரும் பதிவிடுகிறார்கள். 
சரி. ஏற்றுக் கொள்வோம். 
* கபில்சிபல் ஏன் போனார்? 
* குலாம் நபி ஆஸாத் ஏன் போனார்? 
* சசி தரூர் ஏன் போகவில்லை? 
* சூனா சாமியின் பினாமி வி பு ஆதரவாளர் திருச்சி வேலுச்சாமி ஏன் போகவில்லை? 
சிலீப்பர் ஷெல் எல்லாரும் போயிடுங்க என ராகுல் சொன்னாரே!
யாராவது வெளியேறினார்களா? 
இல்லை அவர்தான் யாரையாவது வெளியேற்றினாரா? 
ஆந்திராவில் சுப்ரீம் ஸ்டார் சிரஞ்சீவியின் கட்சியை இணைத்து போட்டியிட்டீர்களே!
என்ன கிழிச்சீங்க? 
இந்தியாவையே ஆண்ட கட்சி, ஒரு கவுன்சிலர் தேர்தலில் கூட நிக்காதவன், அவன் கிட்ட போய் துணை முதல்வர் கேட்கலாமா? 
இருப்பதை விட்டு விட்டு,
பறப்பதற்கு ஆசைப்படலாமா? 
யானை தன் தலையில் தானே மண்ணை அள்ளி போட்ட கதை ஆகி விடாதா? 
பூனை கண்ணை மூடினால், உலகம் இருட்டு என்று சொல்வது போல் உள்ளது. 
கடைசி கடைசியாக என் கணிப்பு:
1. இனி ஒன்றிய தொந்தரவு குறையும். 
2. காங் இல்லா இந்தியாவுக்கு முட்டுக்கட்டை போட்ட தமிழ் நாட்டில், இனி அது சாத்தியம். 
3. இந்தியா கூட்டணியின் முதுகெலும்பு ஸ்டாலின் இல்லாததால் அது செயல் இழக்கும். 
4. பார்லிமெண்டில் திமுக செயல் வீர எம்பிக்கள் இனி காங்கிரஸுக்கு முட்டுக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லாததால், அங்கு அமைதி நிலவும். 
5. ஸ்டாலினுக்கே இந்த நிலைன்னா, நமக்கு?  என்று இதுவரை ஒதுங்கி இருந்த தேஜஸ்வி, மம்தா, அகிலேஷ், சிபுசோரன், கேஜ்ரிவால் போன்றோர் சுத்தமாக நகர்ந்து விடுவார்கள். 
6. சிவகுமார், ரேவந்த் போன்றோர் தனிக்கட்சி கண்டாலும் ஆச்சரியம் இல்லை. 
7. இனி தமிழ் நாட்டுக்கு நிதி கிடைக்க வாய்ப்பு. 
8. திமுக ஒருக்காலும் பிஜேபியுடன் போகாது. போகாது. போகவே போகாது. 
9. பிஜேபி நினைத்தது நடக்கிறது
10. அதிமுக டிடிவி கையில் போகும்
11. ஜண்டா, அணில், பியூஸ், எல்லோரும் கனிமொழிக்கு வாழ்த்து சொல்வது கூட்டணிக்கான சமிக்சை அல்ல
12. எடப்பாடிக்கு பேதி போவதற்காக. 
13. எது எப்படியோ, திமுக: 200 உறுதி. 
14. சென்ஸார் சிக்கல். 
15. சிபிஐ சம்மன். 
16. சென்னைய விட்டுட்டு டெல்லிக்கு வா மாமு.
17. பொங்கல் மறு நாள்  இருக்க, முதல் நாளில் ஆஜர் ஏன்? ஏன்? ஏன்?
சம்திங் ஃபிஸிடா புரோ…..
சூதானம்……
பிளாஸ்ட் பிளாஸ்டெல்லாம் வேலைக்காவாது. 
நண்பா, நண்பீஸ் எல்லாம் துண்ட காணோம்,
துணிய காணோம்னு ஓடிடுவாங்க புரோ. 
ஸ்கெட்ச் உனக்கில்லடா வெண்ணை,
எடுபுடிக்கு மச்சான். 
கான்பிடெண்ட் மட்டுமே மிஞ்சும்.
--பகிர்வு

கருத்துகள் இல்லை: