வியாழன், 8 ஜனவரி, 2026

திமுக தொண்டர்கள் கூட்டணிக்கு எதிராய் பதிவுகளுக்கு போட வேண்டாம்.தலைவர்களிடம் பேசுங்கள்.

 Krithika Tharan :  அமைதியா இருந்தாலே போதும்
உண்மையை சொன்னால் இணையத்தில் எனக்கு காங்கிரசை விட தி.மு.க நட்புகள் அதிகம். நேரிலுமே அவர்களே அதிகம். கட்சி ரீதியாகவே காங்கிரஸ் நட்புகள் இப்போ அதிகமாகி வருகின்றனர். 
அதுவும் கர்னாடகத்தில் அதிகம்.
தேர்தலில் பல தொகுதிகளில் வேலை பார்த்த நேரடி அனுபவம் உண்டு. இருபக்க சிக்கல்களையும் பார்த்துள்ளேன். கட்சியே இல்லாமல் சிவிக் சொசைட்டி மூலமாகவும், சக்தி அபியான் வழியாக மொழி தெரியாத மாநிலங்களிலும் வேலை செய்துள்ளேன்.
அதைத் தவிர பேட்டிகள், மீடியா நட்புகள் மூலமாய் கள நிலவரத்தை தலைவர்களிடம் எப்படியாவது கொண்டு சேர்த்து விடுவேன். 
இதற்காகவே என் வாட்ஸ் ஆப் செய்திகளை பார்த்து பதில் அளிப்பவர்கள் பலர் உண்டு. கனெக்ட் இங்கு முக்கியம். யாரிடம் சொன்னால் செய்தி போகும் என்பதும் அதன் எதிர்வினையை மீடியாவில் கவனிக்கலாம். அதுக்கெல்லாம் நமக்கு நல்ல பெயர் கிடைக்காது. நல்லது நடக்கணும் என செய்வது. இதன் மூலம் பல கட்சி நட்புகள் உண்டு.
இப்போ தி.மு.க, காங்கிரஸ் சிக்கல்களை இந்த அனுபவம் மூலமாய் கவனிக்கிறேன்.


தி.மு.க வினர் காங்கிரசை கூட்டணி என்றில்லை; ஒரு கட்சியினராய் கூட மதிப்பதில்லை. வேலை செய்ய போனாலும் வேலை செய்ய தெரியாது என அவமானப்படுத்தலும் உண்டு. அடுத்து எங்களிடம் பணம் குறைவு. கட்சி மூலம் சம்பாதித்த பலர் கட்சியை கை கழுவி பி.ஜே.பி.க்கு போய் விட்டனர் அல்லது கட்சிக்கு செலவு செய்வதில்லை. உண்மையில் ஏதோ செலவு செய்து பிழைக்கிறோம். அரசியலைப் பொறுத்தவரை ஆட்சியில் இல்லாவிடில் பணம் கிடையாது. பணம் இல்லாவிட்டால் கட்சி நடத்த முடியாது. இதற்கு தொகுதியில் கூட தி.மு.க வினர் இடம் தருவதில்லை. எதிர் கட்சியை விட கூட்டணி கட்சியை வளர விடாமல் பார்த்துக்கொள்வது நிஜம். அப்பொழுது காங்கிரசுக்கு ஒரு வாய்ப்பு—செலவை விஜய் பார்த்துப்பார்.
நம்மளுக்கு வளர ஒரு வாய்ப்பு, மரியாதையும் கிடைக்கும். எத்தனை நாள்தான் ஒடுங்கி போவது? இன்றைக்கும் பல மாநிலங்களில்—ஏன் தெலுங்கானா, கர்னாடகாவில் கூட—ஆளுவது நாம்தான் என்னும் பொழுது காங்கிரசில் இருக்கும் யாருக்கும் ரோஷம் வருவது இயல்புதான். இதன் பின் சில தி.மு.க வினருக்கு இருக்கும் ஒருவித திமிர். நாங்கதான் சூப்பர் என்பது. அதாவது அடுத்த கட்சியினரை மதியாத தன்மை பரவலாக தமிழகமெங்கும் காணக்கிடைக்கும். அதைதான் மக்கள் தோற்கடிக்க விரும்புகிறார்கள் என்பதை அவர்கள் ஒப்புக்கொள்ளவே மாட்டார்கள்.
அடுத்து காங்கிரசில் காலம் காலமாய் இருக்கும் அ.தி.மு.க சார்பு தன்மை. இன்னும் பலருக்கு அது நீடிக்கிறது.
வெயிட். முழுக்க வாசிக்கவும்.
அடுத்த பக்கம் வருகிறேன். மயிலாடுதுறை, கிருஷ்ணகிரி மட்டுமல்ல. வார் ரூம் பணிகள் மூலம் வேறு தொகுதிகள். முக்கியமாய் நாம் கோவை, தர்மபுரி, நெல்லை, விருதுநகரில் கடினப்பட்டுதான் வென்றோம். எளிதாக இல்லை. முக்கியமாய் நெல்லைக்கு ராகுல் காந்தி வந்தது எல்லாம் இதன் காரணமாய்தான். மிக மிக கடினமாய் உழைத்துதான் விருதுநகர், நெல்லையில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அதற்கு தி.மு.க வினர் உழைப்பு மிக அதிகம். நான் பார்த்த எல்லா இடங்களிலும். தி.மு.க வினர் அசுர உழைப்பு உழைத்தனர்.
கிருஷ்ணகிரியில் தனிப்பட்ட முறையில் அவர்களிடம் தேர்தல் கற்றுக்கொண்டேன். அடுக்கு அடுக்காய் செம்ம சிஸ்டம் வைத்துள்ளார்கள். காங்கிரஸ் கேரண்டி கார்ட் எங்கெல்லாம் வரவில்லை என மேப் செய்தார்கள். இதில் காங்கிரசில் இருப்பதை விட தி.மு.க வினர் வேகம் அதிகம். அதை ஒப்பிடவே முடியாது. ஒன்றியம், மாவட்டம் மட்டுமல்ல; பூத்தில் கூட ஒரு வெறியுடன் வேலை பார்த்தார்கள்—கண்ணால் பார்த்த விஷயம்.
தேர்தல் வேட்பாளர் தேர்வில் கசப்பு. பிடித்தமின்மை இருந்தாலும் மூன்றாம் நாள் தலைமைக்கு கட்டுப்பட்டு உடனே வேலை செய்வார்கள். உழைப்புக்கு ஒரு திமிர் இருக்கும்.
அதைத் தவிர எக்கச்சக்க செலவு. தேர்தல் செலவுகள் பூத்தில் ஆரம்பித்து, ஒன்றியம், மாவட்டம் என பல மட்டங்கள் உண்டு. யாரும் எங்கும் காசு தருவது குறைவு. வேட்பாளர் செலவு செய்யணும். அது வரை அவரவர் பார்க்கணும். பல இடங்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் செலவு செய்யவில்லை. தி.மு.க வினர்தான் கைக்காசு போட்டு வேலை செய்தனர். அதுவும் அவர்களுக்கு கோபம். நமக்கு செய்யலாம்; காங்கிரசுக்கு ஏன் செய்யணும்? அடுத்து லோக்கலாய் சிக்கல்கள். பல தொகுதி தி.மு.க பிரபலங்களுக்கு சீட் கிடைக்காமல் போவது கூட்டணியினால். அவர்களுக்கு கூட்டணி இல்லாவிடினும் செலவு செய்து ஜெயிப்போம்; உழைக்கவும் ரெடி என்பதே எண்ணம்.
அதனால் அவர்கள் இணையத்தில் உள்ளவர்களை உக்கிரமாய் தூண்டி விடுவதும் நடக்கிறது. நானே தேர்தலுக்கு வந்து விட்டால் என்ன செய்வது என இப்பொழுதே தாக்க ஆரம்பித்துள்ளதை சென்ஸ் செய்யாமல் இல்லை. இதெல்லாம் வெளியில் இருப்பவர்கள் புரிவது கடினம்.
இதில் சங்கிகள் ஒருப்பக்கம் எனில், சிறுபான்மை விஜய் ஆதரவாளர்கள் எப்படியாவது அங்கு போகணும் என நிற்பதும் தெளிவு. தி.மு.க வெறுப்பு சில காங்கிரஸ்காரர்களுக்கும். காங்கிரஸ் வெறுப்பு அவர்களுக்கும் உண்டு. இதுவும் சங்கிகள், விஜய் டீமால் ஊதி பெருக்கி அதனாலும் சிக்கல்கள்.
இப்படி சிக்கல்கள் கூட்டணியில் மட்டுமா எனில், அவரவர் கட்சியிலுமே உண்டு. உண்மையில் கட்சிக்குள்தான் பதவி சண்டை அதிகமாக நடக்கும். வெளியில் தெரியாது.
என்ன செய்யணும்.
ஒன்றும் வேண்டாம்.
இருப்பக்கமும் கையை, வாயை கருத்துக்கு வாடகைக்கு விடாமல் கூட்டணியில் அழுத்தம் கொடுத்து பேசினால் போதும். ஒரு லிமிட்டில் இதை நிறுத்தாவிடில் பீகார், மகாராஷ்ட்ரா கதைதான்—நமக்கும்.
பின்பு பத்து எம்.பி.க்கள் நமக்கு கிடைக்காது. தி.மு.க திரும்ப வர விடாமல் பி.ஜே.பி செய்யும் அரசியல் மிகப் பயங்கரமாய் இருக்கும்; காங்கிரசை காணாமல் அடிக்கும் வேலையும் செய்யும்.
அவ்ளோதான். கொஞ்ச நாள் அமைதி காக்கவும்.
கமெண்டுகள் கூட்டணிக்கு எதிராய் பதிவுகளுக்கு போட வேண்டாம்.தலைவர்களிடம் பேசுங்கள். பொதுவில் நம் உள்ளாடைகளை தோய்க்கமால் இருப்பதே உத்தமம். 
என் மேல் கோபம் வந்தாலும் சரி. நல்லதுக்கு சொல்வது என் கடமை.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

டேய் படிப்பறிவில்லாத முண்டம்
தமிழ் நாட்டில் இருந்து தமிழ் பேசும் பிற மொழியை சேர்ந்த வேசி குலத்தவர்கள்தான் திராவிடர்கள் . உதாரணம் கருணாநிதி, அண்ணா , பெரியார் , வீரமணி
திராவிடன் வேற தமிழன் வேற