மாலை மலர் : 'சிவப்பு ரோஜாக்கள்', 'கிழக்கு சீமையிலே', 'முதல் மரியாதை', 'வேதம் புதிது' என தனது படைப்புகளால் இந்திய சினிமாவையே கவனிக்க வைத்த இயக்குனர் பாரதிராஜா, தனது மகன் மனோஜ் மறைவுக்கு பிறகு (கடந்த மார்ச் மாதம்) மனமுடைந்து போனார்.
உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பாரதிராஜாவுக்கு வீசிங் போன்ற சுவாச பிரச்சனைகளும் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த வாரம் பாரதிராஜா அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பாரதிராஜா உடல்நிலை சீராக உள்ளதாகவும், மருத்துவ குழுவினரால் அவர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இயக்குநர் பாரதிராஜாவுக்கு கடுமையான நுரையீரல் தொற்று இருப்பதால் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக