சனி, 26 டிசம்பர், 2020

தமிழ்நாட்டின் கல்வி விவசாயம் மருத்துவம் நீர்மேலாண்மை மொழி மாநில உரிமை சாலை வசதிகள்

மு.ரா.விவேக் : சுதந்திர இந்தியாவில் ஒரு பிராந்திய கட்சி மாநிலத்தை கைப்பற்றியது என்று சொன்னால் அது தமிழ்நாட்டின் தி.மு.கழகம் தான், அண்ணாவிற்கு பிறகு, கலைஞர் 1969 ஆம் ஆண்டு முதன்முதலில் தமிழகத்தின் முதல்வரானார் அதாவது இந்தியாவிற்கு சுகந்திரம் கிடைத்து 22 ஆவது ஆண்டில்-அப்பொழுது தான் இந்திய ஒன்றியத்தை சீரமைக்க அகில இந்திய காங்கிரஸ் முதல் ஐந்தாண்டு திட்டம் ,இரெண்டாவது ஐந்தாண்டு திட்டம் என்று அறிவித்து இந்திய நாடே உட்கட்டமைப்பை செய்து கொண்டிருந்தநேரம்!
மீண்டும் சொல்கிறேன் 1969 Feb 10 கலைஞர் தமிழ்நாட்டின் முதல்வராக பதவி ஏற்கிறார்-திரும்பிய பக்கமெல்லாம் சவால்கள்!
கல்வி
விவசாயம்
மருத்துவம்
நீர்மேலாண்மை
மொழி
மாநில உரிமை
சாலை வசதிகள்
உட்கட்டமைப்புகள்
பகுத்தறிவு பிரச்சாரம்
சமூகநீதி கொள்கைகள்
இடஒதுக்கீடு உரிமைகள்
கலை   இலக்கியம்     சுயாட்சி முழக்கம்
போன்றவற்றை எல்லாம் சீர் செய்ய வேண்டும்,முதல்வராய் எல்லா மக்களுக்குமான திட்டங்கள் செயல்படுத்தியாகணும்,கட்சியையும் நெறிப்படுத்தி வழி நடத்தணும் என்ற மிகப்பெரிய நெருக்கடியில் 45 வயதில் கலைஞர் முதல்வராக பொறுப்பேற்று களத்தில் நிற்கிறார்!
இந்த இடத்தில் அய்யா காமராசரை சொல்லியாக வேண்டும். சுகந்திரம் கிடைத்த பின்பு மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்னர், மதராஸ் state முதல்வர்களாக காங்கிரஸ் கட்சியின் ராஜாஜி,காமராசர்,பின்னர் பக்தவச்சலம் ஆகியோர் தொடர்ச்சியாக 20 வருடம் காங்கிரஸ் ஆட்சிதான் தமிழகத்தில் ,அந்த காலகட்டத்தில் தான் இந்தியாவின் மேற்படி சொன்ன ஐந்தாண்டு திட்டத்தின் மூலம் கிடைத்த தொகையில்,திட்டங்களில் காங்கிரஸ் மூலம் காமராஜர் பள்ளிகள்,அணைகள் போன்றவற்றை செயல்படுத்தினார் ,தமிழகத்தில் அது சாதனை என்றாலும் காங்கிரஸ் கட்சியில் மிகப்பெரிய தலைவர்களாக இருந்த காமராசரால் எளிதில் செய்ய நேர்ந்தது!
நிற்க!
பிராந்திய கட்சியான திமுக அதன் தலைவர் கலைஞர் -இந்தியாவையே ஆண்டுகொண்டிருந்த காங்கிரஸ் சை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டிய சூழல், தமிழ்நாட்டையும் விட்டு கொடுக்க முடியாது -ஒன்றிய அரசின் எல்லா அதிகார செயல்களையும் கைகட்டி வேடிக்கை பார்க்க முடியாத பின்னணி உடைய கலைஞர் எதிர்த்து நிற்க ஆரம்பித்தார் அவரின் ஓய்வு நாள் வரை அந்த போர்குணம் ஓயவில்லை!
பீடிகை போல தோன்றலாம் !
அண்ணா குழந்தையை பெற்று தமிழ்நாடு என்று பெயர் சூட்டி சென்று விட்டார் அதற்கு முன் கழகத்தையும் ,இப்பொழுது இருப்பது போல் ஊடகம் ,தகவல் தொழில்நுட்பம் அறிவியல் வளர்ச்சி இல்லாத நேரம் எல்லாவற்றிற்கும் கூட்டம் போட்டு தான் பேசியாக வேண்டும் -பக்கம் பக்கமாய் எழுதி தான் கொண்டுபோய் கருத்துக்களை சேர்க்க வேண்டும் எல்லாவற்றையும் 24 மணிநேரமும் செய்தார் !
ஒரு பக்கம் கட்சியே உடைகிறது,இன்னொரு பக்கம் கழகத்தியே முடக்க ஒன்றிய அரசு முனைப்பு காட்டுகிறது மிசாவில் கழகம் சூறையாட படுகிறது சொந்தம் பந்தம் தொண்டர்கள் எல்லாம் அவருக்கு உடன்பிறப்புக்கள் தான் ...தமிழ்நாடெங்கும் சிறை கொட்டடி முழுதும் கருப்பு சிவப்பு ரத்தங்கள் தான் --"அனைத்திந்திய" என்று சேர்த்து மத்திய அரசின் காலடியில் சரணடைந்து கட்சியை காப்பாத்துறார் ஒரு தலைவர் ..கலைஞரோ தான் முதல்வராக இருந்தோம் என்ற ப்ரோடோகால் எல்லாம் மீறி அந்த நெருக்கடி காலத்தில் அண்ணா சாலைகளில் அலைந்து நேரடியாக கடிதம் விநியோகிக்கிறார் !
பெருந்தலைவர் காமராசர் , கலைஞரை பாராட்டுகிறார் -உச்சிமுகர்ந்து நெகிழ்கிறார்!
பின்னாளில் பெரியார் கலைஞருக்கு சிலையே வைக்க முன்வருகிறார்!
அணு அணுவாக தமிழகத்தை நெருக்கடிகளுக்கு மத்தியில் கட்டமைத்து -உருவாக்குகிறார் எந்நிலையிலும் சமூகநீதி ,பகுத்தறிவில் பாதையில் அவர் தடுமாறவும் இல்லை தன்னை சமாதானப்படுத்திக் கொள்ளவும் இல்லை-மிசா காலத்தில் கலைஞர் தலை அசைத்து இருந்தால் அவரே முதல்வராகவும் நீடித்து இருப்பர் ஆட்சியும் கலைந்திருக்காது!
இந்திய அளவில் அணைத்து துறைகளிலும் தமிழகம் முதல் மூன்று இடங்களில் தன் உழைப்பால்/தொலைநோக்கு திட்டங்களால் நிறுத்துகிறார்,1990 களில் பின்தங்கிய நிலையில் இருந்த தமிழகம் முன்னேறிய மாநிலமாக பரிமாற தொடங்கிய காலம் !
1982 இல் அதிமுகவில் சேர்ந்து 1991இல் முதல்வராகிறார் ஜெயலலிதா/ அதாவது ஒரு கட்சியில் உறுப்பினராக இணைந்து 9ஆவது ஆண்டில் தமிழக முதல்வராக ஆனா கொடுமையான அதிசயம் நடக்கிறது-இடையில் 5 வருடம் ராஜ்யசபா உறுப்பினராக டெல்லியில் எதற்கெடுத்தாலும் ஆணாதிக்க சூழலில் பெண் போராடினார் என்றெல்லாம் புரட்சி பேச்சுக்கள் !? அப்படி கட்சிக்காக அல்லது மக்களுக்காக அவர் சிறை சென்ற வரலாறு ஏதும் உண்டா ? MGR ரத்தினக்கம்பளம் போட்டு கொடுத்தார் அவர் முதல்வராக கோலோச்சிய 10 வருடத்தில் சர்வ சொகுசுடன் தமிழகத்தில் கூட்டம் நடத்தி பேசினார்-அவர் முதல் சண்ட செய்தது MGR அவர்களின் மனைவி ஜானகி அவர்களுடன்,பின்னர் அடுத்த போராட்டம் சட்டமன்றத்தில் ஒரு நாடக ஒத்திகை ,தேர்தல் ஜனநாயகத்தில் பணம் அரசியலாகி போனது அந்த இடத்தில் தான் ,பணம் வந்ததும் ,நிர்வாகிகள் கிடைத்தனர்,எல்லாம் கிடைத்தது -9 வருஷத்தில் முதல்வரும் ஆனார்!
இப்பொழுது விளம்பரங்களில் எல்லாம் "ஆறு முறை முதல்வர்" "ஆறு முறை முதல்வர்" என்று அடிமைகள் சொல்கிறார்கள் எப்படி என்று கேட்டால் சந்தி சிரித்து விடும்!(இரெண்டு முறை சிறை யால் ஆட்சி போனது வரலாறு)
இந்த இடத்தில தான் எல்லாம் வாரிசு வாரிசு என்று கரித்து கொட்டும் காலத்தில் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் அரசியல் வாழ்க்கையையும் பேச வேண்டிய சூழல் வருகிறது .தன் 16 வயதில் கழக இளைஞர் மன்றம் நண்பர்களுடன் சேர்ந்து துவங்குகிறார் நினைத்திருந்தால் தன் அப்பா மூலம் அண்ணாவை சென்று எளிதில் சந்தித்து இருக்கலாம் ஆனால் இவர் தனியாக அண்ணாவை சந்தித்து அழைப்பு விடுகிறார்,பேராசிரியரை வைத்து தன் மன்றத்தை துவங்குகிறார் 16ஆவது வயதில்!
இன்று 67 வயதாகிறது ,கட்சியில் 50 வருட பயணம் இன்றும் பயணித்துக்கொண்டே தான் இருக்கிறார்,சட்டமன்ற மன்ற உறுப்பினராக அவர் உள்ளே நுழையும் பொழுது அவரின் வயது 36, பிறகு மேயராக இருந்தார் ஒரே ஒரு முறை அமைச்சராக இருந்துள்ளார் -கலைஞரின் மகன் ,5 முறை முதல்வராக இருந்தவரின் மகன் என்ற காரணத்தால் கலைஞர் அவருக்கு கட்சியிலோ ஆட்சியிலோ பொறுப்புக்களை அள்ளி கொடுத்துவிடவில்லை!
தளபதி நினைத்திருந்தால் எப்பொழுதோ முதல்வராக ஆகி இருக்க முடியும்,கலைஞரும் செய்து இருப்பார் -ஆனால் அப்படி நடக்க கலைஞராலும் முடியாது-தளபதியும் நினைத்திருக்க மாட்டார்! அவ்வளவு ஏன் கட்சியில் சேர்ந்து 9 வருடத்தில் முதல்வராகி பின்நாளில் jaya மறைந்த பொழுது மோடிக்கு கொஞ்சம் இசைந்து கொடுத்திருந்தால், இந்நேரம் அவர் முதல்வர் -சில MLA க்களை தூக்கி இருந்தால் என்னவெல்லாம் நடந்திருக்கும்....தளபதி, பெரியார்-அண்ணா வழிவந்த கலைஞர் பேராசிரியரின் வார்ப்பு/வளர்ப்பு!
பிரதமர் பதவி கேள்விக்கு தன்னை தாழ்த்திக்கொண்டு என்னுயரம் எனக்கு தெரியும் என்று பதில் அளித்த கலைஞரின் ரத்த வாரிசு!
மக்களை சந்தித்து தேர்தல் மூலமாக தான் எந்த பொறுப்பானாலும் தனக்கு கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாய் இருப்பதால் தான் இன்று தலைவராக கழகத்திலும் மக்கள் மன்றத்திலும் உயர்த்து நிற்கிறார்!
இதோ மக்கள் சந்திப்ப்பை மீண்டும் தொடங்கிவிட்டார் ,எடப்பாடியை வைத்து ஆட்சி செய்வதாக எண்ணிக்கொண்டு இருக்கிறது காவி கூட்டம்-காவிகளையும் அடிமைகளையும் ஒரு சேர இயங்கிக்கொண்டு இருக்கிறார் திராவிட இயக்கத்தில் செங்கோல் மு.க.ஸ்டாலின் !
50 ஆண்டுகால கட்சி அரசியல் !
40 ஆண்டுகால ஆட்சி/அரசு பொறுப்பு அனுபவம் !
கொண்ட ஒரே அரசியல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தான்!
கலைஞர் சந்திக்காத ஒரு விஷயம், பல முனை தாக்குதலில் கழகத்தையும் -தமிழகத்தையும் காத்து நிற்கும் அரண் என்று சொன்னால் மிகையாகாது.வாரிசு பிரச்சாரத்தை புறந்தள்ளிவிட்டு தங்கையை ஒரு முனையிலும் மகனை இன்னொரு முனையிலும் கழக முன்னணியினரை தமிழகம் முழுதும் தான் சந்தித்த மக்கள் காண /மக்களுடன் பேச களம் இறக்கி விட்டுள்ளார் ...தன் தோழமைகளுடன் ஒரு பக்கம்-ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் அடிமைகள் காவிகள் சாதிய குழுக்கள் ,நடிகர்கள்,ஊடகங்கள் எல்லாவற்றையும் எதிர்த்து நிற்கும் கேடயமாய் நிற்கும் மு.க.ஸ்டாலின் என்ற மனிதன் தான் இன்றைக்கு நமக்கிருக்கும் ஒரு ஆறுதல்/நம்பிக்கை வாய்ப்பு!
அண்ணா கலைஞர் கட்டமைத்து உருவாக்கிய தமிழ்நாட்டை காக்கும் மிகப்பெரிய பொறுப்பில் நிற்கிறார் தளபதி ஸ்டாலின் அதற்காக தகுதியும் அனுபவமும் அவருக்கே இருக்கிறது!
2021 மே மாதத்திற்கு தமிழ்நாடு காத்து இருக்கிறது-ஒரு சுகந்திர காற்றை சுவாசிக்க !
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான்...........விடியல் பிறக்கும் நாள்!
-மு.ரா.விவேக்


கருத்துகள் இல்லை: