செவ்வாய், 22 டிசம்பர், 2020

எம்ஜியார் உள்ளும் புறமும் -3 ! கவிஞர் கண்ணதாசன் .. மலையாளிகள் பற்றி .

கவிஞர்  கண்ணதாசன் : தமிழ்நாட்டில் மலையாளிகள் வாழக்கூடாது என்றோ  ,  

அவர்கள் கேரளாவுக்கு ஓடி விடவேண்டும் என்றோ கருணாநிதி எப்போதாவது சொன்னாரா?     இல்லை திமுக பேச்சாளர்களாவது அப்படி பேசினார்களா  ?  இல்லை நானாவது  எழுதினேனா?     இந்தியாவில் இரண்டு கேரளா ராஜ்ஜியங்கள் இருக்க முடியாது என்றுதான் கருணாநிதி சொன்னார்.    அந்த கருத்தில் இந்தியாவில் உள்ள எவருக்கும் அபிப்பிராய பேதம் இருக்க முடியாது .    தேசிய ஒருமைப்பாடு என்பது எல்லோரும் ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து எல்லோரும் ஒற்றமையாக இருப்பதுதானே தவிர    சிலர் மீது மட்டும் குதிரை ஏற இடம் கொடுப்பதல்ல.     

தமிழ்நாட்டில் ஒரு மலையாளி முதலமைச்சராக வரலாமா?     வரலாம் தாராளாமாக வரலாம்    அரசியல் சட்டம் அதை அங்கீகரிக்கிறது.   ஆனால் தார்மீக அடிப்படையில் கேரளாவில் ஒரு தமிழன் முதலமைச்சராக வரமுடியுமானால்,    குஜராத்தில் ஒரு மராட்டியர் வரமுடியுமானால்,  வங்காளத்தில் ஒரு ஆசாமி வரமுடியுமானால் ,தமிழ்நாட்டில் வேறு ஒரு மாநிலத்துக்காரர் வரலாம்.    லட்சக்கணக்கான தமிழர்கள் வாழும் பம்பாயில் மராட்டிய  அசெம்பிளிக்கு இரு தமிழர்கள் தேர்ந்தெடுக்க படுகிறார்கள் .   அவர்களில் யாரவது மந்திரசபையில் சேர்த்து கொள்ளப்பட்டார்களா?   இல்லை . அவர்களில் ஒருவர் முதலமைச்சராக வருவதை அனுமதிப்பார்களா?

அங்கே தேசிய ஒருமை பாட்டில் பலத்த நம்பிக்கை உள்ள அரசு,

சிவசேனையின் கட்டளைப்படி நூறுக்கு என்பது உத்தியோகம் மராட்டியருக்கு என்று சட்டம் செய்து விட்டது.

 பல தமிழர்கள் இனி தமிழ்நாடு திரும்ப வேண்டி இருக்கும்.

லட்சக்கணக்கில் தமிழர்கள் வாழும் வங்காளத்தில் ஒரு தமிழர் எம் எல் ஏ கூட வருவதற்கு வாய்ப்பில்லை .

பிற எந்த மாநிலமும் தமிழர்களை சட்ட மன்ற உறுப்பினர்களாக ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை.

எல்லா மாநிலங்களிலும் தேசிய ஒற்றுமையில் நம்பிக்கை உள்ளவர்கள்தான் ஆட்சி நடத்துகிறார்க்ள.

அதைத்தான் கருணாநிதி குறிப்பிட்டார்.

இங்கே மலையாளிகள் சகல உரிமைகளோடும் வாழ்வதை அவர் தடுக்க முயலவில்லை. 

பிற மாநிலங்களில் காங்கிரஸ்காரர்களுக்கு அந்த எண்ணம் இருக்கும்போது கருணாநிதிக்கு அந்த எண்ணம் ஏற்பட்டதில் வியப்பு இல்லை.

தமிழகத்தில் உள்ள மலையாளிகள் தமிழர்களோடு இரண்டற கலந்துவிட்டவர்கள்.

எந்த காலத்திலும் இங்கே தமிழர் மலையாளி தகராறு வந்ததும் இல்லை ,வரப்போவதும் இல்லை,  வரவும் கூடாது. 

துரதிஷ்டவசமாக எம்ஜியார்  என்ற இரண்டும் கெட்டான் தோன்றி இனப்பகைக்கு வித்திடுகிறது.

 கேரளாவுக்கு போனால் நான் மலையாளி என்றும் தமிழ்நாட்டில் நான் தமிழன் என்றும் இரட்டை வேஷம் போட்டு எரிச்சலை உண்டாக்கி விட்டவர் எம்ஜியார் .

அவர்மீது ஏற்பட்ட கோபத்தை மொத்த மலையாளிகள் மீது திருப்ப கருணாநிதி முயல மாட்டார் . முயலவும் கூடாது.

அண்ணாவை விட நுணுக்கமான சிந்தனைகள் கருணா நிதிக்கே அதிகம்.

அவருக்கு கேரளாவில் நண்பர்கள் அதிகம்.

என்னுடைய நண்பர்களில் பெரும்பாலோர்  மலையாளிகள்தான்.

 அவர் சொன்ன இரண்டு கேரளா பற்றிய கருத்தில் எனக்கும்  உடன்பாடு உண்டு

 தமிழ்நாட்டின் முதலமைச்சராகவோ அமைச்சராகவோ பிற மாநிலத்தவர் வரக்கூடாது என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன்.

காரணம் எல்லா மாநிலங்களிலும் அதுதான் நிலைமை.

அரசியல் சட்டபூர்வமாக தமிழும் ஒரு தேசிய இனமாக இலங்கையிலும் மலேசியாவிலும் அங்கீகரிக்க பட்டிருக்கிறது  

ஆனாலும் அந்த நாடுகளில் பிரதம மந்திரியாக அந்த நாட்டவர் வர முடியுமே என்று தடையே விதிக்க பட்டிருக்கிறது 

 இந்தியாவுக்கு இது ஒன்றும் புதிய வாதமும் அல்ல . இன விரோதமும் அல்ல.

 சர்வதேசிய கண்ணோடிகளுக்கு கூட உள்ளுக்குள் இந்த கருத்து இருக்கிறது 

முடியுமானால் எந்த மாநிலத்திலும் பிற மாநிலத்தவர் முதலமைச்சராக வரமுடியும் என்று அரசியல் சட்டத்தை மாற்றுங்கள்.

அப்படி மாற்றினால் பிற மாநிலங்களுக்கும் நம் மாநிலத்திற்கும் சம வாய்ப்பு கிடைக்கும்.

இந்த வாதம் எம்ஜியாரை மனத்தில் வைத்து கொண்டு எழுந்ததல்ல.

தமிழ் சமுதாயத்தின் சுயமரியாதையை மனதில் கொண்டு எழுந்ததாகும்.

ஆனால் எந்த காரணம் கொண்டும் அரசியலுக்கு சம்பந்தமில்லாத அப்பாவிகளான சிறுபான்மையோர் மீது விரோதம் பார்க்கப்படுமானால் நாங்கள் அதை கடுமையாக எதிர்ப்போம்.

பதவிப்பிரச்சனையில் நமது சகோதரத்துவம் பாதிக்க படாது.

முதலமைச்சர் பதவியை மட்டும் வேறொருவர் வகிக்க முடியாது  என்பதே நம்முடைய வாதம் 

அதே சமயம் தமிழகத்தில் உள்ள மலையாள சகோதரர்களுக்கு ஒரு வார்த்தை.

நீங்கள் எந்த கட்சியை வேண்டுமானாலும் ஆதரியுங்கள்.  ஆனால் எம்ஜியாரை மட்டும் ஆதரிக்காதீர்கள்.

அது பார்ப்பவர் கண்களுக்கு இனப்பகையாக தெரியும் .

இன்னொன்று எம்ஜியார் ஒரு மண்குதிரை.

அவரை நம்பி பின்தொடர்ச்சி அவதி படாதீர்கள்.     ..( தொடரும்)

 .1 ஆம் 2 ஆம் பகுதிகள் லிங்க்

3 கருத்துகள்:

Rathinam Padmanaban சொன்னது…

உள்ளும் புறமும் புத்தகத்தை யாரவது ப்ளாக்கில் எழுதி இருக்கிறார்களா? என தேடினேன். தங்கள் பக்கம் வந்தது நன்றி.

Radha manohar சொன்னது…

thanks நன்றி

சரவணமணிகண்டன் ப சொன்னது…

நிறைந்த வாழ்த்துக்கள் உளமார்ந்த வாழ்த்துக்கள்