வெள்ளி, 25 டிசம்பர், 2020

பாமகவினர் மீண்டும் வன்முறையை கையில் ...... வெற்றி அளிக்குமா?

  

Vijayaragavan Rajasekaran : · பாமகவினர் செந்தில்குமார் தயாநிதி மாறன் போன்றோரை தாக்கியதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. அந்த கட்சியை விமர்சித்து பேசியதால் வன்முறை என்பது வெறும் மேல்பூச்சு. அவர்களின் வன்முறை வெறி செயலுக்கு பல காரணங்கள் இருக்கிறது. அவர்களால் தங்கள் எதிர்பார்ப்புக்கேற்ப இன்னமும் கூட்டணியை உறுதி செய்ய முடியவில்லை. காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் திமுகவிற்கு ஆதரவாக இருப்பதால் பாமகவின் வாக்கு வங்கியில் ஓட்டை விழுந்துள்ளது. ஒருவேளை கனலரசனுக்கு திமுக சார்பில் சீட் கிடைத்து போட்டியிட்டு வெற்றி பெற்று தங்கள் கட்சி பூஜ்யமானால் அது பாமகவுக்கு மிகப் பெரிய பின்னடைவு.

திமுகவின் வெற்றி தமிழகம் முழுவதும் உறுதி செய்யப்பட்டாலும் வட மாவட்டங்களில் திமுகவின் பெரு வெற்றி பாமகவின் அழிவுக்குத்தான் கட்டியம் கூறும். பாமகவால் அரசியல் ரீதியாக முன்பு போல தலை நிமிர்ந்து களமாட முடியாது.
ஆகவே திமுகவின் வெற்றியை தடுக்க திமுகவினரின் கவனத்தை திசை திருப்பி மோதலை /கலவரத்தை உருவாக்கி அந்த கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதுதான் அவர்களின் சதித்திட்டம் அந்த சதி வலையில் திமுகவினர் விழாமல் இருக்க வேண்டும். உணர்ச்சி வசப்படுவதை தவிர்க்க வேண்டும். .
அந்த சில்லுண்டி வேலைகளை எல்லாம் புறந்தள்ளி திமுக தனது இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும். திமுகவின் பெரு வெற்றிதான் அவர்களுக்கு சரியான பதிலடி. வெற்றிக்கு பிறகு அவர்கள் மீதுள்ள வழக்குகளை தூசு தட்டலாம்.
சாதி கட்சிகளுக்கு அடையாளமே வன்முறைதான். இனி தமிழகத்தில் எந்த சாதி கட்சியும் தலையெடுக்க விடாமல் செய்ய வேண்டும். அதற்கு பொறுமை மிக அவசியம்.வீரியத்தை விட காரியம்தான் மிக பெரிது.

கருத்துகள் இல்லை: