வியாழன், 2 ஜூலை, 2020

நாளை அதிமுகவினரோ பஜகவினரோ பாதிக்கப்பட்டாலும் .. திமுக நிச்சயம் குரல் கொடுக்கும்..

Kathir RS : கேள்வி: பெனிக்ஸ் நாம் தமிழர் ஆதரவாளராமே? கலைஞர் ஸ்டாலின் உதயநிதி ஆகியோரை கிண்டல் செய்து நிறைய பதிவு
போட்டிருக்கிறாராமே .முன்பே தெரிந்திருந்தால் திமுக தலையிட்டிருக்காதோ..? ஹாஹாஹா!
பதில்: பிறந்த குழந்தை மீதும் இறந்த மனிதன் மீதும் சாதி மதத்தை மட்டுமல்ல அரசியலைத் திணிப்பதையும்  எதிர்ப்பவர்கள் பகுத்தறிவாளர்கள்.
தந்தை மகன் இருவரும் கொல்லப்பட்டதை எதிர்கட்சித் தலைவர் என்ற முறையில் முதன் முதலாக பதிவு செய்து நியாயம் கேட்டவர் மு.க.ஸ்டாலின் தான்.அப்போது இந்த பிரச்சனை அரசியல் மட்டத்தில் கூட விவாதப் பொருளாகவில்லை.இரண்டு நாட்கள் கழித்துதான் சுசித்ராவின் ஆங்கில வீடியோ வந்தது. அதைக்கூட அதிகம் தங்கள் டைம் லைனில் பதிவிட்டவர்கள் பரப்பியவர்கள் திமுகவினரே. அந்த வீடியோ பகிரப்பட்ட போது #சுச்சிலீக்ஸ் என கிண்டல் செய்தவர்களை எதிர்த்து சண்டை செய்தவர்களும் திமுகவினரே. என்ன எல்லாத்துக்கும் திமுக என்று சொல்கிறேன் என்று நீங்கள் கருதலாம்..நான் சொல்வது முற்றிலும் உண்மை.
தமிழ்நாட்டில் திமுக ஆதரவாளர்களும் அதிமுக ஆதரவாளர்களும் கிட்டத்தட்ட சரிபாதி..தமிழக மக்கள் தொகையில் 90 சதவீதத்தினர் அவர்களே ஆவர்.மீதமுள்ளவர்கள்தான் இந்த சங்கிகளும், யானைக்குட்டிகளும்,ஆமைகுஞ்சுகளும்.
ஆளுங்கட்சியினர் இதை பேச வில்லை..சங்கிகள் இதற்கு மாறாக எதிராக
பேசினர்.

மீதமுள்ளவர்களில் சிலர் மட்டுமே பேசினார்கள்..முக்கியமாக இடது சாரிகள்..சில பெரியாரியவாதிகள்..ஆனால் மொத்தமாக அது 4-5% ஐத் தாண்டாது...
ஆக இந்த பிரச்சனையை ஆரம்பம் முதலே பேசியவர்களும் சுசித்ராவின் வீடியோவை அதிக அளவில் பகிர்ந்தவர்களும் திமுவினர்தான் என்று நான் சொல்வதில் உள்ள உண்மை இப்போது புரிந்திருக்கும் என நம்புகிறேன்.
உங்கள் கேள்வியின் முக்கிய பகுதிக்கு வருகிறேன்.
ஆம் பெனிக்ஸ் திமுகவை எதிர்த்து பதிவிட்ட நாம் தமிழர் தம்பிதான்.அது முன்பே அரசியல் மட்டத்தில் யாருக்கும் தெரியாதுதான்.
திமுக இன்று ஆட்சியில் இல்லை..ஆனால் இந்திய அரசியலமைப்பின் படி ஒரு அதிகாரப் பூர்வ எதிர்கட்சி.
எதிர்கட்சி என்றால் திமுக கட்சி மட்டும் தான் என்று நீங்கள் நினைத்தால் அது உங்கள் அறியாமை.
ஆளுங்கட்சியின் கூட்டணியைத் தவிர மீதமிருக்கும் அத்தனை கட்சிகளுக்கும் திமுகதான் அரசியல் ரீதியான தலைமை.
அது நாம் தமிழருக்கும் சேர்த்துதான் என்று நான் சொல்லத் தேவையில்லை.
ஆக அமைப்பு ரீதியாக நாதகவின் சட்டமன்ற அரசியல் பிரதிநிதி மு.க.ஸ்டாலின் தான்.
இதை கேட்க கடினமாக இருந்தால் அவர்களுக்கு ஒரு வழியிருக்கிறது..ஓடிப்போய் பாஜக கூட்டணியில் அஃபிசியலாக சேர்ந்து கொள்ளலாம். ஒன்றும் பெரிய வித்தியாசமில்லை..இத்தனை நாள் மறைமுகமாக செயல் பட்டவர்கள் நேரடியாக செயல் படப் போகிறார்கள் அவ்வளவுதானே!
ஃபெனிக்ஸ் எவராக இருந்தாலும்..அவர் ஆளும் அரசின் அதிகாரத்தால் உயிர்துறந்த இந்த மண்ணின் மைந்தன்.அவருக்கு குரல் கொடுக்க வேண்டியது ஒவ்வொரு உணர்வுள்ள தமிழனின் கடமை.ஒரு தலைவனின் கடமையும்.
அதைத்தான் திமுக தலைவரும் திமுக இணைய செயற்பாட்டாளர்களும் செய்திருக்கின்றனர்.நாளை ஆளுங்கட்சியைச் சேர்ந்தவரோ பாஜகவைச் சேர்ந்தவரோ பாதிக்கப்பட்டாலும் திமுக நிச்சயம் குரல் கொடுக்கும்.அதுதான் திமுக.

கருத்துகள் இல்லை: