வெள்ளி, 3 ஜூலை, 2020

பெனிக்ஸ்... மோடி அரசின் அதிகாரம் தான் தன்னை கொன்றது என்பதை அறியாமலே சென்று விட்டார்

Devi Somasundaram : பெனிக்ஸ்கள் .
சாத்தான்குளம் அதிகார படுகொலை.உள்ள போவதற்கு முன்
சாத்தான்குளத்தில் என்ன நடந்தது என்று ஒரு ஷார்ட் நோட்.
ஆய்வாளர் ரவுண்ட்ஸ் வந்து இருக்கார்.விதிகளை மீறி நேரம் தாண்டி கூட்டமாய் நின்றவர்களை ஏன் நிக்கறிங்கன்னு கேட்டு இருக்கார்.அவர்கள் சம்பளம் வாங்க நிக்கறோம்னு சொல்லவும் நேரத்தோட வாங்கிட்டு போக வேண்டியது தானே என்று கடுமையாய் திட்டிவிட்டு போய் இருக்கார்.பெனிக்ஸின் அப்பா ஜெயராஜ் போலிஸ்ன்னா கொம்பா, சம்பளம் வாங்க தான நிக்றோம்னு சொல்ல வேண்டியது தான என்று சத்தம் போட அதை அங்க இருந்த போலிஸ் ரைட்டர் காதில் வாங்கி ஆய்வாளர்கிட்ட போட்டுத்தரார். போலிஸுக்கு தன் அதிகாரம் பறிபோகும் பதட்டம் . ஜெயராஜை அரெஸ்ட் செய்து கொண்டு போக.தன் தகப்பனை ஸ்டேஷன் வாசலில் ஜீப்பில் இருந்து தள்ளுவதைக் கண்டு பெனிக்ஸ் போலிஸை எதிர்த்து இருக்கார்.போலிஸ் இருவரையும் பிடித்துக் கட்டி வைத்து தனக்கு துணையா சிலரைச் சேர்த்துக் கொண்டு அடித்து அது கொலையில் முடிந்து இருக்கின்றது. அதன் பிறகு நடந்தது அறிவோம்.
இதில் ஜெயராஜ் ஒரு அதிமுக ஆதரவாளர்.பெனிக்ஸ் ஒரு நாதக ஆதரவாளர் (அவர் நாதக வ ஆதரிக்கவில்லை என்று சில பதிவுகள் பார்த்தேன்.அவர் நாதக வ விமர்சிச்சு எந்த பதிவும் போடவில்லை.நாம் தமிழரின் சாதியவாத,இன வாத கருத்துகளைஅவர் விமர்சிக்கவோ,எதிர்க்கவோ இல்லை.மாறாக அதே வரலாறு அறியாத தப்பும் தவறுமான தமிழில் பதிவுகள் ) .

பெனிக்ஸ் மாஸ்டர் ஆப் சோஷியல் ஒர்க் படித்த இளைஞர். அவரது அரசியல் புரிதலில் அத்தனை தெளிவின்மை.ஒரு 32 வயது நபர் விடலைகள் மாதிரி தனி நபர் விமர்சன அரசியல் பேசி இருக்கார் .
நாம திமுக, அதிமுக என்ற கட்சிகளிடம் இருந்து கூட விலகலாம்.ஆனால்
சமத்துவம்,சமூகநீதி என்ற கொள்கைகளில் இருந்து விலகக்கூடாது.நமக்கு சமத்துவத்தில் நம்பிக்கை இல்லை என்று வைத்துக் கொள்வோம்.அப்பொழுது நாமும் சமத்துவமற்ற அமைப்பில் தான் இருப்போம்.அந்த சமத்துவமற்ற தன்மை நம்மையும் பாதிக்கும் என்பதை பெனிக்ஸ் உணர்த்தி இருக்கின்றார் .
சற்று நாட்கள் முன் வட சென்னை பசங்க போலிஸால் கை,கால் உடைக்கப்பட்டு போட்டோ வெளி வந்த போது அதை அதிகம் ஷேர் செய்ததும் நக்கலா கமண்ட் போட்டதும் தம்பிகளும் சங்கிகளும் தான்.இனி பேசினா பாத்ரூம்ல வழுக்கி விழுவன்னு நக்கல் அடித்தபோது அவர்களுகான அதிகார ஆசை தான் அப்படிப் பேசவைத்தது.
தனக்கு கீழஒருத்தர் இருக்கனும் என்ற அதிகார ஆசை தான் யார்க்கு கீழாவது தான் என்பதை மறக்க வைத்து விடுகிறது. அன்று பாத் ரூமில் வழுக்கி விழவைத்த அதே அதிகாரம் தான் லத்தியை பின்புறத்தில் நுழத்தது . போலிஸ் டிரைனிங்ல தேர்ட் டிகிரி டிரிட்மெண்ட் பயிற்சியாகவே சொல்லித் தரப்படுகிறது.
அதை குற்றங்களுக்கு எதிரான செயல்திட்டமா கொண்டாட முடிந்தது.யாருக்கு எதிரா தேர்ட் டிகிரி செயல்படுத்தப்படுகின்றது. எல்லாக் குற்றவாளிக்கு எதிரா செயல்படுதா?.கொலைக்குற்றம் சாட்டப்பட்ட ஜெயேந்திரர்க்கு எதிரா தேர்ட் டிகிரி ஏன் செயல்படுத்தபடவில்லை.
அப்போ அரசு அதிகாரத்திற்கு லிமிட்ஸ் இருக்கு.எனும் போது அது தவறான அதிகாரம் ஆகி விடுகின்றது . எஸ் வி சேகரை அரெஸ்டே செய்யவில்லை.ஆனால் நெல்லை கண்ணன் அரெஸ்ட் செய்யப்பட்டார்.நெல்லை கண்ணனுக்கு எதிரா தேர்ட் டிகிரி யூஸ் செய்யவில்லை.அப்புவுக்கு தேர்ட் டிகிரி நடத்தப்பட்டது.
ஆக அதிகாரம் சாதி படி நிலைப் பார்த்து தான் செயல் பட முடிகின்றது எனும் போது சமத்துவ மறுப்பு எத்தனை ஆபத்தானது என்பதை அறியனும் .
பெனிக்ஸ் எந்த அதிகாரத்தை விரும்பினாரோ அதே அதிகாரத்தால் தான் கொல்லப் பட்டார்.பெனிக்ஸோட அரசியல் தெளிவின்மையை அவர் பதிவுகள் உணர்த்துகிறது .
ஈழ இன அழிப்புக்கு வருத்தபடுகிறார்.மோடியை ரசிப்பதாக எழுதுகிறார். தூத்துகுடியில் கொல்லப்பட்ட 17 பேரும் மத்திய அரசு அதிகாரத்தால் கொல்லபட வில்லைன்னு நம்புகிற அளவு தான் அவர் அரசியல் தெளிவு இருக்கின்றது .
குஜராத்ல செய்யப்பட்ட இன அழிப்பை ஏற்றுக் கொள்ள முடிந்தவர் ஈழ போருக்கு வருந்துவது எத்தனை தெளிவற்ற அல்லது சார்பு நிலைக் கொண்ட அரசியல் என்பதை உணரனும்.
பெனிக்ஸ் இந்த சமூகத்தின் அடையாளம்.32 வயது நிரம்பியவருக்கு இருக்கு அரசியல் போதாமையின் அடையாளம் .இவர்கள் ஓட்டு போட்டு ஆட்சியாளரை தேர்ந்தெடுக்க இருக்கும் அபாயம் சிறியதில்லை
27,28 வயதுக்கு தனக்கு ஒரு மனைவியை அல்லது கணவனை தேர்ந்தெடுக்கக் கூட தெரியாது அம்மா,அப்பா பெரியவர்கள் தான் முடிவு செய்யனும் என்று கூறும் நாம் 18 வயதில் ஓட்டு போட்டு இந்த நாட்டின் எதிர்காலத்தை தலைவரை தேர்ந்தெடுக்க தகுதியானவர்கள்னு எப்படி நம்புகிறோம்.
சமத்துவ எதிர்ப்பு என்பது எல்லா புறமும்கூறானகத்தி.சாதி அதிகாரம் நமக்கு மேல் இருந்தும் அழுத்தும் என்பது தான் பெனிக்ஸ் விஷயத்தில் நாம் அறிய வேண்டியது . தலித்துகளை நாடார், வன்னியர் அழுத்தினால் , கவுண்டர் ,தேவர் இவர்கள் இருவரையும் மேலிருந்து அழுத்தலாம்.. முதலியார் செட்டியார் பிள்ளை அடுத்த நிலையில் இவர்கள் அனைவரையும் அழுத்தலாம்.அவர்களையும் சேர்த்து பாப்பனியம் அழுத்தும்.
ஆக அதிகாரம் பரவலாக்கமற்ற சமூகம் விடுதலை அடையாது .
இதில் பிரண்ட்ஸ் ஆப் போலிஸ் அமைப்பு குறித்து பார்க்கலாம்..
கூகுள்ள போய் இந்து யுவ வாஹினின்னு தேடிப் பாருங்க. 2002 யோகி தலைமைல ஆரம்பிக்கபட்ட அமைப்பு . அவர்கள் இப்படி தான் ப்ரண்ட்ஸ் ஆப் போலிஸ்ன்னு சொல்லிகிட்டு அதிகார மையத்தை கைப்பற்றி அவர்கள் செய்த இஸ்லாமிய,தலித்,பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிர்ப்பு வராம பாத்துக் கொண்டு ஓ பி சி , தலித், இஸ்லாமிய ஓட்டுகளை பிரித்து யோகி மூலம் இந்துத்துவா ஆட்சிய பிடித்தது .
மாயாவதிய பவருக்கு கொண்டு வந்து , அவரை டம்மி முதல்வரா வைத்து தன் அதிகாரத்தின் மூலம் உபி யில் அதிகார ஆட்டம் போட்டு அந்த கெட்ட பெயரை மாயாவதி அரசு பக்கம் திருப்பி விட்டு அந்த கேப்பில் ஆட்சியை பிடித்தனர்.18 வருடம் நிதானமா திட்டம் போட்டு வேலை செய்தனர் .
அதே பாணியை தான் தமிழகத்தில் தனக்கு ஒத்து வராத ஜெயாவை தீர்த்து கட்டி, தன் சொல் பேச்சு கேட்கும் பொம்மை முதல்வ்ராய் எடப்பாடியை கொண்டு வந்து . ப்ரண்ட்ஸ் ஆப் போலிஸ் போன்ற அமைப்புகள் மூலம் அதிகார துஷ்பிரயோகங்கள் செய்து அதை எடப்பாடி மீது திருப்பி விட்டு மக்களை பிரித்து திமுகவுக்கு எதிரான ஓட்டு வங்கியை கைப்பற்ற திட்டம் போட்டு செயல் படுகிறார்கள் .
ஆனா உபில நடந்தது அவர்களால் தமிழ்நாட்ல செய்ய முடியவில்லை. காரணம் அதிமுக, திமுக என்ற இரு பெரும் கட்சி தாண்டி மக்களின் பெரும் பான்மை ஓட்டு பிரிவதற்கான வாய்ப்பை அவர்களால் உருவாக்க முடியவில்லை.
அவர்களிடம் இருப்பது இரண்டே ஆப்ஷன் தான்.ஒன்றுஅதிமுக வை தன் ஆதரவு ஆட்கள் மூலம் கைப்ப்பற்றி அதிகாரத்தை தக்க வைத்தல்.
இரண்டு அப்படி அதிகாரத்தை தக்க வைக்க இயலாத போது மாநில அரசின் அதிகாரம் அனைத்தையும் உடைத்து மத்திய அரசு கைப்பற்றி அதன் மூலம் எந்த அரசு வந்தாலும் மத்திய அரசை தாண்டி செயல் பட முடியாத வாறு கட்டுப்படுத்துவது .
திமுகவே வந்தாலும் நிதி ஆதாரம், கல்வி ஆதாரம், பாதுகாப்பு ஆதாரம் என்று எந்த அதிகாரமும் இல்லாத ஒரு நிர்வாக அரசை நடத்த மட்டுமே அனுமதிக்க திட்டம் போட்டே , ஜீ எஸ் டி மூலம் மாநில வருவாயை மத்திய அரசு கைகளுக்கு கொண்டு சென்றது, கூட்டுறவு வங்கிகளை தேசியமயமாக்கியது,
ஸி ஐ ஏ அதிகாரத்தை அனைத்து மாநிலத்திற்கும் எக்ஸ்டண்ட் செய்தது என்று மாநில அரசின் அனைத்து அதிகாரத்தையும் தன்னிடம் எடுத்து கொண்டது மோடி அரசு .
சரி .இது அனைத்து மாநிலத்தை யும் தானே பாதிக்கும் அவர்கள் எதிர்க்கவில்லையே என்று கேட்கலாம்...
இரண்டு விஷயம்.
ஒன்று நாம் தான் கட்டமைப்பை வலுவாக உருவாக்கியுள்ளோம். நிதி அமைப்போ,நிர்வாக அமைப்போ, கல்வி,மொழி, வேலைவாய்ப்பு, பொருளாதார வாய்ப்பில் தமிழ் நாடு, கேரளம், போன்ற மாநிலமே முதல் இடத்தில் உள்ளோம் .இழப்பு நமக்கு தான் அதிகம். மற்றவர்க்கு லாபம் தானே தவிர இழப்பில்லை. அவர்கள் எதிர்க்க தேவை இல்லை .
இரண்டு..எந்த ஆதிக்கத்தையும் முதலில் எதிர்ப்பது நாம் தான்.மற்றவர்கள் புரிந்து கொள்ள காலம் ஆகின்றது .நாம் 60 வருடம் முன்பு பேசிய ஹிந்தி எதிர்ப்பு, மாநில சுயாட்சியே இப்ப தான் அவர்களுக்கு புரிகின்றது .
இந்த மோடி மீது தான் இன உணர்வாளர் பெனிக்ஸ் மதிப்பு அதிகமானது என்பது தான் அவர் அரசியல் புரிதல் ...அந்த மோடி அரசின் அதிகாரம் தான் பெனிக்ஸை கொன்றது என்பதை அறியாமலே சென்றுவிட்டார் பாவம்

3 கருத்துகள்:

Unknown சொன்னது…

திருட்டு தெலுங்கு திராவிட மூதேவிகளா,

ஆய்வாளர் தெலுங்கு திராவிடன், ஸ்ரீதரை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்பதர்க்காக எது ஏதோ எழுதி மேட்டரை குழபதிலேயே குறியாக இருக்கிறீர்கள். என்ன சொல்ல வருகிறீர்கள். சாதியை வைத்து குழப்ப நினைத்தாய். இப்பொழுது கட்சியை வைத்து குழப்ப நினைக்கிறாய்.

பெயரில்லா சொன்னது…

சமஸ்கிருத சங்கி முட்டாளே ..கொன்னதே நீங்க தான ..அந்த ஸ்ரீ தர் உங்க கூட்டாளின்ற உண்மை வெளில வந்துட்டது பதறுதா

Durai Ilamurugu சொன்னது…

பெனிக்சின் அரசியல் புரிதல் எப்படி இருந்தாலும் அவர் கொல்லப்பட்ட விதம் சட்ட விதிகளுக்கு முரணானது.