வெள்ளி, 3 ஜூலை, 2020

சாத்தான் குளம் அழிக்கப்பட்ட சில சி சி டி வி காட்சிகள் மீட்பு ..காவலர் முத்துராஜ் தேடப்படும் நபராக அறிவிப்பு


தினதந்தி : தூத்துக்குடி, சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கை மீறி, தங்களது செல்போன் கடையை திறந்து வைத்து இருந்ததாக கூறி, சாத்தான்குளம் போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்று தாக்கி உள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த 2 பேரும் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மதுரை ஐகோர்ட் உத்தரவின் படி, இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. தந்தை மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிபிசிஐடி நடவடிக்கையை தொடர்ந்து காவலர் முத்துராஜ் தப்பிச்சென்று தலைமறைவாக உள்ளார். இதையடுத்து, அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், காவலர் முத்துராஜ்ஜை தேடப்படும் நபராக சிபிசிஐடி அறிவித்துள்ளது. மேலும், இந்த சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக யாரும் அப்ரூவர் ஆகவில்லை என்று சிபிசிஐடி ஐஜி சங்கர் அறிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை: